போலி தீர்க்கதரிசிகள் ஜாக்கிரதை
https://youtu.be/tSjURuEhpSg?si=GL_plvFGn60l3ger
ஒவ்வொரு ஆண்டும் போதகர்கள் பலர் தோன்றுவார்கள் தீர்க்கதனிசனம் சொல்லுவார்கள் என்று வேதவசனம் எங்கே உள்ளது ?
அமெரிக்க அதிபர் தேர்தல்,இந்திய தேர்தலில் வெற்றி பெறுபவர் யார் என போலியாக தீர்க்கதரிசனம் சொன்ன போதும்,ஆசீர்வாதமான ஆண்டு என கொரோனா வந்த ஆண்டை தீர்க்கதரிசனம் சொன்ன போதும் இவர்கள் போலிகள் என்று தெளிவாக தெரிந்தப்பின்பும் இவர்களை பின்பற்றுவது கிறிஸ்துவுக்கு எதிரானது.போலியும், பொய்களும் கிறிஸ்துவிடம் இருந்து ஒருபோதும் வருவதில்லை.
புது வருட வாக்குத்தத்தம் தீர்க்க தரிசனம் என்கின்ற பெயரில் மக்களை ஏமாற்றும் போதகர்களிடமிருந்து எச்சரிக்கையாய் இருந்து இறைவார்த்தையின் வெளிப்பாட்டை புரிந்துகொண்டு வாழ்வோம்.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்ளுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment