வியாகுல மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
வியாகுலத்தாயே !
உமது மகனின் பாடுகளையும் கொடூரமான மரணத்தையும் கண்ணெதிரேப் பார்த்து தாங்கியத்தாயே! உமது வியாகுலங்களுக்கு முன் எங்கள் வாழ்வில், நாங்கள் சந்திக்கும் துன்பங்கள் ஒன்றுமில்லையே !
ஒரு குற்றமும் செய்யாத உம் மகனே துன்பப்படும் போது, பாவம் பல செய்த நாங்கள் துனப்படுவதில் தவறில்லையே !
வியாகுல மாதாவே! எங்கள் துன்பங்களில் உம்மை போலவே கடவுள் நம்பிக்கையில் தளராமல் துன்பங்களை எதிர்கொள்ளும் வரத்தை உம் மகனிடம் பெற்றுத்தாரும்.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment