நற்கருணை ஆண்டவரை மண்டியிட்டு நாவில் பெறும் குழந்தைகள்
இயேசு எனும் திருநாமத்திற்கே விண்ணவர்,மண்ணவர்,
கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்"(பிலி 2:20)என்றால் அவர் நற்கருணையாக திருஉடலாகவும்,
திருஇரத்தமாகவும்,
ஆன்மாவாகவும்,
தெய்வீகமாகவும் நம்மிடம் வரும்போது மண்டியிட்டு, நாவில் பெறுவதே *முதன்மையான,
அடிப்படையான மறைக்கல்வி.*
நடுப்பூசையில் குருவானவரின் கரங்களில் நற்கருணை ஆண்டவரை எழுந்தேற்றம் செய்யும்போது மண்டியிட்டு தலைவணங்கி ஆராதிப்பதுப்போல.
"நித்திய ஸ்துதிக்குரிய" பாடல் பாடும்போது மண்டியிட்டு தலைவணங்கி ஆராதிப்பதுப்போல.
திருவிருந்தில்,நற்கருணையாக
நம் ஆண்டவர், நம்மிடம் வரும்போது மண்டியிட்டு நாவில் பெறுவதே, நற்கருணை ஆண்டவருக்கு நாம் செலுத்தும் முதன்மையான ஆராதனையும், உட்சபட்ச மரியாதையும் ஆகும்.
எப்பொதெல்லாம் நற்கருணை ஆண்டவரை மண்டியிட்டு நாவில் பெறுகின்றோமோ அப்போதெல்லாம்,
*நற்கருணையும்,இயேசுவும் ஒன்று தான், என்ற நம் திருச்சபையின் அஸ்திவாரமான நற்கருணை ஆண்டவர் மீதுள்ள விசுவாசத்தை செயலில் வெளிப்படுத்துகிறோம்.*
நிறை உண்மையை நோக்கி மட்டுமே பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்துவார். *நல்ல பாவசங்கீர்தனம் செய்து மண்டியிட்டு நாவில் நற்கருணை ஆண்டவரை பெறுவதே நிறை உண்மை.* மற்ற அனைத்து நற்கருணை பெறும் முறைகளும் அசுத்த ஆவியால், நற்கருணை ஆண்டவரை அவசங்கைப்படுத்துவதற்கு புகுத்தபட்ட நிறையற்ற, கலப்படமான உண்மைகளே.
இந்த Video-விலுள்ள குழந்தைகள் நற்கருணை ஆண்டவரைப் பெறுவதுப்போல,நாமும், நமது உடம்பில் தெம்பு உள்ளவரை, *நம் ஆண்டவரை மண்டியிட்டு நாவில் பெறுவோம்.நற்கருணையாக உள்ள நம் ஆண்டவரை மகிமைப்படுத்துவோம்.*
"மனிதன், கடவுளுக்கு முன்பாக மண்டியிடுவதே, தன்னை படைத்த கடவுள் மீதுள்ள அன்பின் மிக உயர்ந்த வெளிப்பாடு. இயேசுவும், தந்தையின் முன்னிலையில் முழங்காலில் பிரார்த்தனை செய்தார்."-ராபர்ட் கார்டினல் சாரா.
Video - புனித சூசையப்பர் ஆலயம்,சேலையூர்.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment