ஒரே மந்தையும் ஒரே ஆயரும் யோவான் (10-16) Part-3
*பிரிவினை நண்பர்களுக்கு பொருள் தெரியாத வசனங்கள்-3*
தமது *சொந்த இரத்தத்தால் தமதாக்கிக் கொண்ட கடவுளின் திருச்சபையை* மேய்ப்பதற்கு தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால் உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள்.
திருத்தூதர் பணிகள் 20-28
தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக்கொண்ட கடவுளின் ஒரே ஒரு திருச்சபை புனித இராயப்பர் மீது இயேசு கட்டிய கத்தோலிக்க திருச்சபை.*மற்ற சபைகள் மனிதர்களின் சபைகள்.*
*இறைவார்த்தை படித்து போதிக்கும் பிரிவினை நண்பர்கள் ஆளுக்கொரு, தெருவுக்கொரு சபைகள் ஆரம்பிக்க அதிகாரம் தந்த வேத வசனம் எது ?*
ஒரே ஒரு சபை அதை ஆரம்பிக்க கிறிஸ்துவுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.சுயமாக மனிதர்களால் ஆரம்பிக்கப்படும் சபைகள், இயேசு ஸ்தாபித்த திருச்சபையாகாது.
*"நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.* மத்தேயு 16-18.
நரகத்தின் வாயிலை வெறற்றிகொள்ள முடியாத ஒரே கத்தோலிக்க திருச்சபை மட்டுமே. மற்ற *சபைகளை நரகத்தின் வாயிலை நிச்சயம் ஒரு நாள் வெற்றிக் கொள்ளும்.*
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment