மனத்தைரியத்துடன் பாவசங்கீர்த்தனம் செய்ய போங்கள்.
*மனத்தைரியத்துடன் பாவசங்கீர்த்தனம் செய்ய போங்கள்*
கடைசியாக எப்பொழுது நீங்கள் பாவசங்கீர்த்தனம் செய்தீர்கள்? எல்லாரும் சற்று அதை பற்றி சிந்தித்து பாப்போம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு? , இரண்டு வாரங்களுக்கு முன்பு? , இரண்டு வருடங்களுக்கு முன்பு? இருபது வருடங்களுக்கு முன்பு? நாற்பது வருடங்களுக்கு முன்பு? ஒவ்வொருவரும் உங்கள் மனசாட்சியை தட்டி கேளுங்கள். எப்போது நான் கடைசியாக பாவசங்கீர்த்தனம் செய்தேன்?
இன்னொரு நாளை கடந்து விடாமல், தயவுசெய்து குருவிடம் செல்லுங்கள். அங்கு *இயேசுவே குருவானவர் வடிவில் இருக்கின்றார்.இயேசு குருவானவரை விட நல்லவர். குருவானவர் வடிவிலே இயேசுவே, பாவசங்கீர்த்த பேழையில் உங்களை வரவேற்கின்றார். உங்களை அன்புடன் அவர் வரவேற்கின்றார்.* மனத்தைரியத்துடன் பாவசங்கீர்த்தனம் செய்ய போங்கள்.
திருத்தந்தை .பிரான்ஸிஸ்.
குருக்களிடமே பாவ அறிக்கை செய்து பாவ மன்னிப்பு பெற வேண்டும்.இந்த முறையை ஏற்படுத்தியது இயேசு கிறிஸ்துவே,வேத ஆதாராம் பின்வருமாறு.
*பிரிவினை நண்பர்களுக்கு விளக்கம் கொடுக்க தெரியாத வசனங்கள்*
"இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார்.இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.
யோவான் 20:21-23.
இயேசு,நேரடியாக கடவுளிடம் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என வேதத்தில் எந்த இடத்திலும் சொல்லவில்லை.
*பாவசங்கீர்தனம் செய்யாத கத்தோலிக்க கிறிஸ்தவனும்,
பாவசங்கீர்தனத்தை ஏற்றுக்கொள்ளாத பிரிவினை நண்பர்களும்,
தனக்கு தானே மோட்சத்தின் கதவை பூட்டிக்கொள்கின்றனர்.*
இயேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

To lead a happiest life,confession is must
ReplyDelete