முதல் வெள்ளி பக்திமுயற்சி
*கிறிஸ்தவமே விழித்தெழு!
நம் ஆண்டவரின் திருஇருதயத்தை குத்தி காயப்படுத்தும் முட்கள் நமது பாவங்களே !*
தமது கல்வாரிப் பாடுகளும், மரணமும் இவ்வளவு அதிகமான ஆன்மாக்களுக்கு பயனற்று போவதைக் காண்பதை விட சேசுவின் திரு இருதயத்தை அதிகமாக நோகச்செய்வது வேறு எதுவுமில்லை.
புனித ஜான் மரிய வியான்னி.
ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளி நமது தேவைகளை திருஇருதய ஆண்டவரிடம் மன்றாடுவதற்கு அல்ல.
நம் ஒவ்வொருவருடைய பாவங்கள்,நமது குடும்பத்தார் செய்த பாவங்கள், ஒட்டுமொத்த மனுகுலத்தின் பாவங்களால் காயப்பட்டுள்ள இயேசுவின் திரு இருதயத்திற்கு, ஆறுதலாக செபம்,தவம்,பாவ பரிகாரம் செய்யவதற்கே.
நல்ல பாவசங்கீர்தனம் செய்து திருப்பலில் பங்கேற்று பெறுகின்ற நற்கருணையை இயேசுவின் திரு இருதய காயங்களுக்கு ஆறுதலாக நாம் ஒப்புக்கொடுக்க வேண்டும்.இந்த முதல் வெள்ளி பக்தி முயற்சியை,திரு இருதய ஆண்டவர் புனித மார்கரீத் மரியம்மாளிடம் வெளிப்படுத்தியது.
கடவுளிடம் தேவைகளை மட்டும் கேட்கும் காரிய பக்தர்களாகவே நமது வாழ்க்கையை முடித்துவிடாமல், கடவுளின் திரு இருதய காயங்களுக்கு ஆறுதல் தரும் பக்தர்களாக, கடவுளுக்கு உதவும் மனிதர்களாக மாறுவோமா ?
இயேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment