கடவுள் இயேசுவின் சிலுவைபாடுகளை ✝️ சித்தரிக்கும் உருவங்கள் மரியன்னைமற்றும புனிதர்கள் உருவங்கள் பற்றும் இரத்த சாட்சிகள் மற்றும் புனிதர்கள் திருப்பண்டங்கள் விக்ரகமா
⛪️ கடவுளின் விண்ணக சாயலாக இருக்கும் புனிதமிக்க கத்தோலிக்கக ஆலயங்களில் உள்ள கடவுள் இயேசுவின் சிலுவைபாடுகளை ✝️ சித்தரிக்கும் உருவங்கள் மரியன்னைமற்றும புனிதர்கள் உருவங்கள் பற்றும் இரத்த சாட்சிகள் மற்றும் புனிதர்கள் திருப்பண்டங்கள் விக்ரகமா ???
புனிதமானவற்றை தொட்டு முத்தமிடுவது விக்ரக ஆராதனையா???
👉பழைய ஏற்பாடு புத்தகத்தில் புனிதர்களின் திருப்பண்டங்கள் மூலமாக இறைவன் செய்த அற்புதங்கள்
👉எலியாவின் போர்வையினால் எலிசா செய்த அற்புதம்
2 அரசர்கள் - 2 அர 2 14 பின்பு அவர், “எலியாவின் கடவுளாகிய ஆண்டவர் எங்கே இருக்கிறார்?” என்று சொல்லிக்கொண்டே எலியாவிடமிருந்து விழுந்த போர்வையினால் தண்ணீரை அடித்தார். அப்படி அடித்தவுடன் தண்ணீர் இரண்டாகப் பிரிய, எலிசா அக்கரைக்குச் சென்றார்.
👉பழைய ஏற்பாடு புனிதர்கள் வெளிப்படுத்தும் இறை பிரசன்னம்
2 அரசர்கள் - 2 அர 13 21 மக்கள் இறந்த ஒருவனைப் புதைத்துக் கொண்டிருந்தபொழுது, அந்தக் கொள்ளைக் கூட்டத்தினரைக் கண்டார்கள்; எனவே அவன் பிணத்தை எலிசாவின் கல்லறையில் போட்டு விட்டு ஓடினர். எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டவுடனே அந்த ஆள் உயிர் பெற்று எழுந்து நின்றான்
👉வானதூதர் உருவங்கள் உள்ள புனிதமிக்க கடவுளின் பேழையை வணங்கிய ஆரோனும் மோசையும
👇👇
எண்ணிக்கை - எண் 20 6 பின், மோசேயும் ஆரோனும் சபைக்கு முன்னின்று சந்திப்புக்கூடாரத்தின் நுழைவாயிலுக்குச் சென்று முகங்குப்புற விழுந்தனர். ஆண்டவரின் மாட்சி அவர்களுக்குத் தோன்றியது.
👉புதிய ஏற்பாடு புனிதர்களின் நிழலே இன்றய திருச்சுருவங்கள்
திருத்தூதர் பணிகள் - திப 5 15 பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல்நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்;
எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல்நலமற்றோரையும், தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்து கொண்டு திரளாகக் கூடிவந்தார்கள். அவர்கள் அனைவரும் நலம் பெற்றனர்.
👉புனித பவுலின் கைக்குட்டையால் நடந்த் அற்புதங்கள்
திருத்தூதர் பணிகள் - திப 19 11 பவுல் வழியாய்க் கடவுள் அரும் பெரும் வல்ல செயல்களைச் செய்து வந்தார்.
12 அவரது உடலில் பட்ட கைக்குட்டைகளையும் துண்டுகளையும் கொண்டு வந்து நோயுற்றோர் மீது வைத்ததும் பிணிகள் அவர்களை விட்டு நீங்கும்; பொல்லாத ஆவிகளும் வெளியேறும்.
👉புனிதமாக கத்தோலிக்க ஆலயங்களில் புனிதம் செய்யபட்டு வைக்கப்படும் திருச்சுருவங்கள்
👉கடவுள் இயேசுவின் சிலுவைபாடுகள் திருச்சுருவங்கள் மரியன்னை மற்றும் புனிதர்கள் திருச்சுருவங்களை ஆலயம் செல்லும்போது தொட்டு முத்தமிடுங்கள் அவை விக்ரக வழிபாடுகள் அல்ல
👉விடுதலைப் பயணம் - விப 29 37
ஏழு நாள்கள் பலிபீடத்திற்கென்று பாவக்கழுவாய் செய்து, அதனை அர்ப்பணம் செய். பலிபீடம் தூய்மைமிக்கதாகும். பலிபீடத்தைத் #தொடுவதெல்லாம் புனிதம் பெறும்.
👉விடுதலைப் பயணம் - விப 30 29
நீ அவற்றை அர்ப்பணம் செய்வதால் அவை புனிதமானவையாகும். மேலும் அவற்றைத் #தொடுபவை அனைத்தும் புனிதம் பெறும்.
👉 மேலும் இஸ்ராயேல் மக்கள் ஆராதித்த உடன்படிக்கைப் பேழைக்குள் இருந்தவை பின்வருமாறு : (எபி.9:4)
மன்னா - இன்று நற்கருணை
2. கற்பலகை- இன்று திரு விவிலியம்
3. ஆரோனின் கோல் - இன்று புனிதர்களின் திருப்பண்டம்
கடவுள் இயேசுவின் ஆடையை தொட்டு உடல் நலம் பெற்ற பெண்
மாற்கு - மாற் 5 28 ஏனெனில், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்” என்று அப்பெண் எண்ணிக் கொண்டார்
. 29 தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.
இவை பார்வைக்கு விக்கிரகங்கள் போலத் தோன்றும். ஆனால் தமது பிரசன்னத்தை இவற்றின் வழியாகவே கடவுள் காட்டினார்.
எசாயா 56-4.ஆண்டவர் கூறுவது இதுவே: என் ஓய்வுநாளைக் கடைப்பிடித்து, நான் விரும்புகின்றவற்றையே தேர்ந்து கொண்டு, என் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் அண்ணகர்களுக்கு,
*என் இல்லத்தில், என் சுற்றுச்சுவர்களுக்குள் நினைவுச்சின்னம் ஒன்றினை எழுப்புவேன்; புதல்வர் புதல்வியரைவிடச் சிறந்ததொரு பெயரை வழங்குவேன்; ஒருபோதும் அழியாத என்றுமுள பெயரை அவர்களுக்குச் சூட்டுவேன்.*
ஆண்டவரின் இல்லத்தில் சுற்று சுவர்களுக்குள் நினைவுச்சின்னம் உள்ள ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை.
👉கிபி 8 ம் ஆண்டு உருவான பைசாந்தீய அரசால் கொண்டுவரபட்டஉருவம் இல்லா கடவுள் கோட்பாடு இஸ்லாமிய யூத கோட்பாடு இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் உள்ள இறைவன் இயேசுவின் வரலாற்று அரிச்சுவடுகளை அழிக்க ஏற்படுத்த பட்ட கொள்கை உருவ ஒழிப்பு கொள்கை
ஆலயங்களில் உள்ள கடவுள் இயேசுவின் சிலுவைபாடுகள் மற்றும் மரியன்னை மற்றும் புனிதர்களின் உருவங்களை அழித்தனர் சிலுவைப்போருக்கு வித்திட்டது
👉உருவம் இல்லா கடவுள் கொள்கை இஸ்லாமிய யூத கொள்கை
மனித உருவத்தில் எப்படி கடவுள் எப்படி விண்ணிலிருந்து வர இயலும்.
👉பெந்தகோஸ்து யோகோவா கொள்கை _இயேசு கடவுள் இல்லை
👉நவீன பெந்தகோஸ்து கொள்கை இந்த பூமியில் வாழ்ந்து இரத்தம் சிந்தி மரித்து உயிரோடு எழுப்பி விண்ணகம் சென்ற கடவுளின் மகனும் கடவுளுமான மாதாவினுடைய மகனின் உருவத்தை ஏற்று கொள்வதில்லை
உருவம் இல்லா கடவுள் கோட்பாடு இஸ்லாம் யூத மத கோட்பாடு.
👉கடவுள் இயேசுவின் விண்ணக அரசின் மண்ணக வீடான புனித பேதுரு சதுக்கத்தோடு இணைக்கப்பட்டுள்ள புனிதமிக்க கத்தோலிக்க ஆலயம் செல்லுங்கள் இறைவனோடு இணையுங்கள்.தப்பறைகளை விட்டு விலகுங்கள்.
நன்றி - கத்தோலிக்க பதில்கள்
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment