பரிசுத்த கன்னிகையின் வியாகுலப்புலம்பல்கள்

 



*பரிசுத்த கன்னிகையின் வியாகுலப்புலம்பல்கள்*

கடவுள் மனித காவியத்திலருந்து...

"உமது இருதயத்தை ஒரு வாள் ஊடுருவும்" என்று சிமியோன் கூறினார். ஒரு வாளா? அது வாள்களின் ஒரு கூட்டம்! எத்தனை காயங்களை அவர்கள் உம்மீது ஏற்படுத்தினார்கள், மகனே!எத்தனை தடவை நீர் முனகினீர் ! எத்தனை தடவை தசைச்சுரிப்பு வேதனைகளை நீர் அனுபவித்தீர்? எத்தனை இரத்தத்துளிகளை நீர் சிந்தினீர்? அவை ஒவ்வொன்றும் என்னில் ஒரு வாளாக இருந்தன. என்னில் ஊடுருவப்பட்டுள்ள துயர வாள்களின் ஒரு கூட்டத்தினுள் நான் இருக்கிறேன். உம் மீது புண்ணில்லாத ஒரு தோல்பகுதி கூட இல்லை. என்னிலோ துளைக்கப்படாததென்று எதுவுமில்லை. அவை என் மாமிசத்தைக் குத்தித்துளைத்தன, என் இருதயத்தை ஊடுருவின.


முட்களின் வளையம் இதோ இருக்கிறது. என்னால் அதை உணர முடிகிறது. அது என் இருதயத்தை நசுக்கி, அதை ஊடுருவுகிற தளைக்கட்டாக இருக்கிறது. ஆணிகளின் துவாரம் இதோ:அவை என் இருதயத்தில் குத்தப்பட்ட மூன்று குத்துவாள்கள்! ஓ! அந்த அடிகள்! அந்த அடிகள்! சர்வேசுரனின் மாமிசத்தின் மீது விழுந்த தேவத் துரோகமான அந்த அடிகளின் காரணமாகப் பரலோகம் நொறுங்கிப் போகாதிருந்தது எப்படி?


திரும்பி வாரும், என் அன்பார்ந்த, பரிசுத்த மகனே திரும்பி வாரும்! நான் இறந்து கொண்டிருக்கிறேன். நொந்து போன எனது ஆறுதலற்ற நிலையை என்னால் தாங்கக் கூடவில்லை. திரும்பவும் உம் முகத்தை எனக்குக் காட்டும்

திரும்பவும் என்னைக் கூப்பிடும். உமக்குக் குரலோ, கண்களோ இல்லையென்றோ, நீர் குளிர்ந்த உயிரற்ற உடலாக இருக்கிறீர் என்றோ நினைக்க என்னால் முடியவில்லையே. 


ஓ ! சர்வேசுரா! சர்வேசுரா! உமது திருச்சுதன், என் குமாரன் எத்தனை காயங்களைக் கொண்டிருக்கிறார்! சேசு, நீர் குழந்தையாயிருந்த போது, நீரே உம்மைக் காயப்படுத்திக் கொண்ட ஒவ்வொரு தடவையும் ஏறக்குறைய மயங்கிவிடும் நிலைக்குச் சென்ற என்னால், உம் பாடுகளின் காயங்களை எப்படி இன்னும் சாகாமல் பார்க்க முடிந்தது ?


ஓ! பிதாவே, எனக்கு ஒத்தாசை செய்யும்! சேசு நான் சொல்வதைக் கேட்க மாட்டேனென்கிறார். அவருடைய பாடுகள் இன்னும் முடியவில்லையா? எல்லாம் நிறைவேறி விடவில்லையா?இந்த அணிகளும், இந்த முட்களும், இந்த இரத்தமும், இந்த என் கண்ணீர்களும்,போதுமானவைகளாக இல்லையா? மனிதனைக் குணப்படுத்த இன்னும் அதிகம் தேவைப்படுகின்றதா ?


மனிதர்களே,என் கடவுள் மகனாகிய சர்வேசுரனை எவற்றைக்கொண்டு நீங்கள் துளைத்திருக்கிறீர்கள் என்று பாருங்கள்! ஆனாலும் நான் உங்களை மன்னிக்க வேண்டும். உங்களை நேசிக்க வேண்டும்.உங்கள் தாயாக அவர் என்னை ஏற்படுத்தினார். என் மாசற்றபாலகனைக் கொன்றவர்களின் தாயாக! தமது கொடிய வேதனையில்,சாகும் வேளையின் மூச்சு இளைப்போடு போராடியபடி அவர் சொன்ன கடைசி வார்த்தைகளில் ஒன்று: *"அம்மா, இதோ உம்மகன்... உம் மகன்கள்!”* என்பது. ஒருவேளை கீழ்ப்படிதல் இல்லாத ஒருத்தியாக நான் இருந்திருந்தேன் என்றாலும் கூட, இன்று நான் கீழ்ப்படிய வேண்டியிருந்திருப்பேன். ஏனென்றால் அதுமரிக்கிற ஒரு கடவுள் மனிதனின் உத்தரவாக இருந்தது.


இயேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!