Posts

Showing posts from May, 2025

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  சாதாரண அன்றாட வாழ்வில் இறைவனைக் கண்டுபிடிக்கக் கற்றுக்கொள்வோம், இல்லையென்றால் நாம் அவரை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. புனித ஜோஸ்மரிய‌ எஸ்கரிவா  Either we learn to find the Lord in the ordinary everyday life or else we shall never find him. St.Josemaria escariva இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே ‌வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திருத்தந்தையின் பொன்மொழிகள்

Image
  "The truth of the human person-male and female-is not a cultural construction, but a divine gift. We must resist ideologies that confuse our children and distort God's plan. The family, as designed by God, is the sanctuary of life and love. No one has the authority to redefine this foundation." Pope Leo XIV  ஆண் , பெண் ஒரு கலாச்சார கட்டமைப்பு அல்ல, மாறாக ஒரு தெய்வீக பரிசு.இதுவே மனித இனத்தின் உண்மை. கடவுளால் வடிவமைக்கப்பட்ட குடும்ப வாழ்க்கை  அன்பின் சரணாலயம். இந்த அடித்தளத்தை மறுவரையறை செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை. நமது குழந்தைகளை குழப்பி, கடவுளின் திட்டத்தை சிதைக்கும் சித்தாந்தங்களை நாம் எதிர்க்க வேண்டும்.  திருத்தந்தை 14ஆம் லியோ. இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஆன்மீக சக்தியானது கண்ணியத்திலும், உன்னதத்திலும் எந்த உலகியல் சக்தியையும் மிஞ்சும் என்பதை நாம் இன்னும் தெளிவாக கண்டுணர வேண்டும். திருத்தந்தை போனிஃபாஸ் VIII "We must recognise the more clearly that spiritual power surpasses in dignity and in nobility any temporal power whatever" Pope Boniface VIII, Unam Sanctam. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
   கடவுளின் சித்தத்தின்படி உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளவதில் கவனமாக இருங்கள், வேறு எதையும் பற்றி கவலைப்பட வேண்டாம். இதை நீங்கள் செய்தால் ....இயேசு உங்கள் குடும்பங்களை கவனித்துக்கொள்வதை நீங்கள் காண்பீர்கள்.இயேசுவை நம்புங்கள்!! புனித பாத்ரே பியோ. "Be attentive to take care of yourself and your family according to His will, and do not worry about anything else. If you do this ••••• you will see Jesus is taking care of you."  Trust in Jesus!! † St. Padre Pio இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஒவ்வொருவரும் தனது விசுவாசத்தை இரண்டு விதிகளால் பாதுகாக்க வேண்டும், முதலாவது,தெய்வீக சட்டத்தின் அதிகாரம், இரண்டாவதாக, கத்தோலிக்க திருச்சபையின் பாரம்பரியம். -லெரின் புனித வின்சென்ட் Everyone must safeguard his faith by two Rules, first, by the authority of Divine Law; secondly, by the Tradition of the Catholic Church. -St. Vincent of Lerin இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

*நோபல் பரிசு பெற்ற மருத்துவரை மனந்திருப்பிய லூர்து புதுமை!*

Image
  தேவதாய் காட்சியளித்த லூர்துபதியில் நடைபெற்றுவரும் அற்புதங்களும், புதுமைகளும் எண்ணிக்கையில் அடங்காதவை. மாதா காணப்பட்ட மசபியெல் கெபி அற்புத நீரூற்றிலிருந்து சுரக்கும் தண்ணீர் இன்றுவரை எத்தனையோ நோயாளிகளை குணமாக்கி வருவதை நாம் அறிவோம். இந்த அற்புத குணமாகுதல்கள் கொண்டு வரும் மனந்திரும்புதல்கள் ஏராளம்!! ஏராளம்! அப்படி லூர்து கெபியில் தேவதாய் நிகழ்த்திய புதுமை கடவுள் மறுப்பு அறிவுவாதியும், (Agnostic) மருத்துவத் துறையில் நோபல் பரிசு பெற்றவருமான டாக்டர் அலெக்ஸிஸ் காரெல் (Dr. Alexis Carrell) என்பவரை மனந்திருப்பியது! கண்முன்னே நிகழ்ந்த புதுமை! 1902-ல் பிரான்ஸ் நாட்டின் லையோன் (Lyons) நகரின் மருத்துவ கல்லூரியின் மருத்துவரான Dr. அலெக்ஸிஸ் காரெல்லை அவரது மருத்துவ நண்பர் ஒருவர் லையோன் நகர நோயாளிகளை லூர்து நகருக்கு அழைத்துச் செல்லும் பணியில் உதவுமாறு அழைப்பு விடுத்திருந்தார். கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்க்கப்பட்டாலும் நாளடைவில் விசுவாசத்தை இழந்து கடவுள் மறுப்பு அறிவுவாதியாகிப் போன அவருக்கு கடவுள் நம்பிக்கையோ, புதுமைகள் பற்றிய விசுவாசமோ இல்லை. ஆனாலும், நண்பர் அழைக்கவே நோயாளிகளை இரயிலில் கொண்டு ச...

திருதந்தையின் பொன்மொழிகள்

Image
  அரசியலிலும், நவீன கலாச்சாரங்களிலும் சரியானவற்றை அனுமதிப்பதற்காகவும், தவறானவற்றை சரிசெய்வதற்காகவும் குருத்துவம் ஏற்படுத்தவில்லை. உண்மை, கற்பு, சுய தியாகம் மற்றும் நற்கருணை ஆண்டவர் மீதுள்ள அன்பு ஆகிய நெருப்பினால் குருத்துவம் உருவாக வேண்டும். ஆன்மாக்களை மனமாற்றவே குருத்துவம் ; அடையாளங்களை உறுதிப்படுத்தவதற்காக அல்ல. பாவ நிலையிலுள்ள குழுக்களை ஆசீர்வதிக்க குருவானவர் அழைக்கப்படவில்லை, மாறாக பாவிகளை மனமாற்றவே அழைக்கப்பட்டிருக்கிறார். திருத்தந்தை 14 ஆம் சிங்கராயர் Pope leo XIV  (கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட்) Priestly formation must not be shaped by cultural trends, political correctness, or the spirit of permissiveness. It must be formed in the fire of truth, chastity, self-sacrifice, and Eucharistic love. The priest is not called to “affirm identities,” but to convert souls. He is not called to bless sinful unions, but to call sinners to repentance." —Pope Leo XIV (Cardinal Robert Francis Prevost) https://iraivaniniraivarthigal.blogspot.com/2025/05/blog-post_9.html இயேசுவ...

பொன்மொழிகள்

Image
  சிலர் கருக்கலைப்பு மனித உரிமை என்று கூறுகின்றனர். கொல்வது  மனித உரிமை அல்ல.  உயிர்களைக் காப்பாற்றவே மனித உரிமைகள் இருக்கின்றன, அவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அல்ல"   கார்டினல் மால்கம்  ரஞ்சித் Some claim that abortion is a human right. Right to kill is not a human right. Human rights are there to save lives not to end them” -  Malcolm Cardinal Ranjith. இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மாதாவின் உண்மை பக்தர்கள் மாதாவிற்கு உதவாமல் இருக்கலாமா ?

Image
  முதல் சனி மாதாவிடம் நமது வரங்களை கேட்பதற்கான நாள் அல்ல, மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு எதிராக செய்யப்படும் 5 மாபெரும் நிந்தைகளுக்கு பரிகாரம் செய்வதற்கே.,  இதை 1917 ஆம் ஆண்டு பாத்திமாவில் மாதா தன் பக்தர்களிடம் கேட்டது. *எதற்க்காக இந்த பரிகாரம் ?* 1.ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மரியாயின் அமல உற்பவத்திற்கு எதிராக மாதா ஜென்ம பாவத்தோடு பிறந்தார்கள் என்ற நிந்தைக்குப் பரிகாரமாக. 2. தேவதாயின் தெய்வீகத் தாய்மைக்கு எதிராக மாதா கடவுளின் தாயல்ல என்ற நிந்தைக்குப் பரிகாரமாக. 3. கன்னிமாமரி முப்பொழுதும் கன்னிகை என்னும் சிறப்புக்கு அந்தஸ்துக்கு எதிராக மாதா கன்னியல்ல என்ற நிந்தைக்குப் பரிகாரமாக. 4. மாதாவின் உண்மை பக்தியை சிறுவர், இளைஞர்களிடம் போதிக்காமல் அழித்துவரும் நிந்தைக்குப் பரிகாரமாக. 5. அலைகையை வீழ்த்த மாதா தந்த செபமாலை குடும்பமாக தினமும் செபிக்காமல், நரகத்தை தவிர்க்கும் மாதா தந்த உத்தரியத்தை அணியாமல், பாவிகளை மனந்திருப்ப மாதா தந்த அற்புத பதக்கத்தை பயன்படுத்தாமல், மாதாவின் பக்திப் பொருட்களையும் உருவங்களையும் அகற்றி அவமதிப்பதற்க்குப் பரிகாரமாக. *நாம் செய்ய வேண்டியது என்ன ?* மரியாயின...