Posts

Showing posts from September, 2025

பொன்மொழிகள்

Image
  #purgatory No matter how good looking you are… no matter how rich you become… one day, you’ll still end up as food for worms.So set aside your arrogance —and remember your grave. “Every soul will taste death.” நீங்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் சரி... எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் சரி... ஒரு நாள், நீங்கள் புழுக்களுக்கு உணவாகிவிடுவீர்கள். எனவே உங்கள் ஆணவத்தை ஒதுக்கி வைத்துவிட்டு - உங்கள் கல்லறையை நினைவில் கொள்ளுங்கள். "ஒவ்வொரு பிறப்பும் மரணத்தை சுவைக்கும்." பணிவாக இருங்கள். மற்றவர்களை விட சிறந்தவர் என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உங்கள் குறைபாடுகளைக் கண்டு வருத்தப்படாதீர்கள்.  நமது பலவீனத்தை விடப்பெரிய கடவுளின் அன்பின் சக்திக்கு சரணடையுங்கள். புனித பிரான்சிஸ் சலேசியார். Don't get upset with your imperfections. Surrender to the Power of God's Love, which is greater than our weakness. St. Francis de Sales

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  இயேசு யூதர்களால் ஒருமுறை மட்டும் தண்டிக்கப்பட்டார்; ஆனால் நற்கருணையில் அவர் தினமும் ஆயிரக்கணக்கான இடங்களில், எண்ணற்ற அநியாய தீர்ப்பாளர்களால் தண்டிக்கப்படுகிறார்.அவர் இகழ்ச்சியையும், அவமதிப்பையும், தண்டனையையும் பொறுத்துக் கொள்கிறார். ஏனெனில், அவரது அன்பு நிபந்தனையற்றது எனவும் நமது நன்றி இல்லாமையைவிட அதிகமுமானதும் என்பதை வெளிப்படுத்த விரும்புகிறார். ஓ இயேசுவே, நற்கருணையில் நிகழும் அனைத்து அவமரியாதைகளையும் மன்னித்தருளும்! நான் செய்த பாவங்களுக்கு,பதிலாக என் வாழ்நாளை முழுவதும் உம்மை நேசித்து, கௌரவித்து, உம்மை இகழ்பவர்களுக்காகப் பிராயச்சித்தம் செய்ய விரும்புகிறேன். உம்மோடு சேர்ந்து இறக்கும் கிருபையை எனக்குத் தாரும்! – புனித பீட்டர் ஜூலியன் Jesus is more cruelly treated by bad Christians than by the Jews. In Jerusalem He was condemned only once, but in the Blessed Sacrament, He is condemned everyday and in thousands of places, and by an appalling number of unjust judges. And yet Jesus allows Himself to be insulted, despised, condemned: He still continues His sacramental life in order to...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  தன்னையே நம்புகிறவன் நாசமாகிறான்; இறைவனை நம்புகிறவன் அனைத்தையும் செய்து முடிக்கிறான். – புனித அல்போன்ஸ் லிகோரியார். He who trusts himself is lost. He who trusts in God can do all things."  Saint Alphonsus Liguori

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  திருச்சபைக்கு வெளியே இரட்சிப்பு இல்லை. .. திருச்சபை நோவாவின் பேழையுடன் ஒப்பிடப்படுகிறது. எப்படி, பெரு வெள்ளத்தின் போது,நோவாவின் பேழையில் இல்லாதவர்கள் அனைவரும் அழிந்தார்களோ,அதேப்போல இப்போது திருச்சபையில் இல்லாதவர்கள் அழிகிறார்கள்.  - புனித ராபர்ட் பெல்லார்மைன். உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் *என் திருச்சபையைக்* கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.மத்தேயு 16:18 Outside the Church there is no salvation . . . the Church is compared with the ark of Noah, because just as during the deluge, everyone perished who was not in the ark, so now those perish who are not in the Church."  - St. Robert Bellarmine. I tell you that you are Peter,and on this rock *I will build my church,* and the gates of Hades[b] will not overcome it. Matthew 16:18

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உன் வாழ்கை போராட்டங்களை கண்டு பயப்படாதே, அதிலிருந்து விலக நினைக்காதே.போராட்டங்கள் இல்லாத இடத்தில் புண்ணியங்கள் இல்லை. நம்பிக்கையும், அன்பும் சோதிக்கப்படாத இடத்தில் அவை உண்மையில் இருக்கின்றவா என உறுதியாக கூற முடியாது. துயரங்கள்,நோய்கள்,இழப்புகள், வஞ்சனைகள் போன்ற கடினமான சூழ்நிலைகளால் ஏற்படுகின்ற மன‌ மற்றும் உடல் அழுத்தங்களால் மட்டுமே உண்மையான அன்பும், நம்பிக்கையும் நிரூபிக்கப்படும். புனித ஜான் கிறிஸ்தோஸ்தம் Do not fear the conflict, do not flee it. Where there is no struggle, there is no virtue; where faith and love are not tempted, it is not possible to be sure whether they are really present. They are proved and revealed in adversity, that is, in difficult and grievous circumstances, both outward and inward - during sickness, sorrow, or privations St. John of Kronstadt,

மாமரி எனும் திருப்பெயர்

  என் மக்களே, இப்பொழுது எனக்குச் செவி கொடுங்கள். என் வழிகளைக் காப்பவர் எவரோ அவரே பேறுபெற்றோர். என் படிப்பினையைக் கேட்டு ஞானிகளாய் இருங்கள்; அதை இகழ்ந்து தள்ளி விடாதீர்கள். நான் சொல்வதைக் கேட்டு, நாள்தோறும் என் வாயிலண்டை விழித்திருந்து, என் கதவு நிலைகளைக் கவனித்துக் கொண்டிருப்பவனே பேறுபேற்றவன். என்னைக் கண்டுபிடிப்பவன் வாழ்வடைவான்; ஆண்டவரிடமிருந்து மீட்பையும் பெற்றுக்கொள்வான். ஆனால் எனக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்பவன் தன் ஆன்மாவைக் காயப்படுத்துவான். என்னைப் பகைக்கின்ற அனைவரும் சாவை நேசிக்கின்றார்கள். பழமொழி ஆகமம் 8: 32-36 my children, listen to me;     blessed are those who keep my ways. 33 Listen to my instruction and be wise;     do not disregard it. 34 Blessed are those who listen to me,     watching daily at my doors,     waiting at my doorway. 35 For those who find me find life     and receive favor from the Lord. 36 But *those who fail to find me harm themselves; all who hate me love death.* Proverbs 8:32-36

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  அருள் நிலையில் உள்ள ஒரு ஆன்மா, கோழைகளான பேய்களுக்கு பயப்பட வேண்டியதில்லை. புனித குழந்தை தெரேசம்மாள். A soul in a state of grace has nothing to fear of demons who are cowards. St. Therese of the Child Jesus. இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  அர்ச்சிஷ்ட்ட சிலுவையின் அடையாளம் பிசாசுக்கு எதிரான மிகக் கொடூரமான ஆயுதம். ஆகவே, திருச்சபை அதை நம் மனதிற்கு முன்னால் தொடர்ந்து வைத்திருக்க விரும்புகிறது, நம் ஆன்மாக்கள் எவ்வளவு மதிப்புமிக்கவை என்பதையும், அதற்க்காத இயேசு கிறிஸ்துவுக்கு என்ன விலை கொடுத்தன என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது,எனவே எந்த சந்தர்ப்பத்திலும் நாம் நம்மீது சிலுவை அடையாளம் வரைய வேண்டும். நாம் படுக்கைக்குச் செல்லும்போது, இரவில் விழித்தெழும்போது,காலை எழுந்திருக்கும்போது, எந்தச் செயலையும் தொடங்கும்போது,எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் சோதிக்கப்படும்போது. புனித ஜான் மரிய வியான்னி “The sign of the cross is the most terrible weapon against the devil. Thus the Church wishes not only, that we have it continually in front of our minds, to recall to us just what our souls are worth and what they cost Jesus Christ but also that we should make it at every juncture ourselves: when we go to bed, when we awaken during the night, when we get up, when we begin any action, and, above all, when we are tempted.” St John Vianney