மனம் மாறவே தவக்காலம்
மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.
லூக்கா 13-3.
கடவுளை நோகச்செய்த
நமது பாவங்களுக்காக மனவருந்தி, மனம்திருந்தி கடவுளுடன் ஒப்புரவாகவே தவக்காலம்.
செய்த பாவங்களுக்கு கடவுள் தண்டிப்பதற்கு முன் உரிய பரிகாரங்களை (ஒறுத்தல், தியாகங்களை) செய்து நம்மை நாமே தண்டித்தும் கொள்ளவே தவக்காலம்.
செய்த பாவங்களுக்கு ஈடு செய்யும் விதமாக தான, தர்மங்கள் செய்து புண்ணியங்களை செய்யவே தவக்காலம்.
பகைமையாலும் பழிவாங்கும் எண்ணத்தாலும் விரிசல் ஏற்ப்பட்டுள்ள உறவுகளில் மன்னிப்பை வழங்கி சமாதானமாக வாழவே தவக்காலம்.
விழிகள் மூடுவதற்கு முன் விழித்துக் கொள்வோம்.
மண்ணோடு மண்ணாவதற்குள்
அழியாத ஆன்மாவை காத்துக்கொள்வோம்.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment