Posts

Showing posts from June, 2025

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  செபத்தால் நற்பண்புகள் உருவாகின்றன. செபம் நிதானத்தைக் தருகிறது. ஜெபம் கோபத்தை அடக்குகிறது. ஜெபம் பெருமை மற்றும் பொறாமை உணர்வுகளைத் தடுக்கிறது. செபம் பரிசுத்த ஆவியை ஆன்மாவிற்குள் ஈர்த்து, மனிதனை சொர்க்கத்திற்கு உயர்த்துகிறது. சிரியாவின் புனித எஃப்ரெம் Virtues are formed by prayer. Prayer preserves temperance. Prayer suppresses anger. Prayer prevents emotions of pride and envy. Prayer draws into the soul the Holy Spirit, and raises man to Heaven. St. Ephrem of Syria

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நமது அண்டை வீட்டாரின் மீதுள்ள அக்கறையே தெய்வீக தயவை பெறுவதற்கான வழி. - புனித ஜான் கிறிசோஸ்டம் That which especially gains for us the divine favor is the care of our neighbour"  - St. John Chrysostom இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இயேசுவின் மதுர திருஇருதயமே

Image
  இயேசுவின் மதுர திருஇருதயமே சினேக அக்கினி பயமே  தினமும் நீர் எங்கள் சினேகமாய் இருப்பீர் தேவ தயாநிதியே  மனிதரை மோட்ச கதியினில் சேர்க்க மனுமகனாய் பிறந்தீர்   மகிமை பிரதாப கடவுளானாலும்  மாபழி மேல் சுமந்தீர் கள்ளனைப் போல கசடர்கள் கடுஞ்சிலுவையில் அறைந்தார் கருணையால் உந்தன் இருதய அன்பின் கரை எவர் கண்டறிவார்  உன்திரு இரத்தம் ஒருதுளி முதலாய் உனக்கென வைத்தீரோ  ஓய்விலா அன்பால் உம்மையே மறந்தீர் ஓ திவ்ய இருதயமே  என்றும் எம்மோடு இருந்தருள் ஈந்தே இனிய நல்லுண வானீர்  இவையெல்லாம் பாரா ஈனர்கள் நாங்கள் இகழ்ந்துமைப் பழித்தோமே நன்மைமேல் நன்மை என்றும் நீர் செய்தீர் நாங்களோ தீமை செய்தோம் நன்றியில்லாமல் உம்தயை மறந்தோம் நாணி இப்போதழு தோம் எங்களைப்பாரும் இடர்குறை தீரும்  இனிய நல்லிருதயமே  எந்தெந்தப் பாவ தந்திரம் நின்று இரட்சிப்பதும் பொறுப்பே தாய் மறந்தாலும் நீர் மறப்பீரோ தயை உமக் கியல் பாமே  தாழ்மையாய்ப் பணியும் பாலகர் நாங்கள் தயை தயை தயை சுவாமி அந்திய காலம் வந்திடுங் காலே அவஸ்தையாய் நான் கிடந்தால் அடைக்கலம் தஞ்சம் ஆக நீர் இருப்பீர் அன்புள்ள இ...

Scared Heart of Jesus

Image
 

மனிதர்களின் பாவங்களே கடவுளின் இருதயத்தை காயப்படுத்தும் முட்கள்

Image
  மனிதர்களின் பாவங்களே கடவுளின் இருதயத்தை காயப்படுத்தும் முட்கள். மனிதர்கள் ஒவ்வொருவரும்  அறிந்துக்கெள்ள வேண்டிய  மிகமுக்கியமான இந்த விண்ணக இரகசியத்தை வெளிப்படுத்திய இயேசுவின் திருஇருதயமே !நான் , என் வீட்டார் உலக மக்கள் பாவங்களால் உமது இருதயத்தை காயப்படுத்தியற்க்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறோம் எங்களை மன்னியும்.இனி நாங்கள் பாவங்களை தவிர்த்து வாழவும்,செய்த பாவத்திற்கு ஏற்ற பரிகாரம் செய்யவும் வரம் தாரும் . ஆமேன். *நாம் செய்யும் ஒவ்வொரு பாவமும் கடவுளை காயப்படுத்தும் என்பதை அறிவதே ஆன்மீகத்தின் முதல் படி.*

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மத்தேயு 6:19-20 மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை. இந்த உலகத்தின் பொருட்கள் பெரியதாகத் தோன்றினாலும், அவை ஒன்றுமில்லை: சிறிது காலம் மட்டுமே நீடிக்கும், பின்னர்  ஒரு கனவைப் போல மறைந்துவிடும் அவை குறுகிய காலத்திற்கு மட்டுமே அனுபவிக்கப்படுகின்றன. -புனித அல்போன்சஸ் The goods of this world appear great, but they are nothing: like a dream, which lasts but a little, and afterwards vanishes, they are enjoyed but a short time. -St. Alphonsus இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மனித இனத்தின் தாய்,முதல் பெண் (ஏவாள்) உலகிற்கு தண்டனையைக் கொண்டு வந்தாள்; நமது ஆண்டவரின் தாய்(மாதா) உலகிற்கு இரட்சிப்பைக் கொண்டு வந்தாள். ஏவாள் பாவத்தைத் தோற்றுவித்தவள்,மாதா  புண்ணியத்தை தோற்றுவித்தாள். -புனித அகஸ்டின் The mother of our race brought punishment into the world; the Mother of our Lord brought salvation to the world. Eve was the originator of sin, Mary of merit. -St. Augustine. இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உண்மையிலேயே கடவுளைப் பிரியப்படுத்த விரும்பும் ஆன்மா கடுமையான யுத்தங்களை எதிர்பார்க்க வேண்டும். ஆறுதலில் வாழ்ந்து ஒவ்வொரு சிலுவையையும் (துன்பங்களையும்) தவிர்க்கும் ஆன்மாவில் அருள் நிலைக்காது. புனித மெக்காரியஸ் "The soul that truly desires to please God must expect warfare. Grace does not dwell in a soul that lives in comfort and avoids every cross." St. Macarius இயேசுவுக்கே புகழ்! அன்னை மரியாயே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நகைச்சுவைகளுக்கு முன்னுரிமை அளித்து, மக்களை திசைதிருப்பவும், ஆன்மீக ரீதியாக வெறுமையாக்கவும் செய்யும் பிரசங்கிப்பவர்களை புனித அல்போன்ஸ் லிகோரியார் கண்டிக்கிறார்.  பிரசங்கங்கள் வெறும் பொழுதுபோக்காக மாறும்போது, கேட்போர் நகைச்சுவையை மட்டுமே நினைவில் கொள்கிறார்கள், நற்செய்தியை அல்ல. இத்தகைய பிரசங்கம் மனமாற்றத்தைத் தூண்டவோ அல்லது இறைநம்பிக்கையை ஆழப்படுத்தவோ தவறிவிடுகிறது,  புனித சத்தியத்தை அற்பமான கேளிக்கையாகக் குறைத்திவிடுகின்றது.உண்மையான பிரசங்கம் இதயத்தைத் துளைக்க வேண்டும். உங்கள் குருக்களுக்காக, எங்களுக்காக ஜெபிக்கவும், நாங்கள் வைராக்கியத்துடன் பிரசங்கிக்க முடியும், தைரியத்துடனும் உண்மையுடனும் நற்செய்தியை அறிவிக்க முடியும், வெறும் பொழுதுபோக்குக்காக அல்ல, ஆன்மாக்களின் மனமாற்றத்திற்காக. புனித அல்போன்ஸ் லிகோரியார். St. Alphonsus Liguori condemns preachers who prioritize jokes over substance, leaving people distracted and spiritually empty. When sermons become mere entertainment, listeners remember only the laughter—not the Gospel. Such preaching fails to inspire conversion ...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஒரு மறையுரையாளர் தனது உள்ளத்தில் உண்மையைப் பேசத் தயாராக இருக்க வேண்டும், குறைகளைக் கண்டித்து சரிசெய்ய வேண்டும் மற்றும் நல்லொழுக்கத்தைப் புகழ்ந்து பேச வேண்டும் இந்த நோக்கத்திற்காக மரணத்தைக்கூட எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்."  - புனித ஜான்  "A preacher must be prepared in his soul to speak the truth, both in denouncing and correcting shortcomings and in praising virtue, to such a point that he is willing in that cause even to face death."  - St. John of San Facundo இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை பிரிப்பதே பேய்களின் முழுநேரவேலை

  இந்த காணொளியில் காண்பது சாதாரண பேய்கள். நம்மை பாவம் செய்ய தூண்டுவதும்,  செய்த பாவத்தையே மீண்டும் மீண்டும் செய்ய ஆசையை தூண்டுவதும், இதெல்லாம் ஒரு பாவமே அல்ல என்று பாவத்தை தொடர்வதும்,பாவ அடிமையாக மனிதர்களை மாற்றுவதுமே மிக மோசமான பேய்கள். ஒரே ஒரு பாவம் கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை முறித்துவிடும். கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை பிரிப்பதே பேய்களின் முழுநேரவேலை. பேய்கள் இல்லை, நரகம் இல்லை, பாவத்திற்கு தண்டனை இல்லை என்ற போதனைகள் கடவுளிடமிருந்து வருவதில்லை. https://whatsapp.com/channel/0029Vb5ZKpd9cDDfyMVf3f42/224 இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.