நவம்பர் 2 மட்டுமல்ல வருடம் முழுவதும் இறந்தவர்களுக்காக செபிக்க வேண்டியது அடிப்படை கத்தோலிக்க கடமை
பாவங்களினின்று மீட்கப்படும் படி இறந்தவர்களுக்காக வேண்டிக் கொள்வது புனிதமும் பயனுமுள்ள எண்ணமாய் இருக்கின்றது
2மக்கபேயர்-12:46.
*மரித்த நமது குடும்ப உறுப்பினர்களுடைய, ஆன்மாக்களின் நித்திய இளைப்பாற்றிக்காக செபிப்பதும் , பரிகாரங்கள் செய்வதும்,தான தர்மங்களை செய்வதும் நமது கடமை ஏன்?*
மரணம் வரை மனம் திரும்பாத கொடுமையானப் பாவிகளுக்கு நரகதண்டனையும்,
செய்த பாவங்களுக்கு உரிய பரிகாரங்கள் செய்து, பரிசுத்தமாக வாழ்ந்து மரித்தவர்களுக்கு மோட்சமும்,
மனமாற்றமைடைந்து ,செய்த பாவங்களுக்கு முழுமையான பரிகாரங்கள் செய்யாமல் மரித்தவர்களுக்கு,
கடவுளின் நீதிப்படி கொடுமையான அக்கினியால் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே மோட்ச மகிமை கிடைக்கும் . இந்த ஆன்ம சுத்தகரிப்பு நிலையே *உத்தரிக்கும் ஸ்தலம்.*
*உத்தறிக்கிற ஸ்தல வேதனை எப்படி இருக்கும் என்பதை பற்றி மறைவல்லுநரான புனித அகுஸ்தினாரின் விளக்கம் பின்வருமாறு
"மரணத்திற்குப் பின் ஏறக்குறைய அனைத்து ஆன்மாக்களுமே, பாவத்தின் நிமித்தம், வேதனை அனுபவிக்கும் பொருட்டு தள்ளப்படுகின்ற ஓர் அக்னிச் சிறையே *உத்தரிக்கும் ஸ்தலம்*
இந்த ஸ்தல வேதனையின் கொடுமை எவ்வளவு என்றால் ஒரு நிமிடம் இந்த பயங்கரமான நெருப்பில் இருப்பது நூறாண்டு காலம் இருப்பது போல் இருக்கும்.
மரித்த ஆன்மாக்கள், மோட்சத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்குத் தகுதியாக்க, தமது பாவங்களை சுத்திகரிக்கும் பொருட்டு, உலகத்தில் தான் அனுபவித்த, பார்த்த, கேள்விப்பட்ட அனைத்து வகையான அக்னியைவிட அதிக வேதனை தரக்கூடிய, அதிக அளவு ஊடுருவக்கூடிய அக்னியாக உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பு இருக்கும்.
இந்த நெருப்பு நம்மை சுத்திகரித்து பரிசுத்தமாக்கவே செயல்பட்டாலும், உலகத்தில் நாம் அதிகபட்சமாக சகித்துக் கொள்ளக்கூடிய வாதைகள் அனைத்தையும்விட அதிகமாக வேதனை தரக்கூடியதாக இருக்கும் " என்கிறார்.
நாம் ஒப்புக்கொடுக்கும் திருப்பலி,சிலுப்பாதைகள்,செபிக்கும் செபமாலைகள்,செபங்கள், ஒறுத்தல் முயற்சிகள்,தான தர்மங்கள் இவர்களின் உத்தரிக்கும் வேதனையை தணிக்கும், வேதனைப்பட வேண்டிய நாட்களை குறைக்கும்.
*இதை நாம் செய்ய தவறினாலும்,நமது தலைமுறைகளுக்கு இவற்றைச் சொல்லிக்கொடுக்க தவறினாலும் ஆபத்து நமக்கே, நாம் மரித்தபிறகு செப உதவி இன்றி உத்தரிக்கும் ஸ்தலத்தில் எந்த உதவியின்றி கொடுமை அனுபவிப்பது உறுதி.*
*நவம்பர் 2 மட்டுமல்ல வருடம் முழுவதும் நம் குடும்பத்தில் மரித்த ஆன்மாக்களுக்காக செபிப்பதும், தான தர்மங்கள் செய்வதும் அடிப்படை கத்தோலிக்க கடமை.*
சேசுவுக்கே புகழ் !
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment