ஜெபமாலை புதுமைகள் - 3

 




ஜெபமாலை புதுமைகள் - 3

1955 ஆம் ஆண்டு செபமாலை பக்தியானது ஆஸ்திரியாவை கம்யூனிஸ்ட் ஆட்சியிலிருந்து விடுவித்தது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் மூன்று ஆண்டுகள் ஆஸ்திரியா நாடு ரஷ்யா வின் கொடுங்கோலான கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்களின் கீழ் கட்டுண்டு கிடந்தது. 

அச்சமயத்தில், பெட்ருஸ் என்னும் பெயர் கொண்ட பிரான்சிஸ்கன் சபை குருவானவர், 16 ஆம் நூற்றாண்டில் மிக குறைந்த எண்ணிக்கையில் இருந்த கிறிஸ்துவர்களுக்கு மாமரித்தாயின் செபமாலை பக்தியானது துருக்கியர்களுடனான லேபண்டோ என்னுமிடத்தில் நடந்த போரில் எங்கனம் வெற்றியை ஈட்டித்தந்து என்பதனை நினைவு கூர்ந்து ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராக செபமாலை சிலுவைப்போரை தொடுத்தார். 70000 மக்கள் ஆஸ்திரியாவினை ரஷ்யாவின் பிடியிலிருந்து மீட்க தினமும் செபமாலை செய்வோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு செபித்து வந்தனர்!!!!!!!!!!    

ஆஸ்திரியாவானது மிக முக்கியமான போர் முக்கியத்துவம் வாய்ந்த தளமாகவும் இயற்கை வளம் மிகுந்த நாடாக இருந்தாலும், உலக நாடுகள் யாருமே எதிர்பார்க்காத முறையில் சோவியத் யூனியனானது மே 13 ,1955 நமது பாத்திமா அன்னை முதல் காட்சி கொடுத்த ஆண்டு நினைவு நாளில் ஆஸ்திரியாவை விட்டு வெளியேறுவதாக உடன்படிக்கையில் கையெழுத்திட்டு ஒரு மனித உயிர் கூட பலியாகாமல், ஒரு குண்டு கூட முழங்காமல் ஆஸ்திரியாவுக்கு விடுதலை அளித்தது!!!!!!!!!!

இன்றும் உலகின் புகழ்வாய்ந்த வரலாற்று ஆசிரியர்களும், ராணுவ வல்லுனர்களும் சோவியத் யூனியனானது எதற்காக அல்லது எப்படி ஆஸ்திரியாவிலிருந்து வெளியேறியது என்பதனை தெளிவாக விளக்க முடியாமல் உள்ளனர் என்பதே மறுக்கமுடியாத நிதர்சனம்.

நமது தேவமாதாவின் செபமாலைக்காக தன்னையே அர்பணித்துள்ள அனைவருமே இதன் காரணம் அறிவார்கள். 

உலக அமைதிக்காக, நமது நாட்டின் நலனுக்காக  தினமும் தவறாமல் செபமாலை செபிப்போம்.


சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!