புனித சிசிலியம்மாள் கிறிஸ்தவர்களிடம் கேட்கும் கேள்விகள் ?
*வெட்டப்பட்ட தலையுடன் முன்று நாட்கள் வேதனை,வலியுடன் வேதசாட்சியாய் மரித்த புனித சிசிலியம்மாள்* ரோமானியப் பேரரசர்களும் உள்ளூர் அதிகாரிகளும் பெரும்பாலும் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய காலத்தில், ரோம் நகரில் ஒரு செல்வந்த குடும்பத்தில் சிசிலியா பிறந்தார். சிசிலியா மிகவும் ஆழ்ந்த விசுவாசம் கொண்ட ஒரு கிறிஸ்தவர். உண்ணா விரதம் இருந்லு பல்வேறு தவச் செயல்களைச் செய்தார், மேலும் தனது வாழ்க்கையும், கற்பையும் கிறிஸ்துவுக்கும் மட்டும் என மணமகளாக தன்னையே அர்ப்பணித்தாள். ஒரு இளம் பெண்ணாக இருந்த சிசிலியாவின் தந்தை, அவளுடைய விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி வலேரியன் என்ற பிரபுவுக்கு அவளை மணம் முடித்து வைத்தார்.அந்தக் காலத்தில் பெரும்பாலான ரோமானியர்களைப் போலவே, வலேரியன் ரோமானிய பேகன் மத நடைமுறைகளைக் கடைப்பிடித்தார். இவர்களின் திருமணத்தின் போது, இசை ஒலிக்கும்போது, சிசிலியா தனது சொந்த பாடலை தனது இதயத்தில் பாடினார். இது கடவுளைப் புகழ்ந்து பாடும் பாடலாகவும்,மோட்சத்தில் தனது உண்மையான மணவாளனோடு ஒரு அழகான பிரார்த்தனையாகவும் இருந்தது, இதனால்தான் அவர் பின்நாட்களில் இசைக்கலைஞர்களின் பாதுகாவலரானார். த...