ஏழு தலையான பாவங்கள் -16
ஏழு தலையான பாவங்கள் -16
மோகம்
மோகம் என்பது அவமானகரமான தீமையாகும்.நல்ல அழகான வல்லமையை பாவமாக மாற்றுகிறது.இது நிறைகற்புக்கு எதிரானது.நிறைகற்பு மனிதர்கள் சம்மனசுகளை போலாக்குகிறது என்று நம் ஆண்டவர் கூறுகிறார்.திருமணமானவர்களுக்கு புலன் ஆசைகளையும்,இன்பங்களையும் முறைப்படுத்துவதும்,
மணமாகதவர்தளுக்கு அவற்றை முற்றிலுமாக தடை செய்வதுமாகிய புண்ணியமே கற்பு என்று அரச்.அக்குயினாஸ் தோமையார் வரைறுக்கிறார்.மோகம் என்பது சட்டதிற்கு எதிரான இன்பங்களை தொடுதல் என்னும் புலனைக்கொண்டு அடையதேடுகிறச் செயலாகும்.இப்பாவங்கள் ஆத்துமத்தை கறைப்படுத்துவதோடு,பரிசுத்த ஆவியின் ஆலயமும் சரீர உயிர்ப்பின்போது என்றென்றைக்கும் மகிமைப்படுத்தப்பட போவதுமாகிய சரீரத்தையும் கெடுத்துவிடுகிறது.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment