புலன்களின் அரசனை அடக்கி ஆள வேண்டும்
பரிசுத்தமாயிருங்கள். உங்கள் சரீரங்களில் பரிசுத்தமாயிருக்கத் தொடங்கி, பின் ஆன்மாக்களைப் பரிசுத்தமாக்குங்கள். ஐம்புலன்களின் அரசனான உங்கள் கண்களிலிருந்து
தொடங்குங்கள். அதுதான் மிக வேதனையான, பின்னிக்கிடக்கிற ஆசைகளுக்கு வழி வகுக்கிறது.
கண், ஒரு பெண்ணின் உடலைப் பார்க்கிறது-ஒரு பெண்ணின் மீது இச்சை கொள்கிறது. கண் பணக்காரர்களின் செல்வத்தைப் பார்க்கிறது - பொன்னை இச்சிக்கிறது. கண் ஆளுகிறவர்களின் அதிகாரத்தைப் பார்க்கிறது-அதிகாரத்தை இச்சிக்கிறது.
*உங்களுடைய கண்கள் சமாதானமாய், நேர்மையாய். சாந்தமாய். தூய்மையாய் இருக்கட்டும். உங்கள் விருப்பங்களும் சமாதானமாய், நேர்மையாய், சாந்தமாய், தூய்மையாய் இருக்கும்.*
எவ்வளவுக்கு அதிகமாக உங்கள் கண்பார்வை சமாதானமாய், நேர்மையாய், சாந்தமாய், தூய்மையாய் சுத்தமாயிருக்குமோ, அந்த அளவுக்கு *உங்கள் இருதயம் சுத்தமாயிருக்கும்.*
சோதனை தரும் கனிகளை ஆவலுடன் கண்டுபிடிக்கிறவனாக இருக்கிற *உன் கண்ணின் மேல் ஒரு காவலை ஏற்படுத்து.*
*உங்கள் சரீரத்தில் நீங்கள் கற்புடையவர்களாக இருக்க விரும்பினால், உங்கள் பார்வைகளில் கற்புடையவர்களா யிருங்கள்.*
*சரீரத்தின் கற்பை நீங்கள் கொண்டிருந்தால், செல்வத்தின் மட்டிலும் அதிகாரத்தின் மட்டிலும் கற்புடையவர்களாயிருப்பீர்கள்.*
எல்லா கற்பையும் கொண்டிருந்து, *கடவுளுடைய சிநேகிதராய் இருப்பீர்கள்.*
"உங்களுடைய கற்புக்காக பரிகசிக்கப்பட பயப்படாதேயுங் கள். *கடவுளின் பகைவனாயிருப்பதைப் பற்றி மட்டுமே பயப்படுங்கள்.*
*நீங்கள் எவ்வளவுக்கு அதிக தூய்மையாயிருப்பீர்களோ, அவ்வளவிற்கு சத்தியத்தை கண்டுபிடிப்பீர்கள்*. ஏனென்றால் அசுத்தம், அது எதுவாக இருந்தாலும் சரி, எப்போதும் உங்கள் பார்வையையும் புத்தியையும் மங்கச் செய்து பாரமாக்கும் புகையாகவே இருக்கிறது.
இயேசுவின் போதனைகள்
கடவுள் மனித காவியம்.
அத்தியாயம் 96.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment