*ஏன் கடவுள், மனிதன் ஆனார்? -2* கடவுளுக்கு நேர்ச்சையாக, காணிக்கையாக,நன்றியாக ஆடு,மாடு,கோழிகளை பலிக்கொடுப்பது ஆதிமுதல் இருந்த வந்த மனித பக்தி முயற்சியின் வெளிப்பாடாக இருக்கின்றது. ஆனால் முதல் மனிதன் முதல் கடைசி மனிதன் வரை செய்த பாவங்கள்,இனிச் செய்யபோகின்ற பாவங்களால் நோகடிக்கப்பட்ட கடவுளை ஆறுதல்படுத்தவும்,கடவுளின் கோபத்தை தனிப்பதற்காகவும்,ஒட்டு மொத்த மனித குலம் செய்த பாவத்திற்கு ஈடாக பரிகாரம் செய்வதற்காகவும், ஒரு பரிசுத்த பலி தேவைப்படுகின்றது. மனித குலம் பரிசுத்தத்தை இழந்துபோனதால், கடவுள் மனுகுலத்தை மீட்பதற்கு கடவுள் என்ற நிலையில் இல்லாமல் மனித பலியை நிறைவேற்ற கடவுளே கன்னி மரியாயிடம் மனிதனாக பிறந்தார்.ஏனெனில் கடவுள் அரூபியாக இருப்பதால் அவரை பலிக்கொடுக்க இயலாது.காயப்படுத்த சரீரமும், பாவ பரிகாரமாக சிந்துவதற்கு இரத்தமும், கொடூரமான உயிரைதந்து மீட்க பரிசுத்த மனிதபலி தேவைப்படுகின்றது. எனவே *கடவுளின் மனித அவதாரமும் கட்டாயாமகின்றது.* பரிசுத்த பரம திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய *கடவுளே மனித அவதாரம் எடுத்தார்.* ஒவ்வொரு மனிதனின் பாவத்திற்கு பரிகாரமாக ஆட்டுகுட்டிப்போல தன்னையே பலியா...