ஜெபமாலை புதுமைகள் -4
ஜெபமாலை புதுமைகள் - 4
*1986-ல் நமது தேவதாயின் செபமாலை பிலிப்பைன்சின் சர்வாதிகார மார்கோஸ் ஆட்சியை வீழ்த்தியது.*
பிலிப்பைன்சின் மக்கள் ஏழ்மையிலும் பசியிலும் வாடும்போது, நாட்டின் குடியரசுத்தலைவர் மார்க்கோசும் அவரது மனைவி இமெல்டாவும் ஊதாரித்தனமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இந்தநாள்களில் மக்கள் பல்வேறு விதமாக இமெல்டாவின் சொகுசு வாழ்க்கை குறித்து கருத்துத்துக்கள் தெரிவித்து வந்தனர்.
மக்கள் தங்களுக்கு புதிய குடியரசுத்தலைவராக திரு. பெனிக்னோ அகுயினோ (நினோய்) அவர்களை தேர்ந்தெடுக்க விரும்பினர். ஆனால் அவர், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரின் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலைக்குப்பிறகு நினோய் அவர்களின் மனைவி திருமதி கோரோஸன் "கோரி" அகுயினோ மார்க்கோசின் ஆட்சிக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தார்.
மக்கள், கோரி அவர்களை குடியரசுத்தலைவராக வேண்டுமென்று வலியுறுத்தி ஒரு லட்சம் கையெழுத்துக்களை சேகரித்து அவரிடம் ஒப்படைத்தனர்.
பெப்ரவரி 7, 1986 அன்று நடந்த தேர்தல், வன்முறைகளால் இரத்தக்களரி படிந்து மோசடியில் முடிந்தது. குடியரசுத்தலைவர் மார்க்கோசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஊடகங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தனக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை நசுக்க ராணுவத்தை ஏவினார்.
மணிலா அதிமேற்றாசனத்தின் கர்தினால் சின் இவ்வெற்றிக்கு எதிராக அகிம்சை போராட்டத்திற்கு வரும்படி பிலிப்பைன்ஸ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளுக்கு செவி சாய்த்து மக்கள் பெருந்திரளாக குவிந்தனர்.
அவர்கள் ராணுவ பீரங்கிகளையும் வீரர்களையும் சூழ்ந்து கொண்டு செபமாலை செபித்துக்கொண்டு கத்தோலிக்க பாடல்களும் போராட்டப்பாடல்களும் பாடினர்.
தேவாலயங்களில் திருப்பலிகளும் முழு இரவு செபங்களும் நடந்தன.
ஒரு வாரமாக நடந்த இந்த செபப் போராட்டத்தில், யாரும் எதிர்பாராத விதமாக ராணுவ வீர்கள் டாங்குகளில் இருந்து வெளியேறி, தங்களது துப்பாக்கிகளை கீழே போட்டுவிட்டு அமைதியாக செப வழியில் போராடிய மக்களுடன் சேர்ந்து கொண்டனர்.
குடியரசுத்தலைவர் மார்க்கோசு பெப்ரவரி 26, 1986 அன்று நாட்டை விட்டு வெளியேறினார். மக்கள் தெருக்களில் இறங்கி வெற்றியை கொண்டாடினர்.
கடவுளின் இரக்கத்திக்கு நன்றியாக திருப்பலிகளும், நன்றிசெபங்களும் ஒப்புக்கொடுக்கப்பட்டன.
புதிய குடியரசுத்தலைவர் கோரி அவர்களின் தலைமையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பப்ட்டு, பிலிப்பைன்ஸ் நாடு ஒரு புதிய சுதந்திர குடியரசு நாடக உருவானது. மார்க்கோசின் தீய, ஊழலாட்சியானது அமைதியான முறையில் முழுவதும் வீழ்த்தப்பட்டதை எண்ணி மக்கள் இன்றும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
நம் நாட்டில் நேர்மையான ஆட்சி அமையவும், மக்களின் ஒருமைப்பாடு, நல்லிணக்கத்தினை மதித்து நீதியை விரும்பும் தலைவர்கள் உருவாக, இடைவிடாமல் செபமாலை செபிப்போம்.
சேசுவுக்கே புகழ்!
மரியாயே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment