Posts

Showing posts from February, 2025

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  *அரூபிகளின் தன்மை பகுத்தறிவதற்கேற்ற ஒழுங்குகள்-2* ஆத்துமத்திலுள்ள பாவ  அசுத்தங்களை சுத்தம் செய்து மனமாற்றம்பெற்று இறைவனை அதிகமாக அன்பு செய்து இறைவனில் வளர்ச்சி அடைய விரும்புகிறவர்களுக்கு கெட்ட அரூபி(devil)அவர்கள் இறை நம்பிக்கையில் வளர்ந்து புண்ணியங்களை அடையாத படி ஆத்துமத்தில் குழப்பமும் ,வீண் இலக்கணத்தையும்,குருட்டு நியாயங்களால்  இறைநம்பிக்கையில் தடைகளையும், சந்தேகத்தையும்,நம்பிக்கையற்ற தன்மையையும் ஏற்படுத்துகிறது.  நல்ல அரூபியோ(Guardian Angel) அப்பேர்ப்பட்ட இடையூறுகளையெல்லாம் அகற்றி அவர்கள் ஞானவளர்ச்சி அடைவதற்கு தேவையான மனச்சமாதானம்,வலிமையும்,மன ஆறுதல்,பக்தியாக கண்ணீர் சிந்துதல் போன்ற நல்ல ஏவுதலை கொடுக்கிறது. புனித இஞ்ஞாசியார். Rules for the discernment of spirits Second Rule.   In the persons who are going on intensely cleansing their sins and rising from good to better in the service of God our Lord, it is the method contrary to that in the first Rule, for then it is the way of the evil spirit to bite, sadden and put obstacles, disquieting with false reason...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
இயேசுவைப் போல் நாம் ஏழைகளுக்குச் சேவை செய்யக் வேண்டாம்.  நாம் ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும், ஏனென்றால் அவர்களே இயேசு!  புனித அன்னை தெரசா We should not serve the poor like they were Jesus; We should serve the poor because they are Jesus!!  Saint Mother Theresa இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  அரூபிகளை பகுத்துணர்தலின் முதல் விதி பாவிகளை பாவத்தின் போதையிலேயே அமிழ்த்தி  வைத்திருப்பது தீய ஆவிகளுக்கேயுரியது(devil). எளிதாய் அடிக்கடி சாவான பாவத்தில் விழுகிறவர்களுக்கு கெட்ட அரூபி(devil) அவர்களை தொடர்ந்து அதே நிலமையில் இருக்கவும் இன்னும் அதிகமாக பாவ அசுத்தத்தில் உழலவும்,சரீரத்ததுக்கடுத்த சுகபோகங்களை தாராளமாய் அவர்கள் கண்முன் வைக்கிறது. நல்ல அரூபி(Gurdian Angel) அதற்கு  விரோதமாய் நல்ல புத்தியை தெளிவித்து மனசாட்சியின் கண்டனத்தை உணரும்படி செய்கிறது. புனித இஞ்ஞாசியார். The Discernment of Spirits The first Rule: In the persons who go from mortal sin to mortal sin, the enemy is commonly used to propose to them apparent pleasures, making them imagine sensual delights and pleasures in order to hold them more and make them grow in their vices and sins.  In these persons the good spirit uses the opposite method, pricking them and biting their consciences through the process of reason. St.Ignatius இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  விழுவது மனிதம், ஆனால் பாவத்திலேயே நிலைத்திருப்பது பிசாசுத்தனம். புனித கேத்தரின். To fall is human, but to persist in sin is devilish. St. Catherine of Siena சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மனித சட்டத்தின் முக்கிய நோக்கம் மனிதர்களிடையே  நட்பை உருவாக்குவது போல, தெய்வீக சட்டத்தின் முக்கிய நோக்கம் மனிதனுக்கும்,கடவுளுக்கும்  நட்பை ஏற்படுத்தவே. புனித தாமஸ் அக்குவினாஸ் Just as the principal intention of human law is to create friendship between man and man, so the chief intention of Divine law is to establish man in friendship with God. St.Thomas Aquinas  இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பிசாசு எல்லா வழிகளிலும் மற்றவர்களின் நன்மைகளை நம்மிடமிருந்து மறைத்து, எதிர்மறையான வெளிச்சத்தைக் காட்ட முயற்சிக்கிறான்.  கவனமாக இருங்கள்,அவன் கண்களால் மற்றவர்களைப் பார்க்காமல் எச்சரிக்கையாக இருங்கள்."  + புனித ஜான் "The devil tries in every way to conceal from us the good in others and present them to us in a negative light. Take heed and beware of ever looking at others through his eyes." + St. John of Kronstadt. இயேசுவுக்கு புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நரகத்தின் சக்திகள் வலிமையானவை, ஆனால் செபம் எல்லா பிசாசுகளையும் விட வலிமையானது.  புனித பெர்னார்ட் The powers of hell are mighty but prayer is stronger than all the devils. -St. Bernard. இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுள் பார்க்கும் அனைத்தையும் நாம் பார்க்க முடிந்தால், அவர் விரும்பும் அனைத்தையும்  தயக்கமின்றி நாமும் விரும்புவோம்.  துன்பங்களுக்காக நாம் அவரிடம் முழங்காலில் மன்றாடுவோம்." -  புனித கிளாட்டிலா கொலம்பியர் If we could see all He sees, we would unhesitatingly wish all He wishes. We would beg Him on bended knees for those afflictions we now ask Him to spare us."  - St. Claude de la இயேசுவுக்கே புகழ்! தேவமாதாதவே வாழ்க! புனித சூசையப்பரே‌ எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிப்ரவரி 14 புனித.வாலென்டீன்‌ திருநாள்‌

Image
  *பிப்ரவரி 1️⃣4️⃣ம்‌ தேதி வேதசாட்சியான புனித.வாலென்டீன்‌ திருநாள்‌* இவருடைய திருநாளை உலகம்‌ முழுவதும்‌ கொண்டாடுகிறது. ஆனால்‌, தூய்மைக்கு எதிரான அசுத்தத்தில்‌ மூழ்கியிருக்கிற உலகத்தினால்‌, உத்தம கக்தோலிக்க குருவானவரும் வேதசாட்சியுமான புனித வாலென்டினைப்‌ பற்றிப்‌ புரிந்து கொள்ளாமலேயே , எதிர்மறைக்‌ கருத்துக்களால்‌, அவரை பசாசுத்தனமாகப்‌ புகழ்ந்து கொண்டாடுவதைக்கண்டு வேதனையடைகிறோம்‌; புனித வாலென்டின்‌ என்பவர்‌ யார்‌?  இவர்‌, ஒரு கத்தோலிக்க குருவானவர்‌; உரோமையை 2ம் கிளாாடியுஸ்‌ என்பவன்‌ ஆண்டபோது, இவர் உரோமையில்‌ வசித்தார்‌. இச்சமயத்தில்‌, உரோமையிலிருந்த அஞ்ஞான மதத்தின்‌ விக்கிரகங்களை வழிபடாத காரணத்தினால்‌, கிறீஸ்துவர்களை, இவன்‌ சிறையில்‌ அடைத்தான்‌.  *ஏன்‌ புனித வாலென்டின்‌ வேதசாட்சியாகக்‌ கொல்லப்பட்டார்‌?*  இதன்‌ விவரத்தை நன்கு அறிந்துகொள்வதற்கு, நாம்‌ உரோமையின்‌ சரித்திரத்தைப்‌ பற்றி பார்ப்போம்‌: பண்டைக்கால உரோமாபுரியில்‌ இந்த நாளில் தான்‌, சுத்திகரத்தையும்‌ செழுமையையும்‌ குறிக்கும்‌ அடையாளமாக பெப்ருவா என்று அழைக்கப்படுகிற மூன்று நாள்‌ திரு விழா துவங்கும்‌! இத்திருவிழா...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஒவ்வொரு குழந்தையும் நமக்கு கடவுளின் புன்னகையைத் தருகிறது..."  - திருதந்தை 16-ஆம் பெனடிக்ட். "Every child brings us God’s smile..." - Pope Benedict XVI. இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  தீமைகளில் மகிழும் போது, நன்மையின் சுவையை எவராலும் அறிய முடியாது.  தீமைகள் ஒருவனை மகிழ்விக்கும் வரை, நன்மை அவனுக்கு இன்பத்தைத் தராது.  தீமை அதிருப்தி தர தொடங்கும் போது மட்டுமே அவன் நன்மையில் மகிழ்ச்சியடையத் தொடங்குவார்.  புனித கிறிசோஸ்டம். For no one can discern the flavour of good things, while revelling in what is evil. For as long as evil delights him, good cannot give him pleasure. Then only will he begin to delight in what is good, when evil begins to displease him. -St. Chrysostom இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உத்தரியம் அணிவோம்.

  One day through the Rosary and Scapular,I will save the world."Our Lady of Rosary to St. Dominic- "Hail Mary, full of grace,the Lord is with Thee, blessed art Thou among women,and blessed is the fruit of Thy womb,Jesus.Holy Mary,Mother of God,Pray for us sinners,now and at the hour of our death.Amen உத்தரியம் அணிவோம். அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமான அலகையிடமிருந்து நம்மையும், நம் தலைமுறைகளையும் பாதுகாப்போம். அலகையின் செயல்களைத் தொலைக்கவே இறைமகன் தோன்றினார். 1யோவான் 3-8

முதல் வெள்ளி பக்திமுயற்சி

Image
  *கிறிஸ்தவமே விழித்தெழு!  நம் ஆண்டவரின் திருஇருதயத்தை குத்தி காயப்படுத்தும் முட்கள் நமது பாவங்களே !* தமது கல்வாரிப் பாடுகளும், மரணமும் இவ்வளவு அதிகமான ஆன்மாக்களுக்கு பயனற்று போவதைக் காண்பதை விட சேசுவின் திரு இருதயத்தை அதிகமாக நோகச்செய்வது வேறு எதுவுமில்லை. புனித ஜான் மரிய வியான்னி. ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளி நமது தேவைகளை திருஇருதய ஆண்டவரிடம் மன்றாடுவதற்கு அல்ல. நம் ஒவ்வொருவருடைய பாவங்கள்,நமது குடும்பத்தார் செய்த பாவங்கள், ஒட்டுமொத்த மனுகுலத்தின் பாவங்களால்  காயப்பட்டுள்ள இயேசுவின் திரு இருதயத்திற்கு, ஆறுதலாக செபம்,தவம்,பாவ பரிகாரம் செய்யவதற்கே.  நல்ல பாவசங்கீர்தனம் செய்து திருப்பலில் பங்கேற்று பெறுகின்ற நற்கருணையை இயேசுவின் திரு இருதய காயங்களுக்கு ஆறுதலாக நாம்  ஒப்புக்கொடுக்க வேண்டும்.இந்த முதல் வெள்ளி பக்தி முயற்சியை,திரு இருதய ஆண்டவர் புனித மார்கரீத் மரியம்மாளிடம் வெளிப்படுத்தியது. கடவுளிடம் தேவைகளை மட்டும் கேட்கும் காரிய பக்தர்களாகவே நமது வாழ்க்கையை முடித்துவிடாமல், கடவுளின் திரு இருதய காயங்களுக்கு ஆறுதல் தரும் பக்தர்களாக, கடவுளுக்கு உதவும் மனிதர்களாக ...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உன் இரட்சிப்பை பற்றி நீ  உறுதியாக இருக்க விரும்பினால், மிக, மிக, மிகச் சிலரில் ஒருவனாக இருக்கப் பாடுபடு. மனிதர்களில் பெரும்பான்மையானவர்களைப் பின்செல்லாதே. மாறாக, உலகத்தைத் துறந்தவர்களும், நித்தியப் பேரின்ப பாக்கியத்தை அடைந்து கொள்ளும்படி இரவும் பகலும் ஓயாது உழைத்து வருபவர்களுமான பரிசுத்தர்களைப் பின்செல்"  புனித.ஆன்செம். இயேசுவுக்கு புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.