உத்தரிக்கும் ஸ்தலம் பற்றிய புனித அந்தோணியார் மறையுரை 1195-1231
*உத்தரிக்கும் ஸ்தலம் பற்றிய புனித அந்தோணியார் மறையுரை 1195-1231*
துன்பங்களின் உச்சத்தில் இருந்த ஒரு மனிதன் , தன் வேதனைகளிலிருந்து தன்னை விடுவிக்கும்படியாக கடவுளிடம் மன்றாடினான். அப்போது ஒரு சம்மனசானவர் அவனுக்குத் தோன்றி, அவரிடம்: "பூமியின் மீது ஒரு வருடத் துன்பம், அல்லது உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஒரு நாள் துன்பம். இரண்டில் ஒன்றைத் தேர்ந்து கொள்ளும் வாய்ப்பை உனக்கும் தரும்படி கடவுள். என்னை அனுப்பினார்" என்றார்.
அந்த நோயாளியான மனிதனுக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. "உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஒரு நாள் இருப்பதைத் தேர்ந்து கொள்கிறேன். குறைந்தபட்சம் என் துன்பங்களாவது நின்று போகும்" என்று அவன் பதிலளித்தான். உடனே அவன் இறந்து, தான் விரும்பியபடி உத்தரிக்கிற ஸ்தலத்திற்குச் கொண்டுபோகப்பட்டான். அவனைத் தேற்றும்படி யாக சம்மனசானவர் அவனிடம் சென்றார். ஆனால் அந்த மனிதன் தூதனைக கண்டதும் கடுங்கோபத் துடன் : "கெடுப்பவராகிய தூதரே. நீர் என்னை ஏமாற்றி விட்டீர். நான் உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஒரு நாள்தான் இருப்பேன் என்று நீர் எனக்கு உறுதி கூறினீர். இப்போதோ ஏற்கனவே இருபது வருடங்கள் ஆகி விட்டது. நான் இன்னும் மிகக் கொடூரமான வாதைகளில் கைவிடப்பட்டிருக்கிறென்" என்று அலறினான்.
அப்போது சம்மனசானவர்: "உன்னையே ஏமாற்றிக்கொள்ளாதே; நீ இறந்த ஒரு சில நிமிடங்கள் தான் கடந்துள்ளன. உன் பிணம் உன் மரணப் படுக்கையில் இன்னும் குளிர்ந்து போகாமல் இருக் கிறது" என்று அவனுக்குப் பதிலளிக்க, அவன் பதிலுக்கு, "அப்படியானால், கடவுளுக்குப் பிரியமானபடி, உலகில் ஒரு வருடம் எல்லாத் துன்பங்களையும் நான் அனுபவிக்கும்படி பூமிக்குத் திரும்பிச் செல்லும் வரத்தை எனக்குப் பெற்றுத் தாரும்!" என்றான்.
ஆண்டவர் அவனுடைய மன்றாட்டை ஏற்றுக் கொண்டார். அவன் மேலும் ஒரு வருடம் பூமியில் வாழும்படி திரும்பி வந்தான். *"துன்பங்களில் பொறுமையாயிருப்பதே மோட்சத்திற்கான தங்கச் சாவி ஆகும். ஆகவே நம் துன்பங்களை ஒப்புக்கொடுப்பதன் மூலம் நாம் ஆதாயம் பெறுவோமாக"* என்று அவன் அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருந்தான்.
நம் துன்பங்களை, நோய்களை அமைந்த மனதோடு ஏற்றுக்கொள்வதே நல்ல பாவபரிகாரமாகும்,உத்தரிக்கும் ஸ்தலதை தவிர்த்து மோட்சத்திற்கு செல்ல வழிவகுக்கும்.

Comments
Post a Comment