புனித மாக்சிமில்லியன் கோல்பே
புனித மாக்சிமிலியன் கோல்பே.
அமல அன்னை மீது அளவுகடந்த பக்திகொண்டிருந்த போலந்து நாட்டைச் சேர்ந்த புனித மாக்சிமிலியன் கோல்பே இளம் வயதிலேயே தேவமாதாவின் மீது அதிக பக்திக்கெண்டவர். தேவமாதா படத்தின் முன் அதிக நேரம் செபிப்பவர்.
ஒரு முறை தேவமாதா,புனிதருக்கு
வெள்ளை மற்றும் சிவப்பு என இரண்டு கீரிடங்களுடன் காட்சி தந்து இந்த கீரிடங்களில் எது உனது விருப்பம் ? என்று கேட்டார்கள்.
வெள்ளை கீரிடம் தூய்மையில் நிலைத்திருத்தல் என்பது பொருள்.சிவப்பு கீரிடம் வேதசாட்சி மரணம் என்றார்கள். புனிதர் தயங்காமல் இரண்டையுமே தேர்ந்தெடுத்தார்.
தேவமாதாவை இன்னும் அதிகமாக அன்பு செய்து அவர்களுக்காக உழைப்பதற்கு குருத்துவப்பணியே சரியானது என்று முடிவுசெய்து பெற்றோர்களின் ஒப்புதலுடன் பிரான்சிஸ்கன் குருவானார்.
மாசற்ற மரியாயின் பக்தியை பரப்புவதற்கு ஒர் அச்சு இயந்திரம் வாங்கி பத்திரிக்கைகளை வெளியிட்டார்.அவரது கட்டுரைகள் மக்களை கவரந்தன.அவருடைய வார்த்தைகள் நெருப்பைப் போல் இருந்தன.மாதாவை நோக்கி செபிக்கவும்,மனதிரும்பி நல்வாழ்வு வாழவும் மக்களை தூண்டியது.பத்திரிக்கையின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் உயர்ந்தது.
ஜெர்மனி, போலந்து நாட்டின் மீது போர்தொடுத்ததை கண்டனம் தெரிவித்து சமாதானத்திற்க்கு வேண்டுகோள் விடுத்து பத்திரிக்கையிலே செய்தி பதிவிட்டதற்க்காக ஜெர்மனி அரசால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒரு நாள் வதைமுகாமில், கைதி ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அதனால் அந்த கைதி பிடிபடும்வரை, அங்கிருந்த கைதிகள் அனைவரையும், பத்து பத்துப் பேராக பட்டினிச் சிறையில் அடைத்து மரணமடைவதற்கு சிறைக்காவலர் தீர்மானித்தார். முதலில் அவர், பத்துப் பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களை பட்டினிச் சிறைநோக்கி அழைத்துச்சென்றார். அவர்களில் ஒரு கைதி, போகும் வழியில், ஐயோ, எனது ஏழை மனைவி மற்றும், பிள்ளைகளை இனிமேல் பார்க்கவே முடியாதா என்று கதறினார். அதைக் கேட்ட புனித கோல்பே அந்தக் கைதிக்குப் பதிலாக, தான் மரிக்க தயார் என்று மரணதண்டனையை விரும்பி ஏற்றுக்கொண்டு பட்டினிச் சிறைக்குச்சென்றார்.
இருட்டு அறையில் உணவுதண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டப்போதும் புனிதர் கைதிகள் அனைவரையும் செபிக்க வைத்து இறைபுகழ்ச்சி பாடல்கள் பாடி நல்ல பாவசங்கீர்தனம் செய்யப் வைத்து நல்ல மரணத்திற்கு ஆயத்தபடுத்தினார்.10-15 நாட்கள் கடத்தபிறகு கைதிகள் ஒருவர் ஒருவராக வலிமையற்று பட்டினியால் சுயநினைவு இழந்து இறந்தனர்.மூன்று வாரங்களுக்குப் பிறகு காவலன் அறையை திறந்து உயிர் இழந்தவர்களின் சடலங்களை வெளியே எடுக்கும்போது புனிதர் உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தான்.விஷ ஊசி போட்டு கொல்ல கட்டளை வந்தபோது போதும் ஊசிப்போட்டுக்கொள்ள தயங்காமல் தானாகவே கையை நீட்டியப்புனிதர்.1941ம் ஆண்டு, ஆகஸ்ட் 14ம் தேதி, நச்சு ஊசி ஏற்றி கொல்லப்பட்டார்.
இவருக்கு புனிதப்பட்டம் கொடுக்கும் போது புனிதரால் உயிர்பிழைத்த கைதி Franciszek Gajowniczek தனது இரண்டு
குழந்தைகளுடன் பங்குபெற்றார்.தனது வாழ்நாள் முழுவதும் கோல்பேவுக்கு சாட்சியாக வாழ்ந்தார்.
புனித மாக்சிமிலியன் கோல்பே சிறைகைதிகள் மற்றும் பத்திரிக்கையாளிரின் பாதுகாவலர்.
புனித மாக்சி மில்லியன் கோல்பே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment