ஈஸ்டர் வாழ்த்துக்கள்
கடவுள் மனித அவதாரம் எடுக்காமல், கடவுளாக மட்டுமே இருந்திருந்தால் நம்மை மனிதர்களாகப் படைத்ததற்காகவும், சுவாசிக்க காற்றும், உண்ண உனவும்,பூலோகம் முழுவதையும் ஆளும் அதிகாரத்தை மனிதர்களுக்கு தந்தற்க்காகவே கடவுளை நேசிக்கவும், அன்பு செய்யவும் நாம் கடமைப்பட்டிருகின்றோம்.
ஆனால் கடவுள் நமது கற்பனைக்கு எட்டாத வகையில் மனித அவதாரம் எடுத்து,நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்ய பாடுகள்பட்டு,கொடூரமாக மரித்து, உயிர்த்துள்ளார் என்ற தெய்வீக இரகசியங்களை அறிந்த கத்தோலிக்கர்களாகிய நாம் ஒவ்வொருவரும்,பாவங்களை முழுவதுமாக தவிர்த்து, புண்ணியங்களை செய்வது, நமது கட்டாயமாக இருக்கின்றது.கிறிஸ்து மரித்து, திறந்துவைத்துள்ள மோட்சத்திற்குள் நுழைவதே நமது முதன்மையான ஞான அலுவலாக இருக்கின்றது.
Happy Easter.
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment