அரூபிகளின் தன்மை பகுத்தறிவதற்கேற்ற ஒழுங்குகள்-2
*Angel sprit Vs Devil Sprit*
அரூபிகளின் தன்மை பகுத்தறிவதற்கேற்ற ஒழுங்குகள்-2
Rules for the discernment of spirits
ஆத்துமத்திலுள்ள பாவ அசுத்தங்களை சுத்தம் செய்து மனமாற்றம்பெற்று இறைவனை அதிகமாக அன்பு செய்து இறைவனில் வளர்ச்சி அடைய விரும்புகிறவர்களுக்கு கெட்ட அரூபி(devil)அவர்கள் இறை நம்பிக்கையில் வளர்ந்து புண்ணியங்களை அடையாத படி ஆத்துமத்தில் குழப்பம்,வீண்கலக்கம்,குருட்டு நியாயங்கள் போன்ற தடைகளால் இறைநம்பிக்கையில் சந்தேகத்தையும்,நம்பிக்கையற்ற தன்மையையும் ஏற்படுத்துகிறது.
நல்ல அரூபியோ(Guardian Angel) அப்பேர்ப்பட்ட இடையூறுகளையெல்லாம் அகற்றி அவர்கள் ஞானவளர்ச்சி அடைவதற்கு தேவையான மனச்சமாதானம்,பலம்,மன ஆறுதல்,பக்தி கண்ணீர்,நல்ல ஏவுதலை கொடுக்கிறது.
*அக்டோபர் 2 - நமது காவல் தூதர்களின் திருநாள்.*
காவல் தூதர் என்ற விண்ணக நண்பரின் வல்லமையை அறிந்துக்கொள்ளாத,அவர் உதவியை கேட்காத கிறிஸ்தவர்களாக இல்லாமல்.முதலில் நமக்கு ஒரு காவல் தூதர் இருக்கிறார் என்பதை அறிந்து, அதை உறுதியாக விசுவசித்து, அவரை நமக்குத் தந்ததற்காகக் கடவுளுக்கு நன்றி கூறுவோம்.நாளை திருப்பலியில் குடும்பமாக பக்தியுடன் பங்கெடுப்போம்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment