அரூபிகளின் தன்மை பகுத்தறிவதற்கேற்ற ஒழுங்குகள் -4

 



அரூபிகளின் தன்மை பகுத்தறிவதற்கேற்ற ஒழுங்குகள்.

Rules for the discernment of spirits


கெட்ட அரூபியானது(devil),நல்ல குடும்பத்து வாலிபப் பெண்ணை கெடுக்க துர்எண்ணம் கொண்டிருக்கிற காமாதுரனுக்குச்  சமானமாயிருக்கிறது.அவன் சொல்லுகிற வார்த்தைகளையும் துர்ப்புத்திகளையும்,மற்றவர்களுக்கு வெளியிடாமல் இரகசியமாயிருக்க வேணடுமென்று கற்பிக்கிறான்.அவனுடைய துர்கருத்து,எங்கே தகப்பனுக்கு அல்லது கணவனுக்கு தெரியவருகிறதோவென்று பயப்படுகிறான்.ஏனெனில் மற்றவர்கள் செவிக்கு எட்டினால் தன்னுடைய எண்ணமெல்லாம் அழிந்து வீணாய் போய்விடும் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும்.அதுபோல பசாசு நமக்கு வருவிருக்கும் சோதனைகளை நாம் வெளியிடாமல் நமக்குள்ளே வைத்துக்கொள்ளுபடி சகல முயற்சியும் செய்கிறது.அவைகளை நமது ஆன்ம குருவானவரிடம் வெளிப்படுத்தினால்(பாவ சங்கீர்த்தனம்) அது மூர்க்க வெறிகொண்டு வெற்றி பெற முற்றிலும் நம்பிக்கையற்றுப்  போகிறது.ஏனெனில் தன் யோசனைகளை வெளியிட்ட மாத்திரத்தில்  அவைகளை நிறைவேற்றுவது இயலாத காரியமென்று பசாசுக்கு நன்றாகத்தெரியும்.

இயேசுவுக்கே புகழ் !

அன்னை மரியாயே வாழ்க !




Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!