புனிதர்களின் பொன்மொழிகள்
"இந்தவேலைகாரியையும் அவள் புதல்வனையும் துரத்தி விட வேண்டும்"(ஆதி.21:10) என்றாள்.
மகன் மட்டும் வீட்டை விட்டுத் துரத்தப்படுவது அவளுக்குத் திருப்தியளிக்கவில்லை ; தாயும் போக வேண்டும் என்றாள். இல்லாவிடில், தாயைப் பார்க்க வேண்டும் என்ற சாக்கில்,அவன் வீட்டிற்கு அடிக்கடி வர நேரிடும் என்று கருதினார்.
அதேபோல சாத்தானும் , ஓர் ஆன்மா, இயேசுக் கிறிஸ்துவை மட்டும் விரட்டிவிடுவதில் திருப்தியுறுவதில்லை ;அவருடைய தாயும் விரட்டப்பட விரும்புகிறது. "இந்த வேலைக்காரியையும் அவள் புதல்வனையும் துரத்திவிட வேண்டும் ".இல்லாவிடில் தாயானவள் தம் பரிந்துரையால் மீண்டும் தம் திருக்குமாரனைக் கொண்டு வந்து விடுவார்கள் என்று சாத்தான் அஞ்சுகிறது."அதனுடைய பயம் ஆதாரமுள்ளது தான்;ஏன்னெனில்
*தேவ தாயின் ஊழியத்தில் பிரமாணிக்கமாயிருப்பவன், விரைவில் மாமரியின் வழியாகக் கடவுளையே பெற்று விடுவான்.*
கல்விமான் பாச்சியுச்செல்லி
கல்விமான் பாச்சியுச்செல்லி

Comments
Post a Comment