Stop Communion in the hand - 7

 


*விசுவாசிகளுடைய இடது கரத்தில், நற்கருணை ஆண்டவரை வழங்கும் குருக்களுக்கும்,இடது கரங்களில் நற்கருணை பெற்று உண்ணும் கத்தோலிக்க விசுவாசிகளுக்கான பதிவு.*

இடது கரங்களில் உணவு பொருட்களை எடுத்து உண்டால் கெட்ட பழக்கம்(Bad Habbit).

நற்கருணை ஆண்டவரை இடது கரங்களில் பெற்று உண்டால் பக்தி ஒழுக்கமா ?

எந்த பொருட்களையும் இடது கரத்தில் வாங்கக்கூடாது மரியாதை குறைவாகும். ஆனால் நற்கருணை ஆண்டவரை இடது கரத்ததில் வாங்கினால் பக்தி மரியாதையா ?

மனசு சுத்தமாக இருந்தால் போதும் எந்த கையில் வேண்டுமானலும் நற்கருணை ஆண்டவரை பெற்று உண்ணலாம் என்பவர்களே !

இடது கரத்தில் யாரும் சிலுவை அடையாளம் (தந்தை மகன் தூய ஆவி‌ ) போடுவதில்லையே ஆனால்

சிலுவையில் மரித்து, உயிர்த்த நற்கருணை ஆண்டவருக்கு மட்டும் இடக்கரம் ஏன் ?

கல்,மண்,மரத்திலான சொரூபங்களை இடது கரத்தில் யாரும் தொட்டு முத்திசெய்வதில்லையே ஆனால்

உயிருள்ள நற்கருணை ஆண்டவரை, இடது கரத்தில் பெற்று அவசங்கை செய்வதேன் ?

தீர்த்த தொட்டியிலுள்ள தீர்த்தத்தை இடது கரங்களில் யாரும் தொடுவதில்லையே ஆனால் இயேசுவின் திரு உடலை பெறும்போது மட்டும் இடதுகை ஏன் ?

மனசு சுத்தமாக இருந்தால் போதும் எந்த கரங்களிலும் நற்கருணை ஆண்டவரை பெறலாம் என்கின்ற அன்பர்கள் அவர்களுக்கே தெரியாமல் மற்ற எல்லா பக்தி முயற்சிகளுக்கும் வலது கரத்தைப் பயன்படுத்துவதும்,தன்னை படைத்த கடவுளை பெறுவதற்கு மட்டும்  இடது கரங்களை பயன்படுத்துவது, மாபெரும் அவசங்கை என இனியாவது புரிந்துக்கொள்ளவோமா ?

பிறமதத்தினர் பிரசாதத்தை ஒரு நாளும் இடது கரத்தில் பெறமாட்டார்கள் ஆனால் கத்தோலிக்க கிறித்தவர்களாகிய நாம், நம் கடவுளை இடது கரத்தில் தான் பெற்று உண்போம்.இது எப்பேற்ப்பட்ட அவமரியாதை நம் ஆண்டவருக்கு.

முதல் முறை புதுன்மை பெறும்போது எப்படிபெற்றோம்.இப்போது எப்படி பெறுகின்றோம் ?

அன்று முழங்காலில் நின்று பக்தியுடன் நாவில் பெற்றோம். இன்றோ நின்று கொண்டு இடது கரத்தில் பெற்று உண்ணும் நிலைக்கு சென்றுவிட்டோம்.அவர் மாறவில்லை. அன்றும் நற்கருணை, கடவுள் தான். இன்றும் நற்கருணை, கடவுள் தான்.

மாறியது நாமே.

மரியாதையை குறைத்தது நாமே.

*கடவுள் பொறுமையாக இருப்பதும் கால அவகாசம் தருவதும், நமது மனமாற்றத்திற்கும்,செய்த

தவறை திருத்துவதற்குமே!

தவறை நியாயப்படுத்தி, செய்யும்  தவறை தொடர்ந்துக்கொண்டே இருப்பதற்கு அல்ல.*

இனியாவது விழித்துக்கொள்வோம்.

தாழச்சியுடன் முழங்காலில்(முடிந்தவர்கள்) நின்று நம் நற்கருணை ஆண்டவரை  நாவில் பெறுவோம்.

விசுவாசிகளே ! நம் ஆண்டவரை பீச்சாங்கையில் வாங்காதீர்கள் ! 

குருக்களே ! நம் ஆண்டவரை விசிவாசிகளின் நொட்டாங்கையில் வழங்காதீர்கள் ! இப்படியெல்லாம் விழிப்புணர்வு செய்யும் நிலை வந்துவிட்டதே.

Becarful..

அவர் கடவுள் !

நற்கருணை ஆண்டவரை அவசங்கை செய்வதற்கு அலகை விரிந்துள்ள வலையில் இருந்து எழுவோம்.

Communion in the hand is one of the grievous phenomenos and evils within the church.

- Bishop Athanasius Schneider.

சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!