Posts

Showing posts from February, 2024

Stop Communion in the hand - 7

Image
  *விசுவாசிகளுடைய இடது கரத்தில், நற்கருணை ஆண்டவரை வழங்கும் குருக்களுக்கும்,இடது கரங்களில் நற்கருணை பெற்று உண்ணும் கத்தோலிக்க விசுவாசிகளுக்கான பதிவு.* இடது கரங்களில் உணவு பொருட்களை எடுத்து உண்டால் கெட்ட பழக்கம்(Bad Habbit). நற்கருணை ஆண்டவரை இடது கரங்களில் பெற்று உண்டால் பக்தி ஒழுக்கமா ? எந்த பொருட்களையும் இடது கரத்தில் வாங்கக்கூடாது மரியாதை குறைவாகும். ஆனால் நற்கருணை ஆண்டவரை இடது கரத்ததில் வாங்கினால் பக்தி மரியாதையா ? மனசு சுத்தமாக இருந்தால் போதும் எந்த கையில் வேண்டுமானலும் நற்கருணை ஆண்டவரை பெற்று உண்ணலாம் என்பவர்களே ! இடது கரத்தில் யாரும் சிலுவை அடையாளம் (தந்தை மகன் தூய ஆவி‌ ) போடுவதில்லையே ஆனால் சிலுவையில் மரித்து, உயிர்த்த நற்கருணை ஆண்டவருக்கு மட்டும் இடக்கரம் ஏன் ? கல்,மண்,மரத்திலான சொரூபங்களை இடது கரத்தில் யாரும் தொட்டு முத்திசெய்வதில்லையே ஆனால் உயிருள்ள நற்கருணை ஆண்டவரை, இடது கரத்தில் பெற்று அவசங்கை செய்வதேன் ? தீர்த்த தொட்டியிலுள்ள தீர்த்தத்தை இடது கரங்களில் யாரும் தொடுவதில்லையே ஆனால் இயேசுவின் திரு உடலை பெறும்போது மட்டும் இடதுகை ஏன் ? மனசு சுத்தமாக இருந்தால் போதும் எந்த கரங்...

திருச்சபையின் ஒற்றுமைக்கு காரணம் நற்கருணையே!

  நற்கருணை தான் திருச்சபையை உருவாக்குகின்றது.நற்கருணை இல்லையென்றால் கத்தோலிக்க குடும்பமே கிடையாது.திருச்சபையின் உறைவிடமும் உச்சகோடியும் நற்கருணை தான்.இவ்வளவு ஆழமான நற்கருணையின் மீது கைவைத்தால் திருச்சபையை அழித்துவிடலாம். ஆயனை அடித்தால் ஆடுகள் சிதறும்.நற்கருணையை அடித்தால் ஆடுகள் சிதறும். திருச்சபையை அழிப்பதற்கு திருச்சபையின் உள்ளே இருந்தும் வெளியே இருந்தும் செயல்படுகின்றார்கள். அருட்தந்தை.வர்கீஸ். நல்ல பாவசங்கீர்தனம் செய்து பரிசுத்தமாக, நற்கருணை ஆண்டவரை முழங்காலில் நின்று நாவில் பெறுவோம். முழு video காண https://youtu.be/PpzbRrk1DRA?si=ozS4b494npYpE5hz இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  When you pray the Rosary you pray the New Testament.  Powerful. நீங்கள் ஜெபமாலை ஜெபிக்கும்போது புதிய ஏற்பாட்டை ஜெபிக்கிறீர்கள்.  சக்தி வாய்ந்தது. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பரிசுத்த ஜெபமாலை எண்ணற்ற ஆசீர்வாதங்களின் களஞ்சியம்."  -ஆசிர்வதிக்கப்பட்ட ஆலன் டி லா ரோச் “The Holy Rosary is the storehouse of countless blessings.” -Blessed Alan de la Roche. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
    நம்மை புண்படுத்துபவர்களை மன்னிப்பதும், அவர்களுக்காக ஜெபிப்பதுமே கிறிஸ்தவ பழிவாங்குதல். புனித தொன்போஸ்கோ CHRISTIAN REVENGE CONSISTS IN FORGIVING THOSE WHO OFFEND US AND PRAYING FOR THEM. St.Jonh Bosco. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மனம் மாறவே தவக்காலம்

Image
   மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். லூக்கா 13-3. கடவுளை நோகச்செய்த நமது பாவங்களுக்காக மனவருந்தி, மனம்திருந்தி கடவுளுடன் ஒப்புரவாகவே தவக்காலம். செய்த பாவங்களுக்கு கடவுள் தண்டிப்பதற்கு முன் உரிய பரிகாரங்களை (ஒறுத்தல், தியாகங்களை) செய்து நம்மை நாமே தண்டித்தும் கொள்ளவே தவக்காலம். செய்த பாவங்களுக்கு  ஈடு செய்யும் விதமாக தான, தர்மங்கள் செய்து புண்ணியங்களை  செய்யவே தவக்காலம். பகைமையாலும் பழிவாங்கும் எண்ணத்தாலும் விரிசல் ஏற்ப்பட்டுள்ள உறவுகளில் மன்னிப்பை வழங்கி சமாதானமாக வாழவே தவக்காலம். விழிகள் மூடுவதற்கு முன் விழித்துக் கொள்வோம். மண்ணோடு மண்ணாவதற்குள் அழியாத ஆன்மாவை காத்துக்கொள்வோம். சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  தற்போது நமது பாதுகாவலர்களாக இருக்கும் காவல்தூதர்கள், தீர்ப்பு நாளில் நம் மீது குற்றம் சாட்டுபவர்களாக மாறிவிடுவார்களோ என்று அஞ்ச வேண்டும்.  - புனித அலோசியஸ் கோன்சாகா. It is to be feared that the angels, who are at present our guardians, will become our accusers at the day of judgment. - St. Aloysius Gonzaga. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நீங்கள் அனுபவிக்கும் சோதனைகளுக்காக வருத்தப்படாதீர்கள். இறைவன் நமக்கு ஒரு குறிப்பிட்ட நல்லொழுக்கத்தை வழங்க நினைக்கும் போது, முதலில் எதிர் தீமையால் நாம் சோதிக்கப்படுவதற்கு அவர்  அனுமதிக்கிறார்.  -புனித.பிலிப் நேரி. Do not grieve over the temptations you suffer. When the Lord intends to bestow a particular virtue on us, He often permits us first to be tempted by the opposite vice.” -St. Philip Neri. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நற்கருணைஆராதனைக்கு ஒரு நாளைக்கு முன்பாக, இயேசு முத்திபேறுபெற்ற.தினா பெலங்கருக்கு நரகத்தின் சரிவிலுள்ள பல ஆன்மாக்களைக் காட்டினார். அவரது நற்கருணை ஆராதனைக்குப் பிறகு, இயேசு அதே ஆத்மாக்களை கடவுளின் கைகளில் காட்டினார்.  நற்தருணை ஆராதனை மூலம் ஏராளமான ஆன்மாக்கள் சொர்க்கத்திற்குச் செல்கின்றன, இல்லையெனில் நரகத்திற்குச் சென்றிருக்கும்.  ஒருவர் தங்கள் இரட்சிப்புக்கான விலைமதிப்பற்ற  அருளைப் பெறுவதன் மூலம் மற்றவர்களின் வாழ்க்கையில் இல்லாததை ஈடுசெய்ய முடியும் என்று இயேசு தினா பெலங்கரிடம் கூறினார். Bl. Dina Belanger (1897 to 1929) One day before her Holy Hour, (Eucharistic Adoration) Jesus showed Blessed Dina Belanger a multitude of souls on the precipice of hell. After her Holy Hour, Jesus showed the same souls in the hands of God. He told her that through Holy Hours of prayer a multitude of souls go to Heaven who otherwise would have gone to hell as one person can make up for what is lacking in the lives of others by winning precious efficacious graces for their salvation. சேச...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
நாம் அனைவரும் ஒரு நாள் இறக்க வேண்டும் என்பதால், புனித சூசையப்பர் மீது சிறப்பான பக்தியை வைத்திருக்க வேண்டும், அவர் நமக்கு நிம்மதியான மரணத்தைப் பெற்றுதருவார்."  -புனித அல்போன்சஸ் லிகுயோரி. நல்மரணத்தின் பாதுக்காவலாரான புனித சூசையப்பரே ! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். Since we all must die, we should cherish a special devotion to St. Joseph, that he may obtain for us a happy death.” -St Alphonsus Liguori

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
 #mothermary கடவுள் ஒருவரை  பரிசுத்தமாக மாற்ற வேண்டும் என்று விரும்பினால், அவர்களை கன்னி மரியாயின் சிறந்த பக்தர்களாக ஆக்குகிறார். புனித லூயிஸ் டி மாண்ட்ஃபோர்ட். When God wants someone to become very holy, He makes them great devotees of the Virgin Mary… St. Louis de Montfort. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிறர்சிநேகமாயிருங்கள்

Image
  பிறர்சிநேகமாயிருங்கள்.தொந்தரவு கொடுக்கிறவர்களை சகித்துக்கொள்வது எளிதான புண்ணியமல்ல.அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இயேசு கடவுள் மனித காவியம். இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நம் குழந்தைகளை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்

  நம் குழந்தைகள் வழிதவறி செல்லாமல் இருப்பதற்கு இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டியது அவசியம். இறைவனுக்கு எவ்வாறு நமது குழந்தைகளை அர்ப்பணிப்பது ? *தினமும் குழந்தைகளை செபமாலை செபிக்க வைப்பது. *பாவசங்கீர்தனம் செய்ய தூண்டுவது. *இறைவார்த்தை படிக்க வைப்பது. *குழந்தைகளுக்காக திருப்பலி ஒப்புக்கொடுத்து செபிப்பது. Rev.Fr.Raphael khothor vc. பாப்புலர் மிஷன் தியான மையம், திருச்சிராப்பள்ளி, இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக  வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மிகக் கடுமையான சோதனைகள் திருச்சபைக்குக் காத்திருக்கின்றன. நடக்கப்போவதை ஒப்பிடுகையில் இதுவரை நாம் அனுபவித்தது ஒன்றும் இல்லை. . . இதுபோன்ற ஒரு மோசமான நேரத்தில் இரண்டு விஷயங்கள் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும்: தேவமாதாவின் மீதான பக்தி மற்றும் அடிக்கடி திவ்விய நற்கருணை உட்கொள்ளும் பக்தி ." - புனித ஜான் போஸ்கோ. Very grave trials await the Church. What we have suffered so far is almost nothing compared to what is going to happen . . . Only two things can save us in such a grave hour: devotion to Mary and frequent Communion."  - St. John Bosco. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.