Posts

Showing posts from November, 2024

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மரணத்திற்குப் பிறகு, நேரடியாக மோட்சத்திற்கு செல்லும் ஆன்மாக்கள் அரிதானது. கடவுளின் கிருபையில் இறக்கும் பெரும்பான்மையானவர்கள் உத்தரிக்கும் ஸ்தலத்தில் கசப்பான வலிகளால் சுத்திகரிக்கப்பட வேண்டும்." புனித ராபர்ட் பெல்லார்மைன். After death, souls that go directly to Heaven are rare. The multitude of others who die in God's grace must be purified by the bitter pains of Purgatory. St Robert Bellarmine. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உத்தரிக்கும் ஸ்தலம் என்றால் என்ன?

Image
*உத்தரிக்கும் ஆன்மாக்களின் வணக்க மாதம்* *கத்தோலிக்க திருச்சபையின் போதனை*CCC 1030-1031  கடவுளோடு நட்புறவில் மரணமடைந்து நிலை வாழ்வு உறுதி செய்யப்பட்டிருந்தாலும் விண்ணக பேரின்பத்தை அடைவதற்கு முன் தங்கள் பாவங்களுக்காக பரிகாரம் செய்யும் நிலையே உத்தரிக்கும் ஸ்தலம் ஆகும்.(CCC 1030-1031)  Catechism of the Catholic Church #1030-1032 CCC 1030 All who die in God’s grace and friendship, but still imperfectly purified, are indeed assured of their eternal salvation; but after death they undergo purification, so as to achieve the holiness necessary to enter the joy of heaven. CCC 1031 The Church gives the name Purgatory to this final purification of the elect, which is entirely different from the punishment of the damned. The Church formulated her doctrine of faith on Purgatory especially at the Councils of Florence and Trent. the tradition of the Church, by reference to certain texts of Scripture, speaks of a cleansing fire: விண்ணகம் சென்று முடிவில்லா ஆன்மீக ஆனந்தத்தில் ஓர் ஆன்மா அக்களிக்க ...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பாவம் மற்றும் புண்ணியம் இவற்றின் விபரம் அறிந்தபின் புண்ணிய வாழ்வு வாழ்ந்து மரித்த ஆன்மாக்கள், பரலோக அன்பின் நெருப்பால் புடமிடப்பட்டு, தங்கள் ஆன்மாவில் ஒட்டிக் கொண்டுள்ள அற்ப மாசுக்கள் முதலாய் நீங்கி பரிசுத்தமாகும் முன்பாக விண்ணக மகிமைக்குள் நுழைவதில்லை. நியாசா நகரின் புனித கிரகோரியார். இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஒன்றாக உண்பதும், குடிப்பதும் உண்மையான நட்பல்ல,‌ கொள்ளையர்கள், கொலைகாரர்கள் கூட அத்தகைய நட்பைக் கொண்டுள்ளனர். உண்மையிலேயே நண்பர்களாக இருந்தால்,ஒருவர் மீது ஒருவருக்கு அக்கறை இருந்தால், ஆன்மீக ரீதியில் ஒருவருக்கொருவர் உதவுவோம். நம் நண்பர்களை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் காரியங்களைத் தடுப்போம். புனித கிறிசோஸ்டம், சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க . புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். Eating and drinking don't make friendships - such friendship even robbers and murderers have. But if we are friends, if we truly care for one another, let us help one another spiritually. Let us hinder those things that lead our friends away to hell. - St. Chrysostom

நவம்பர் 2 மட்டுமல்ல வருடம் முழுவதும் இறந்தவர்களுக்காக செபிக்க வேண்டியது அடிப்படை கத்தோலிக்க கடமை-2

Image
 *உத்தறிக்கிற ஸ்தல ஆன்மாக்களின் வணக்க மாதம்* உன் பலியும் காணிக்கையும் முழு நிறைவு பெற வறியவருக்கு பிச்சையிடு.தாராள குணம் வாழ்வோரால் விரும்பப்படுகிறது. *இறந்தோருக்கும் அதனால் உண்டாகும் மகிழ்ச்சியை தடை செய்யாதே.* சீராக் 7(36-37),திரு விவிலியம் சீராக் 7(32-33) இறந்தவர்களை கல்லறையில் அடக்கம் செய்வதோடு நமது கடமை முடிந்து விடுவதில்லை.கல்லறை திருநாள் மட்டும் அவர்களுக்காக செப்பித்தால் போதாது. நாம் கல்லறை போகும் வரை அவர்களுக்காக தொடர்ந்து திருப்பலி பங்கேற்கவும் செபிக்கவும், தான தர்மங்கள் செய்யவும் வேண்டும். நாம் கண்ணீர் சிந்தி அழுவதாலோ !அவர்களுக்கு பிடித்தவற்றை கல்லறையில் வைப்பதாலோ,இறந்த ஆன்மாக்களுக்கு எந்த பலனுமில்லை.நாம் பக்தியோடு பங்கெடுக்கும் திருப்பலி,சிலுவைப் பாதை,செபமாலை,தான தர்மங்கள்,அவர்கள் செய்த பாவங்களுக்கு ஏற்ப நாம் செய்யும் பரிகாரங்களே அவர்களுக்கு உதவும்.  செய்த பாவங்களுக்கு உரிய பரிகாரம் செய்யாமல் மரித்த நம் முன்னோர்கள் நித்திய இளைபாற்றியை சுலபமாக பெற்றுக்கொள்வதில்லை.நமது உதவி கட்டாயம் தேவை.நமது செபங்கள் தர்மங்கள் இந்த ஆன்மாக்களின் வேதனையையும், வேதனையின் நாட்களை குறைக்கும...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உத்தரிக்கும் ஸ்தலத்தில் வேதனையுறும் ஆன்மாவுக்காக, நம் அன்னையின் ஜெபமாலையை செபிக்கும்போது, அந்த ஆன்மாவை எரிக்கும் நெருப்பு குறைந்து, பரலோக நிவாரணத்தை அனுபவிப்பதாக உணர்கிறது.  புனித அன்னிபேல் மரியா. When we recite Our Lady’s Rosary for a soul in Purgatory, that soul feels that the fire all about it are diminished and it experiences a heavenly relief.” St. Annibale Maria di Francia. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நவம்பர் 2 மட்டுமல்ல வருடம் முழுவதும் இறந்தவர்களுக்காக செபிக்க வேண்டியது அடிப்படை கத்தோலிக்க கடமை

Image
  பாவங்களினின்று மீட்கப்படும் படி இறந்தவர்களுக்காக வேண்டிக் கொள்வது புனிதமும் பயனுமுள்ள எண்ணமாய் இருக்கின்றது 2மக்கபேயர்-12:46. *மரித்த நமது குடும்ப உறுப்பினர்களுடைய, ஆன்மாக்களின் நித்திய இளைப்பாற்றிக்காக செபிப்பதும் , பரிகாரங்கள் செய்வதும்,தான தர்மங்களை செய்வதும் நமது கடமை ஏன்?* மரணம் வரை மனம் திரும்பாத கொடுமையானப் பாவிகளுக்கு நரகதண்டனையும்,  செய்த பாவங்களுக்கு உரிய பரிகாரங்கள் செய்து, பரிசுத்தமாக வாழ்ந்து  மரித்தவர்களுக்கு மோட்சமும், மனமாற்றமைடைந்து ,செய்த பாவங்களுக்கு முழுமையான பரிகாரங்கள் செய்யாமல் மரித்தவர்களுக்கு,  கடவுளின் நீதிப்படி கொடுமையான அக்கினியால் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே மோட்ச மகிமை கிடைக்கும் . இந்த ஆன்ம சுத்தகரிப்பு நிலையே *உத்தரிக்கும் ஸ்தலம்.* *உத்தறிக்கிற ஸ்தல வேதனை எப்படி இருக்கும் என்பதை பற்றி மறைவல்லுநரான புனித அகுஸ்தினாரின் விளக்கம் பின்வருமாறு  "மரணத்திற்குப் பின் ஏறக்குறைய அனைத்து ஆன்மாக்களுமே, பாவத்தின் நிமித்தம், வேதனை அனுபவிக்கும் பொருட்டு தள்ளப்படுகின்ற ஓர் அக்னிச் சிறையே *உத்தரிக்கும் ஸ்தலம்* இந்த ஸ்தல வேதனையின் கொடுமை எவ்வளவு என...