மாதாவின் உண்மை பக்தர்கள் மாதாவிற்கு உதவாமல் இருக்கலாமா ?
முதல் சனி மாதாவிடம் நமது வரங்களை கேட்பதற்கான நாள் அல்ல, மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு எதிராக செய்யப்படும் 5 மாபெரும் நிந்தைகளுக்கு பரிகாரம் செய்வதற்கே.,
இதை 1917 ஆம் ஆண்டு பாத்திமாவில் மாதா தன் பக்தர்களிடம் கேட்டது.
*எதற்க்காக இந்த பரிகாரம் ?*
1.ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மரியாயின் அமல உற்பவத்திற்கு எதிராக மாதா ஜென்ம பாவத்தோடு பிறந்தார்கள் என்ற நிந்தைக்குப் பரிகாரமாக.
2. தேவதாயின் தெய்வீகத் தாய்மைக்கு எதிராக மாதா கடவுளின் தாயல்ல என்ற நிந்தைக்குப் பரிகாரமாக.
3. கன்னிமாமரி முப்பொழுதும் கன்னிகை என்னும் சிறப்புக்கு அந்தஸ்துக்கு எதிராக மாதா கன்னியல்ல என்ற நிந்தைக்குப் பரிகாரமாக.
4. மாதாவின் உண்மை பக்தியை சிறுவர், இளைஞர்களிடம் போதிக்காமல் அழித்துவரும் நிந்தைக்குப் பரிகாரமாக.
5. அலைகையை வீழ்த்த மாதா தந்த செபமாலை குடும்பமாக தினமும் செபிக்காமல், நரகத்தை தவிர்க்கும் மாதா தந்த உத்தரியத்தை அணியாமல், பாவிகளை மனந்திருப்ப மாதா தந்த அற்புத பதக்கத்தை பயன்படுத்தாமல், மாதாவின் பக்திப் பொருட்களையும் உருவங்களையும் அகற்றி அவமதிப்பதற்க்குப் பரிகாரமாக.
*நாம் செய்ய வேண்டியது என்ன ?*
மரியாயின் மாசற்ற இருதயத்தின் நிந்தைப் பரிகாரமாக, ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் நாம் செய்ய வேண்டியது
1.நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து,
2.தேவமாதாவின் மாசற்ற இருதயத்திற்கு ஆறுதலாக திருப்பலியில் பங்கேற்று பரிகார நற்கருணை உட்கொள்ளுதல்.
3.ஜெபமாலை ஜெபித்தல்.
4. மாதாவுடன் 15 நிமிடம் இருந்து தேவ இரகசியங்களைத் தியானித்தல்.
தொடர்ச்சியாக ஐந்து முதல் சனிக்கிழமை இந்த பக்தி முயற்சியைச் கடைப்பிடித்து ஒவ்வொரு மாதமும் ஒரு நிந்தைக்கு பரிகாரமாக ஒப்புக் கொடுக்க வேண்டும்.
இந்நாட்களில் நமது தனிப்பட்ட விண்ணப்பங்கள் எதுவும் இல்லாமல் மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு ஆறுதல் தர வேண்டும் என்ற எண்ணத்தோடு பக்தி முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.
ஒவ்வொரு பங்குகளிலும், பங்கு தந்தையின் அனுமதியோடு இந்த பக்தி முயற்சிகளை துவங்கலாம்.
(அல்லது)
ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை *வாழும் செபமாலை இயக்கம்* நடத்தும் இணையதள Zoom meetings ல் கீழுலுள்ள இணைப்பு கிளிக் செய்து உங்கள் இல்லத்திலிருந்தே கலந்துக் கொள்ளலாம்.
*Zoom Link*
https://us02web.zoom.us/j/6986979130?pwd=YkR6dWpvNHV1OHZJM1V1SjZTbFNJZz09
மாதாவிடம் வரங்களை கேட்கும் காரிய பக்தர்களாக நமது வாழ்க்கையை முடித்துவிடாமல் , மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு எதிராக செய்யப்படும் நிந்தைகளுக்கு பரிகாரம் செய்து மாதாவிற்கு உதவும் உண்மை பக்தர்களாக நாமும் மாறுவோம்.
நாம் விரும்பி செய்யும் பக்தி முயற்சிகளை விட, மாதா தன் பிள்ளைகளிடம் கேட்ட பக்தி முயற்சிகளை கடைப்பிடிப்பதே மாதாவிற்கு ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தரும்.
உலக தேவைகளுக்காக மட்டும் மாதாவின் மீது பக்தியுள்ளவர்களாக இருக்கும் தலைமுறைகளை மாறவேண்டும்,அருள் நிறைந்த நம் மாமரிக்கு கீழ்படியவேண்டும்.
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

Comments
Post a Comment