Posts

Showing posts from October, 2024

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
 *செபமாலை வணக்க மாதம்* மாமரியின் ஊழியர்கள் யார்? எந்த ஆறுதலுமின்றி, எந்த இனிமையுமின்றி, பராக்கு, களைப்பு, தவிப்புக்கு மத்தியில் மனவறட்சியோடு, விடாமல் யார் செபித்துக்கொண்டிருப்பார்களோ அவர்களே மாமரியின் ஊழியர்கள். தனியாக செபிக்காதே. மாமரியை அழைத்துக் கொள். அப்பொழுது *சேசுவிற்கு மிக நெருக்கமாகி விடுவாய்.* மாமரியின் தனிப்பட்ட ஆதரவு இல்லாதவர்கள் சேசுவுடன் செல்ல விரும்பினால் ஏராளமான வறட்சி, சோதனைகள், சந்தேகங்களை கடந்து செல்ல நேரிடும். முத்தி.திருதந்தை  மரிய எட்வர்ட் ஜோன்ஸ்  Under the garce of God-4

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உன்னை குறை சொல்வோரை, அவமானப்படுத்துவோரை, காயப்படுத்துவோரை நேசி. *அவர்கள் ஆண்டவரின் பிரதிநிதிகள்.* *மாறுபட்ட கருத்துள்ள மனிதர்கள், மதிப்பு மிக்க சிலுவைகள்.* மயிராடை அணிவதைவிட, உன்னையே உன் சவுக்கால் அடித்து கொள்வதைவிட இப்படிப்பட்ட மனிதர்களோடு இருப்பது பெரி காரியம். *நாம் தெரிந்துகொள்ளும் சிலுவைகளைவிட, ஆண்டவர் நியமித்திருக்கும் சிலுவைகளே நம்மை நன்றாகப் புனிதப்படுத்துகின்றன.* முத்தி.எட்வர்ட் ஜோன்ஸ் மரிய போப் Under the garce of God-3

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  #lent சிலுவையை மிகவும் நேசிப்போம்,  ஏனென்றால், நமது வாழ்க்கை என்ன என்பதையும், உண்மையான அன்பு எது என்பதையும், மிகப்பெரிய துன்பங்களில் நம் பலம் எது என்பதையும்  சிலுவையிலே தான் கண்டுப்பிடிக்க முடியும்.  -புனித.மரியா கொரற்றி Let us love the Cross very much, for it is there that we discover our life, our true love, and our strength in our greatest difficulties.  -St. Maria Goretti. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஒரு பங்கை புனிதப்படுத்த ஒரேயொரு ஒரே ஒரு பரிசுத்த ஆன்மா போதும். ஒரே ஒரு பரிசுத்த ஆன்மா அதிகமான பாவிகளை மனந்திருப்பும். பரிசுத்தனம் என்பது தேவ சித்தத்தை விரும்புவதே. தனது ஒவ்வொரு செயலிலும் தேவ சித்தத்தை நிறைவேற்றுபவன் உண்மையான சமாதானத்தை கண்டுபிடிக்கிறான். பரிசுத்தவானாக விரும்பாத ஒரு துறவி,தனது அழைப்பு என்ன என்பதை கண்டுபிடிக்காதவன். முத்தி.எட்வர்ட் ஜோன்ஸ் மரிய போப். Under the Graze of the God.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  *ஒரேயொரு குருவானவருக்காக, ஒரு குருவின் பரிசுத்ததனத்திற்காக நீ உழைத்தால், பல்லாயிரக்கணக்கான ஆன்மாக்களின் தாயாக, அவர்களுடைய மகிழ்ச்சிக்கான ஊற்றாக ஆகிவிடுவாய். *ஒரு பரிசுத்த குரு உலகை ஒளிர்வித்து, வளப்படுத்தி, வெப்பமூட்டி அனைத்தையும் வளர்க்கும் சூரியனுக்கு ஒப்பாவார்.  *எதிர்கால குருக்களுக்காக மன்றாடுவோர் மீது, ஆண்டவர் தனிப்பட்ட ஆசீரை வழங்குகிறார். * பரிசுத்தக் குருக்கள், பங்குகளைப் புனிதப்படுத்துகிறார்கள். குரு மடங்களில் பக்தியுருக்கத்தை உண்டுபண்ணுகிறார்கள்.  *பரிசுத்தக் குருக்கள் கல்லாகி விட்ட ஆன்மாக்களை மிருதுவாக்குகிறார்கள். *எதிர்காலம் ஆண்டவரின் கரங்களில் உள்ளது.ஆண்டவர் அதனை குருக்களின் கரங்களில் ஒப்படைத்துள்ளார். *பரிசுத்த குருக்களால் மட்டுமே இந்த உலகை காக்க முடியும்.வேறு வழி எனக்கு தெரியவில்லை ஆண்டவரே ! எங்களுக்கு பரிசுத்த குருக்களைத் தாரும்.ஆமேன். முத்தி.எட்வர்ட் ஜோன்ஸ் மரிய போப். Under the Graze of the God.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
#mothermary படைப்பாளரின் கைகளில் இருந்து வந்த மிக அழகான படைப்பு மாதா. கடவுள், மாதாவை ஒரு நட்சத்திரமாக  தேர்ந்தெடுத்தார், அதில் இருந்து அவருடைய விலைமதிப்பற்ற மற்றும் விலையுயர்ந்த ஆசீர்வாதங்களை, மாதா மீது நம்பிக்கை வைக்கும் அனைவருக்கும் பிரகாசிக்க வேண்டும் என்பதற்காக.  -புனித ஜான் மரிய வியான்னி Mary is the most beautiful creature that ever came forth from the hands of the Creator. God Himself elected her to be the star from which His most precious and richest blessings should shine upon all those who place their confidence in her. -St. John mariya Vianney. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நிலையான நண்பர்கள் நம் காவல் தூதர்கள்

Image
 *அக்டோபர்‌-2 நிலையான விண்ணக நண்பர்களான நம் காவல் தூதர்கள் திருநாள்* 24 மணி நேரமும் நம்முடன் இருந்து நம்மை பாதுகாத்துக் கொண்டிருப்பவர்கள். பல்வேறு உலகம் விபத்துகளிலிருந்து, ஆபத்துகளிலுருந்தும் நம்மை பாதுகாப்பவர்கள்.தானியேல்(6:21-22) பல்வேறு ஆன்ம ஆபத்திலிருந்தும்,பாவத்திலருந்தும் நம்மை எச்சரிப்பவர்கள், பாதுகாப்பவர்கள். கடவுளின் அன்பையும்,இரக்கத்தையும், எச்சரிப்புக்களையும் நமக்கு உணர்த்துபவர்கள். நமது செபங்களை, மன்றாட்டு களை, கடவுளிடம் கொண்டு செல்பவர்கள். தோபித்து 12:(12-13) கடவுளின் செய்திகளை நமக்கு கொண்டு வருபவர்.லூக்கா 1:26 நமக்கும், கடவுளுக்கும் இணைப்பாளர். பசாசுகளின் கொடிய தாக்குதல்களிலிருந்து நம்மை பாதுகாப்பவர்.(தோபித்து 8:3) நம்மை இன்னும் அதிக பரிசுத்தவர்களாகவும், நல்லவர்களாகவும் வாழ நமக்கு உதவி செய்பவர்கள். புனித பேதுருவை  பூட்டிய சிறையில் இருந்த போது விடுவித்தவர்.திருத்தூதர் பணி 12:7 என் முன்னிலையில் பாவம் செய்ய உனக்கு வெட்கமாக இல்லையா ? என்று புனித ஜெம்மா கல்காணியை எச்சரித்தவர். திருப்பலியில் கவனம் சிதறியப்போது புனித .அவிலா தெரசம்மாளை கன்னத்தில் அறைந்தவர். புனித ஜான் ப...