ஏன் கடவுள், மனிதன் ஆனார்?

 *ஏன் கடவுள், மனிதன் ஆனார்?*



பாவம் கொடியது, அப்பாவத்தால் நீதியுள்ள தேவனுக்கு ஏற்படும் காயமும் நிந்தையும் கொடியது. தேவநீதியோ அளவற்றது. அதற்கு ஏற்பட்ட பங்கம் நீங்க வேண்டுமானால், அதற்கு உரிய பரிகாரமும் அளவற்றதாயிருக்க வேண்டும். அற்ப மனிதனர்களாகிய நமக்கு அத்தகைய பரிகாரத்தைச் செய்ய வல்லமையில்லை! அதனால் தான் பரிசுத்த பரம திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய கடவுள், நமக்காக இப்பரிகாரத்தைச் செய்ய முன் வந்தார். 

ஈன மனிதர்களாகிய நம் மனுஷீகம் தெய்வீகப் பேரின்பக் கடவுளின் தெய்வீகத்தில் அடங்கி, நித்திய சமாதான நிலையை அடைவதையே நாம் பரலோகப் பேரின்பம் என்கிறோம். அதாவது ஒரு விதத்தில் மனுஷீகம் தெய்வீகத்தில் பங்கடைய வேண்டும். இந்த உரிமையை மனிதர்களுக்குத் தர விரும்பிய தெய்வீகம் நமது மனுஷீகத்தோடு கலந்து கொள்ள விரும்பியது. மனிதன் தானாக மேலேறி தெய்வீகத்தோடு சமாதானமடைய முடியாது என்பதால், தேவனே கீழிறங்கி மனிதன் ஆனார்; மனுஷீகத்தை உயர்த்திப் புனிதப்படுத்தினார்; அதன் மீது தெய்வீக வரப்பிரசாதத்தைப் பொழிந்தார்; அதைத் தெய்வீகத்தில் பங்கடையவும் வைத்தார். இதற்காகத்தான் கடவுள் மனிதனானார்.


இந்த உண்மையை அறிந்தபின், நம் உள்ளம் மகிழாமல் இருக்கக் கூடுமா? நெஞ்சம் நெகிழாமல் இருக்கலாகுமா? இருதயம் பூரித்துத் துடிக்காமல் இருக்க இயலுமா? எங்கும் பரந்து விரிந்து நிறைந்த சர்வேசுரன் நம்மைப் போன்ற ஏழை மனிதன் ஆனார் என்ற இந்த சத்தியம் எந்நாளும் நம் மனதில் இரைந்து, சப்தித்து ஒலிப்பதாக.


https://www.catholictamil.com/?m=1

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!