Posts

Showing posts from March, 2021

ஏழு தலையான பாவங்கள் -16

Image
  ஏழு தலையான பாவங்கள் -16 மோகம் மோகம் என்பது அவமானகரமான தீமையாகும்.நல்ல அழகான வல்லமையை பாவமாக மாற்றுகிறது.இது நிறைகற்புக்கு எதிரானது.நிறைகற்பு மனிதர்கள் சம்மனசுகளை போலாக்குகிறது என்று நம் ஆண்டவர் கூறுகிறார்.திருமணமானவர்களுக்கு புலன் ஆசைகளையும்,இன்பங்களையும் முறைப்படுத்துவதும், மணமாகதவர்தளுக்கு அவற்றை முற்றிலுமாக தடை செய்வதுமாகிய புண்ணியமே கற்பு என்று அரச்.அக்குயினாஸ் தோமையார் வரைறுக்கிறார்.மோகம் என்பது சட்டதிற்கு எதிரான இன்பங்களை தொடுதல் என்னும் புலனைக்கொண்டு அடையதேடுகிறச் செயலாகும்.இப்பாவங்கள் ஆத்துமத்தை கறைப்படுத்துவதோடு,பரிசுத்த ஆவியின் ஆலயமும் சரீர உயிர்ப்பின்போது என்றென்றைக்கும் மகிமைப்படுத்தப்பட போவதுமாகிய சரீரத்தையும் கெடுத்துவிடுகிறது. இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

அரூபிகளின் தன்மை பகுத்தறிவதற்கேற்ற ஒழுங்குகள்-5

Image
  அரூபிகளின் தன்மை பகுத்தறிவதற்கேற்ற ஒழுங்குகள்-5 Rules for the discernment of spirits ஆத்துமத்தில் இருளும்,குழப்பமும்,இவ்வுலக நிலையற்ற காரியங்களில் ஆசையும்,தேவசிநேகமற்று,தன் ஆத்தும ஈடேற்றத்தின்பேரில் அவநம்பிக்கை வருவிக்கும் சோதனையும் மனவறட்சி எனப்படும்.இந்த நிலையில் ஆத்துமமானது சோர்ந்து,சலிப்புற்று,வறண்டு தன்னை படைத்தவரைவிட்டு தள்ளப்பட்டது போல உணரும். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

அரூபிகளின் தன்மை பகுத்தறிவதற்கேற்ற ஒழுங்குகள் -4

Image
  அரூபிகளின் தன்மை பகுத்தறிவதற்கேற்ற ஒழுங்குகள். Rules for the discernment of spirits கெட்ட அரூபியானது(devil),நல்ல குடும்பத்து வாலிபப் பெண்ணை கெடுக்க துர்எண்ணம் கொண்டிருக்கிற காமாதுரனுக்குச்  சமானமாயிருக்கிறது.அவன் சொல்லுகிற வார்த்தைகளையும் துர்ப்புத்திகளையும்,மற்றவர்களுக்கு வெளியிடாமல் இரகசியமாயிருக்க வேணடுமென்று கற்பிக்கிறான்.அவனுடைய துர்கருத்து,எங்கே தகப்பனுக்கு அல்லது கணவனுக்கு தெரியவருகிறதோவென்று பயப்படுகிறான்.ஏனெனில் மற்றவர்கள் செவிக்கு எட்டினால் தன்னுடைய எண்ணமெல்லாம் அழிந்து வீணாய் போய்விடும் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும்.அதுபோல பசாசு நமக்கு வருவிருக்கும் சோதனைகளை நாம் வெளியிடாமல் நமக்குள்ளே வைத்துக்கொள்ளுபடி சகல முயற்சியும் செய்கிறது.அவைகளை நமது ஆன்ம குருவானவரிடம் வெளிப்படுத்தினால்(பாவ சங்கீர்த்தனம்) அது மூர்க்க வெறிகொண்டு வெற்றி பெற முற்றிலும் நம்பிக்கையற்றுப்  போகிறது.ஏனெனில் தன் யோசனைகளை வெளியிட்ட மாத்திரத்தில்  அவைகளை நிறைவேற்றுவது இயலாத காரியமென்று பசாசுக்கு நன்றாகத்தெரியும். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

அரூபிகளின் தன்மை பகுத்தறிவதற்கேற்ற ஒழுங்குகள் - 3

Image
  அரூபிகளின் தன்மை பகுத்தறிவதற்கேற்ற ஒழுங்குகள். Rules for the discernment of spirits. நமது ஜென்ம விரோதியாகிய பசாசு கோட்டையை  முற்றுகையிட்டு அதைப் பிடிக்க ஆசைசைப்படுகிற  சேனாதிபதிக்கு ஒத்ததாக இருக்கிறது.சேனாதிபதி கோட்டை மதில்களையெல்லாம் ஜாக்கிரதையாய்ப் பரிசோதித்துப் பார்த்து எங்கே பலம் குறைவாயிருக்கிறதோ அங்கே தாக்குவது போல பசாசும் நமது ஆத்துமத்தின் நிலைமையைத் துல்லியமாக ஆராய்ந்து,பலவீனத்தை நன்றாக கண்டறிந்து நம்முடன் போர்செய்து வெல்லப்பார்கிறது. இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

அரூபிகளின் தன்மை பகுத்தறிவதற்கேற்ற ஒழுங்குகள்-2

Image
 *Angel sprit Vs Devil Sprit* அரூபிகளின் தன்மை பகுத்தறிவதற்கேற்ற ஒழுங்குகள்-2 Rules for the discernment of spirits  ஆத்துமத்திலுள்ள பாவ  அசுத்தங்களை சுத்தம் செய்து மனமாற்றம்பெற்று இறைவனை அதிகமாக அன்பு செய்து இறைவனில் வளர்ச்சி அடைய விரும்புகிறவர்களுக்கு கெட்ட அரூபி(devil)அவர்கள் இறை நம்பிக்கையில் வளர்ந்து புண்ணியங்களை அடையாத படி ஆத்துமத்தில் குழப்பம்,வீண்கலக்கம்,குருட்டு நியாயங்கள் போன்ற தடைகளால் இறைநம்பிக்கையில் சந்தேகத்தையும்,நம்பிக்கையற்ற தன்மையையும் ஏற்படுத்துகிறது.  நல்ல அரூபியோ(Guardian Angel) அப்பேர்ப்பட்ட இடையூறுகளையெல்லாம் அகற்றி அவர்கள் ஞானவளர்ச்சி அடைவதற்கு தேவையான மனச்சமாதானம்,பலம்,மன ஆறுதல்,பக்தி கண்ணீர்,நல்ல ஏவுதலை கொடுக்கிறது. *அக்டோபர் 2 - நமது காவல் தூதர்களின் திருநாள்.*  காவல் தூதர் என்ற விண்ணக நண்பரின் வல்லமையை அறிந்துக்கொள்ளாத,அவர் உதவியை கேட்காத கிறிஸ்தவர்களாக இல்லாமல்.முதலில் நமக்கு ஒரு காவல் தூதர் இருக்கிறார் என்பதை அறிந்து, அதை உறுதியாக விசுவசித்து, அவரை நமக்குத் தந்ததற்காகக் கடவுளுக்கு நன்றி கூறுவோம்.நாளை திருப்பலியில் குடும்பமாக பக்தியுட...

அரூபிகளின் தன்மை பகுத்தறிவதற்கேற்ற ஒழுங்குகள்-1

Image
 *Angel sprit Vs Devil Sprit* *அரூபிகளின் தன்மை பகுத்தறிவதற்கேற்ற ஒழுங்குகள். Rules for the discernment of spirits* எளிதாய் அடிக்கடி சாவான பாவத்தில் விழுகிறவர்களுக்கு கெட்ட அரூபி(devil) அவர்களை தொடர்ந்து அதே நிலமையில் இருக்கவும் இன்னும் அதிகமாக பாவ அசுத்தத்தில் உழலவும்,சரீரத்ததுக்கடுத்த சுகபோகங்களை தாராளமாய் அவர்கள் கண்முன் வைக்கிறது. நல்ல அரூபி(Gurdian Angel) அதற்கு  விரோதமாய் நல்ல புத்தியை தெளிவித்து மனசாட்சியின் கண்டனத்தை உணரும்படி செய்கிறது. *அக்டோபர் 2 - நமது காவல் தூதர்களின் திருநாள்.* இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஏழு தலையான பாவங்கள் -15

Image
  ஏழு தலையான பாவங்கள் உலோபித்தனம் எனும் பேராசை உலகாதயமான,நிலையற்ற பொருட்களை எப்போதும் நாம் தேடிக் கொண்டிருக்கும் போது இறைவனுக்காக நேரத்தை தர நமக்கு நேரமே இருக்காது.அவருக்கான காரியங்களில் எந்த திருப்தியும் இருக்காது.நாம் சற்று விழிப்பாக இருக்க தவறினால் செல்வங்களும்,உலக கவலைகளும் நம் ஆத்துமத்தில் விசுவாசம்,தேவபக்தி ஆகியவற்றின் விதைகளை  சுழ்ந்து நெறித்து பயனற்றவையாக்கிவிடும். இயேசுவுக்கே புகழ்! அன்னைமரியாயே வாழ்க!

ஏழு தலையான பாவங்கள் -14

Image
  ஏழு தலையான பாவங்கள் உலோபித்தனம் அல்லது பேராசை ஒருவன் நியாயமாக பயன்படுத்த வேண்டியவைகளைக்கூட சேர்த்து வைப்பதற்காக வறுமையுள்ள பரிதாபமான வாழ்வு வாழ்கிறான். நீதி,அநீதி பார்க்காமல் தன் சேமிப்பைப் பெருக்கிக் கொண்டு செல்வத்தை அதிகரித்துக்கொள்ள கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவறவிடாமல் எல்லா வழிகளையும் கையாள்கிறான்.பிறருக்கு உதவாமலும்,கடனாக கூட கொடுக்காமலும் ,அவசிய செலவு செய்ய வேண்டிய காரியங்களில் ஆர்வமில்லாமல் பணத்தை சேர்த்து பதுக்கி வைப்பதில் மட்டுமே மிகுந்த ஆர்வமுடன் செயல்படுகிறான். இயேசுவுக்கே புகழ்! அன்னை மரியாயே வாழ்க !