ஜெபமாலை புதுமைகள் -2
*ஜெபமாலை புதுமைகள்*
இரண்டாம் உலகப்போரின், 6 ஆகஸ்ட் 1945 அன்று அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது நாசகார அணுகுண்டுகளை வீசியது.
ஹிரோஷிமாவில் மட்டும் 1,40,௦௦௦ மக்கள் அழிக்கப்பட்டனர் மற்றும் பலர் அணு கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டனர்.
அணுகுண்டு போடப்பட்ட இடத்திலிருந்து 1 கி மீ தொலைவில் (8 கட்டடங்களுக்கு அடுத்து) ஒரு வீடு மற்றும் கோவில் இருந்தது.
அந்த கோவிலானது முழுமையாக சேதமடைந்தது. ஆனால், மிகவும் அதிசயிக்கத்தக்க விதத்தில் வீடும் அதில் இருந்து தினமும் நம்பிக்கையோடு பாத்திமா அன்னையிடம் ஜெபமாலை ஒப்புக்கொடுத்த ஜெர்மனியை சேர்ந்த எட்டு இயேசு சபை குருக்களும் அணுகுண்டு அழிவில் இருந்து பாதுகாக்கப்பட்டனர்.
இந்த எட்டு இயேசு சபை குருக்களும், போர் வீரர்கள் இல்லை. ஜெர்மனியும் ஜப்பானும் போரில் நண்பர்களாக இருந்ததால் ஜப்பானில் மறைபரப்பு பணி செய்ய அனுமதிக்கப்பட்டு ஜெர்மனியில் இருந்து வந்து இயேசுவின் போதனைகளை ஜப்பான் மக்களுக்கு தினமும் அறிவித்து வந்தவர்கள்.
மிகவும் அதிசயிக்கத்தக்க விதத்தில் மிகவும் சிறிய காயங்களுடன், கதிரியக்க பாதிப்புக்கள் எதுவும் இல்லாமல், பார்வைக்கோளாறு, காது கேளாமை அல்லது வேறு எந்த பாதிப்புக்கும் உள்ளாகாமல் உயிர் பிழைத்தனர்.
அவர்கள் பல தடவை ( 200 தடவைகளுக்கு மேல் என்று அருட்திரு. ஹூபேர்ட் ஃசிபர், உயிர் பிழைத்த இயேசு சபை குருவானவர் கூறியுள்ளார்) பல்வேறு மருத்துவ மற்றும் அறிவியல் வல்லுநர்களால் அவர்களின் அனுபவங்கள் குறித்து கேள்விகள் மற்றும் சோதனைகள் செய்யப்பட்டது.
அனைத்து கேள்விகளுக்கும் அவர்களின் பதில் ஒன்றே ஓன்று மட்டும் தான்
" நாங்கள் உயிர் பிழைத்ததற்கு ஒரே காரணம் பாத்திமா அன்னையின் செய்தியை நாங்கள் வாழ்ந்து கொண்டு இருந்தது என்று மனப்பூர்வமாக நம்புகிறோம். நாங்கள் அந்த வீட்டில் வசித்த ஒவ்வொரு நாளும் தவறாமல் ஜெபமாலை சொல்லி வந்தோம்"
*தினமும் குடும்ப செபமாலை செபிப்போம். நமது குழந்தைகளுக்கு அன்னையின் பாதுகாப்பை பெற்றுத்தருவோம்.*
மரியாயே வாழ்க!!

Comments
Post a Comment