புனிதர்களின் பொன்மொழிகள்
*ஒரேயொரு குருவானவருக்காக, ஒரு குருவின் பரிசுத்ததனத்திற்காக நீ உழைத்தால், பல்லாயிரக்கணக்கான ஆன்மாக்களின் தாயாக, அவர்களுடைய மகிழ்ச்சிக்கான ஊற்றாக ஆகிவிடுவாய்.
*ஒரு பரிசுத்த குரு உலகை ஒளிர்வித்து, வளப்படுத்தி, வெப்பமூட்டி அனைத்தையும் வளர்க்கும் சூரியனுக்கு ஒப்பாவார்.
*எதிர்கால குருக்களுக்காக மன்றாடுவோர் மீது, ஆண்டவர் தனிப்பட்ட ஆசீரை வழங்குகிறார்.
* பரிசுத்தக் குருக்கள், பங்குகளைப் புனிதப்படுத்துகிறார்கள். குரு மடங்களில் பக்தியுருக்கத்தை உண்டுபண்ணுகிறார்கள்.
*பரிசுத்தக் குருக்கள் கல்லாகி விட்ட ஆன்மாக்களை மிருதுவாக்குகிறார்கள்.
*எதிர்காலம் ஆண்டவரின் கரங்களில் உள்ளது.ஆண்டவர் அதனை குருக்களின் கரங்களில் ஒப்படைத்துள்ளார்.
*பரிசுத்த குருக்களால் மட்டுமே இந்த உலகை காக்க முடியும்.வேறு வழி எனக்கு தெரியவில்லை
ஆண்டவரே ! எங்களுக்கு பரிசுத்த குருக்களைத் தாரும்.ஆமேன்.
முத்தி.எட்வர்ட் ஜோன்ஸ் மரிய போப்.
Under the Graze of the God.

Comments
Post a Comment