இயேசுவின் மதுர திருஇருதயமே
இயேசுவின் மதுர திருஇருதயமே
சினேக அக்கினி பயமே
தினமும் நீர் எங்கள்
சினேகமாய் இருப்பீர் தேவ தயாநிதியே
மனிதரை மோட்ச கதியினில் சேர்க்க
மனுமகனாய் பிறந்தீர்
மகிமை பிரதாப கடவுளானாலும்
மாபழி மேல் சுமந்தீர்
கள்ளனைப் போல கசடர்கள் கடுஞ்சிலுவையில் அறைந்தார்
கருணையால் உந்தன் இருதய அன்பின்
கரை எவர் கண்டறிவார்
உன்திரு இரத்தம் ஒருதுளி முதலாய்
உனக்கென வைத்தீரோ
ஓய்விலா அன்பால்
உம்மையே மறந்தீர் ஓ திவ்ய இருதயமே
என்றும் எம்மோடு இருந்தருள் ஈந்தே இனிய நல்லுண வானீர்
இவையெல்லாம் பாரா ஈனர்கள் நாங்கள் இகழ்ந்துமைப் பழித்தோமே
நன்மைமேல் நன்மை என்றும் நீர் செய்தீர் நாங்களோ தீமை செய்தோம் நன்றியில்லாமல் உம்தயை மறந்தோம் நாணி இப்போதழு தோம்
எங்களைப்பாரும் இடர்குறை தீரும்
இனிய நல்லிருதயமே
எந்தெந்தப் பாவ தந்திரம் நின்று இரட்சிப்பதும் பொறுப்பே
தாய் மறந்தாலும் நீர் மறப்பீரோ தயை உமக் கியல் பாமே
தாழ்மையாய்ப் பணியும் பாலகர் நாங்கள் தயை தயை தயை சுவாமி
அந்திய காலம் வந்திடுங் காலே அவஸ்தையாய் நான் கிடந்தால் அடைக்கலம் தஞ்சம் ஆக நீர் இருப்பீர் அன்புள்ள இருதயமே

Comments
Post a Comment