நிலையான நண்பர்கள் நம் காவல் தூதர்கள்

 *அக்டோபர்‌-2 நிலையான விண்ணக நண்பர்களான நம் காவல் தூதர்கள் திருநாள்*



24 மணி நேரமும் நம்முடன் இருந்து நம்மை பாதுகாத்துக் கொண்டிருப்பவர்கள்.

பல்வேறு உலகம் விபத்துகளிலிருந்து, ஆபத்துகளிலுருந்தும் நம்மை பாதுகாப்பவர்கள்.தானியேல்(6:21-22)

பல்வேறு ஆன்ம ஆபத்திலிருந்தும்,பாவத்திலருந்தும் நம்மை எச்சரிப்பவர்கள், பாதுகாப்பவர்கள்.

கடவுளின் அன்பையும்,இரக்கத்தையும், எச்சரிப்புக்களையும் நமக்கு உணர்த்துபவர்கள்.

நமது செபங்களை, மன்றாட்டு களை, கடவுளிடம் கொண்டு செல்பவர்கள்.

தோபித்து 12:(12-13)

கடவுளின் செய்திகளை நமக்கு கொண்டு வருபவர்.லூக்கா 1:26

நமக்கும், கடவுளுக்கும் இணைப்பாளர்.

பசாசுகளின் கொடிய தாக்குதல்களிலிருந்து நம்மை பாதுகாப்பவர்.(தோபித்து 8:3)

நம்மை இன்னும் அதிக பரிசுத்தவர்களாகவும்,

நல்லவர்களாகவும் வாழ நமக்கு உதவி செய்பவர்கள்.

புனித பேதுருவை  பூட்டிய சிறையில் இருந்த போது விடுவித்தவர்.திருத்தூதர் பணி 12:7

என் முன்னிலையில் பாவம் செய்ய உனக்கு வெட்கமாக இல்லையா ? என்று புனித ஜெம்மா கல்காணியை எச்சரித்தவர்.

திருப்பலியில் கவனம் சிதறியப்போது புனித .அவிலா தெரசம்மாளை கன்னத்தில் அறைந்தவர்.

புனித ஜான் போஸ்கோவை நரகத்தை காணும்படி அழைத்துச்சென்றவர். 

புனித பியோவின் அந்தரங்கச் செயலாளராகவும், சிறு வயது விளையாட்டுத் தோழராகவும், தந்தி முதலியவற்றை அனுப்பும் தகவல் தொடர்பாளராகவும், கார் ஓட்டுனராகவும், அந்நிய மொழிகளை மொழிபெயர்ப்பவராகவும் செயலபட்டவர்.

இதே முறையில் நமக்கு உதவ நம் சொந்தக் காவல்தூதரும் தயாராகவே இருக்கிறார். உண்மையில் நாம்தான் அவரைப் பயன்படுத்திக் கொள்வதேயில்லை!

நம் ஆண்டவரின் வார்த்தைகள்

இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய *வானதூதர்கள்* என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.மத்தேயு 18:(10-11).


*காவல் தூதர் என்ற விண்ணக நண்பரின் வல்லமையை அறிந்துக்கொள்ளாத,அவர் உதவியை கேட்காத கிறிஸ்தவர்களாக இல்லாமல்*

முதலில் நமக்கு ஒரு காவல் தூதர் இருக்கிறார் என்ற சத்தியத்தை அறிந்து, அதை உறுதியாக விசுவசித்து, அவரை நமக்குத் தந்ததற்காகக் கடவுளுக்கு நன்றி கூறுவோம்.

நம் காவல் தூதரை நம் நண்பராக்கிக் கொள்வோம். அவர் அருவருப்புக் கொள்ளாதபடி சாவான பாவங்களை மட்டுமல்ல, அற்பப் பாவங்களையும் தவிர்ப்போம்.

 நம் ஆன்ம, சரீர நன்மைகளுக்காக அவரைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள எப்போதும் கவனமாயிருப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மைப் பத்திரமாக மோட்சம் சேர்க்குமாறு தினமும் அவரிடம் மன்றாட மறவாதிருப்போமாக!

காவல் தூதர்கள் திருநாள்: அக்டோபர் 2(அரசு விடுமுறை) இந்த நாள் கத்தோலிக்க ஆலயத்தில் மக்கள் குவிய வேண்டிய நாள்.நமக்கு காவல் தூதரை தந்தற்க்காக கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டிய நாள்.

மிகவும் சந்தோஷப்படுவார்.

நம் காவல் தூதருக்கு நன்றியாக அன்று ஒப்புக்கொடுக்கும் திருப்பலியில் நாம் பங்குபெற்றால்....,

மிகவும் சந்தோஷப்படுவார்.

காவல் தூதரைப் பற்றி குழந்தைகளுக்காக சொல்லிக்கொடுத்தால்....,

மிகவும் சந்தோஷப்படுவார்.

பின்வரும் செபத்தை தினமும் செபித்து அவரை உதவிக்கு அழைத்தால்...

*எனக்குக் காவலாய் இருக்கின்ற சர்வேசுரனுடைய பரிசுத்த  சம்மனசானவரே! தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து என்னைக் காத்து வழிநடத்தி ஆண்டருளும்.*


ஆமென்.


இயேசுவுக்கே புகழ்!

மரியாயே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!