Posts

Showing posts from July, 2020

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
ஓ கடவுளின் அன்னையே,தங்களில் என் நம்பிக்கையை வைப்பேனாகில் நான் மீட்கப்படுவேன்.நான் தங்களின் பாதுகாப்பில் இருந்தால்,நான் அஞ்சுவதற்கொன்றுமில்லை‌. ஏனெனில் உங்களின் பக்தனாயிருப்பது மீட்பின் உறுதிப்பாட்டைக் கொண்டிருப்பதாகும்; கடவுள்,தாம் மீட்க விரும்புவோருக்கு இந்த வரத்தை அருளுகிறார்.‌ புனித தமாசீன் அருளப்பர். இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
மாமரியின் புனித நாமத்தை நம்பிக்கையுடன் வேண்டுவோருக்கு நம் ஆண்டவர் அருளும் மூன்று தனிச்சலுகைகள். 1.பாவங்களுக்கு உத்தம மனஸ்தாப வரம். 2.குற்றங்களுக்கு சரியான பரிகாரம் செய்யும் வரம். 3.புண்ணிய வாழ்வில் முழு நிறைவை அடைவதற்கான பலமும் இறுதியில் மோட்ச மகிமையும்  அளிப்பதாக புனித பிரிஜித்தம்மாளுக்கு  நம் ஆண்டவர் வெளிப்படுத்தியது

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
சமுத்திரத்தின் நட்சத்திரமே வாழ்க ! கப்பல் ஓட்டும் மாலுமிகள் துறை சேர,ஒரு கலங்கரை விளக்கால் வழி காட்டப்படுவது போல்,கிறிஸ்தவர்கள் மாமரியால் மோட்சத்துக்கு வழிகாட்டபடுகிறார்கள். புனித தாமஸ் ரெனால்ட்ஸ்

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
பிசாசு ,பாவிகளை முதலில் இறையருளை இழக்கச் செய்ய அனைத்து முயற்சிளையும் எடுக்கிறது.ஈசாக்கு இஸ்மாயிலோடு இருப்பதையும்,இஸ்மாயில் ஈசாக்குக்குத் தீய பழக்கங்களைக் கற்றுக் கொடுப்பதையும் கண்ட சாறாள்,ஆபிரகாமிடம் இஸ்மாயிலையும் அவனுடைய தாய் ஆகாரையும் விரட்டி விடக் கேட்டாள்:  "இந்தவேலைகாரியையும் அவள் புதல்வனையும் துரத்தி விட வேண்டும்"(ஆதி.21:10) என்றாள். மகன் மட்டும் வீட்டை விட்டுத் துரத்தப்படுவது அவளுக்குத் திருப்தியளிக்கவில்லை ; தாயும் போக வேண்டும் என்றாள். இல்லாவிடில், தாயைப் பார்க்க வேண்டும் என்ற சாக்கில்,அவன்  வீட்டிற்கு அடிக்கடி வர நேரிடும் என்று கருதினார்.  அதேபோல சாத்தானும் , ஓர் ஆன்மா, இயேசுக் கிறிஸ்துவை மட்டும் விரட்டிவிடுவதில் திருப்தியுறுவதில்லை ;அவருடைய தாயும் விரட்டப்பட விரும்புகிறது.  "இந்த வேலைக்காரியையும் அவள் புதல்வனையும் துரத்திவிட வேண்டும் ".இல்லாவிடில் தாயானவள் தம் பரிந்துரையால் மீண்டும் தம் திருக்குமாரனைக் கொண்டு வந்து விடுவார்கள் என்று சாத்தான் அஞ்சுகிறது."அதனுடைய பயம் ஆதாரமுள்ளது தான்;ஏன்னெனில்  *தேவ தாயின் ஊழியத்தில் பிரமாணிக்கமாயிருப்பவன், விரை...

புனிதர்களின் பொன்மொழிகள் 14/07/2020

Image
கன்னி மாமாரியின் ஊழியத்தை அசட்டை செய்பவன் தன் பாவங்களிலேயே மடிவான். கன்னி மாமாரியை மன்றாடாதவன் ஒருபோதும் மோட்சம் சேர மாட்டான். புனித பொனவெந்தூர்.

புனிதர்களின் பொன்மொழிகள் 16/07/2020

Image
சமுத்திரத்தின் நட்சத்திரமே வாழ்க ! கப்பல் ஓட்டும் மாலுமிகள் துறை சேர,ஒரு கலங்கரை விளக்கால் வழி காட்டப்படுவது போல்,கிறிஸ்தவர்கள் மாமரியால் மோட்சத்துக்கு வழிகாட்டபடுகிறார்கள். புனித தாமஸ் ரெனால்ட்ஸ். இயேசுவுக்கே புகழ்! அன்னை மரியே வாழ்க !

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
 தாம் இந்த நேசத்துக்குரிய திருமகளை(மாமரி) படைத்திருப்பதன் நோக்கம் ,அவர்கள் ஓர் இனிய தூண்டில் இரையாகச் செயல்பட்டு,மனிதரை குறிப்பாக பாவிகளை பிடித்துக் கடவுளிடம் கொண்டு வருவதற்காகத்தான். சீயென்னா கத்தரீனுக்கு நமதாண்டவர் வெளிப்படுத்தியது.

புனிதர்களின் பொன்மொழிகள் 10/07/2020

Image
மாமரியின் சம்மதமின்றி இறைவன் மனிதனாக விரும்பாததற்க்குக் காரணம் முதலில் நாம் மாமரிக்கு மிக்கக் கடமைப்பட்டிருக்கவும்,இரண்டாவது எல்லாருடைய மீட்பும் பரிசுத்த கன்னித்தாயின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்துக்கொள்ளவுமே" புனித பீட்டர் டேமியன்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
இறைவனின் வரங்களை  பெற நாம் தகுதியற்றவர்களாக இருப்பதால் , நாம் கேட்டதைப் பெறுவதற்காக,அது முதலில் மாமரிக்கு வழங்கப்பட்டு ,பின்னர் அவர்கள் வழியாக நமக்கு கிடைக்கிறது. புனித  பெர்நார்து. கடவுளை இந்த உலகம் மாதா வழியாகவே மனிதனாக பெற்றுக்கொண்டது. மாதா இல்லாமல் இயேசுவின் மனித அவதாரமே இல்லை. இந்த மாதாவை பகைத்து இயேசுவிடம் வரங்களை பெற்றுவிடலாம் என்று நினைப்பவர்கள் லூசிபரின்  வலையில் சிக்கிகொண்டவர்கள். இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
அன்னையே ! தாங்கள் மட்டுமே எங்கள் அனைவருக்கும் பொதுவான மீட்பரின் தாய்,தாங்கள் இறைவனின் பத்தினி,தாங்களே பரலோக பூலோக இராக்கினி. தாங்கள் எங்களுக்காக பரிந்து பேசவில்லையென்றால் எந்தப் புனிதரும் எங்களுக்காக வேண்டவும் மாட்டார்கள்.மாறாக,தாங்கள் எங்களுக்காக மன்றாட தொடங்கினால்,எல்லாப் புனிதர்களும் வேண்டுவார்கள்,உதவவும் செய்வார்கள். புனித வினவி. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள் 06/07/2020

Image
புனிதர்கள் தம் பக்தர்கள் கேட்கும் உதவிகளை பெற மாதாவையே அவர்கள் நாட வேண்டுமென்பதை யாரும் நம்புவதில்லை அல்லது கனவில் கூட எண்ணிப் பார்த்ததில்லை. "மக்களுள் செல்வர் உம் தயவை நாடி வருகின்றனர்" சங்கீதம் (44:13) என்ற சங்கீத வசனத்திற்க்கு. விளக்கமாக புனிதர்கள் தான் , கடவுளுடைய செல்வந்தர்களும் முக்கியமானவர்களும் .அவர்கள் தங்கள் தாசர்கள் கேட்கும் மன்றாட்டுகளை பெற,மாமரியைத்தான் நாடுகின்றனர். மறைதிரு.சூவாரஸ்.

புனிதர்களின் பொன்மொழிகள் 05/07/2020

Image
பிள்ளையை அதன் தாய் மரியாளுடன் கண்டனர்.மத்தேயு 2-1. நாம் இயேசுவை காண விரும்பினால் அவருடைய அன்னை மாமரியிடம்  போகவேண்டும்.மாமரியிடம் காண முயற்சி எடுக்காது,வேறிடத்தில் நாம் இயேசுவைத் தேடுவது வீண். புனித பொனவேந்தூர்

புனிதர்களின் பொன்மொழிகள் 05/07/2020

Image
மாமரியின் சிபாரிசின்றி அருட்கொடைகளைக் கேட்போரும்,அவற்றை எதிர்ப்பார்ப்போரும், இறக்கைகளின்றி பறக்க முயல்வோராவர் புனித அந்தோனீனுஸால்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
வார்த்தையானவரை தம் திருஉதிரத்தில் கருத்தரித்த வினாடியிலிருந்து மாதா பரிசுத்த ஆவியின் எல்லாக் கொடைகள், வரங்கள் மீதும் சட்டப்படியான தனியொரு  உரிமையை பெற்றார்கள்.எனவே அவர்களின் கரங்கள் வழியன்றி வேறு வழியில் இறைவனிடமிருந்து எந்தவொரு படைப்புகளும் எந்த வரங்களையும், பெற்றதில்லை. புனித சீயென்னா பெர்னார்தீனால். பரிசுத்த ஆவியானவர், மாதாவிடமிருந்து இறைமகனை பிறக்கச்செய்தார். மாதா இன்றி பரிசுத்த ஆவியானவரால், இயேசுவையே நமக்கு தர இயலாத போது, மாதாவைப் பகைப்பவர்கள்   பரிசுத்த ஆவியானவரிடமிருந்து எந்த ஒரு வரங்களையோ, கொடைகளையோ ஒருபோதும் பெறமுடியாது. இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள் 01/07/2020

Image
எவ்வாறு ஓர் அரசனால் அனுப்பப்படும் கருணை ஆணை ஒவ்வொன்றும் அரண்மனை வாயில்கள் வழியாகாத்தான் கடந்து செல்கின்றனவோ அவ்வாறே, மோட்சத்திலிருந்து உலகிற்கு வரும் ஒவ்வொரு அருட்கொடையும் மாமரியின் கரங்கள் வழியாகவே கடந்து வருகின்றன. புனித பெர்நார்து