கட்டாயமாக பின்பற்ற வேண்டிய தலை வெள்ளி, சனி பக்தி முயற்சிகள்
தலைவெள்ளி மற்றும் முதல் சனி பக்தி முயற்சி என்றால் என்ன ? :
“ நீங்கள் தவஞ்செய்யாவிடில் எல்லோரும்.. எல்லோரும் கெட்டுப்போவீர்கள் “ என்கிறார் நம் ஆண்டவர்.. (லூக்.13:3)
தலை வெள்ளியான இன்று ஒருசந்தி சுத்த போஜனம் அனுசரிப்போம்.
இயேசுவின் திருஇருதயமும், மாதாவின் மாசற்ற இருதயமும் நாம் செய்யும், இந்த உலகத்தினர் செய்யும், கடவுள் நம்பிக்கையற்றவர் செய்யும் பாவ துரோகங்கள் மற்றும் நிந்தைகளால் மிகவும் நொந்துபோய் இருக்கின்றன. அவர்கள் இருதயங்களுக்கு நாம் தரும் ஆறுதலே இந்த தலைவெள்ளி, முதல் சனி பக்தி முயற்சிகள்.
இயேசு நம்மிடம் கேட்ட பக்தி முயற்சியே முதல் வெள்ளி பக்தி முயற்சி, மாதா நம்மிடம் கேட்ட கேட்டவையே முதல் சனி பக்தி முயற்சி.
“ நீயாவது எனக்கு ஆறுதல் தர மாட்டாயா “ என்று புனித மார்கரெட் மரியம்மாவிடம் நம் ஆண்டவரே கேட்டார். அதே போல் பாத்திமா சிறுமி லூசியாவிடம் நம் தேவ மாதா, தன் குமாரன் இயேசுவின் பனிரெண்டு வயது தோற்றத்துடன் தோன்றி “ நீயாவது என் இருதயத்திற்கு ஆறுதல் தர மாட்டாயா “ என்று கேட்டார்கள்.
தலை வெள்ளி :
17- ஆம் நூற்றாண்டில் அதாவது 1675-ம் ஆண்டு திவ்ய நற்கருணைத் திருநாளுக்கு அடுத்த வார வெள்ளிக்கிழமையன்று தேவ நற்கருணைக்கு முன், ஜெபத்தில் ஆழ்ந்திருந்த அர்ச்.மார்கரீத் மரியம்மாளுக்கு நமதாண்டவர் தமது திருஇருதயத்தை திறந்து காட்டினார். அக்கினி சுவாலையின் மத்தியில் தோன்றிய அவ்விருதயத்தைச் சுற்றி முள்முடியும் அதன் மேல் சிலுவையும் காணப்பட்டன.
சேசு அவளிடம், “ இதோ மனுமக்களை அளவற்றவிதமாய் நேசிக்கும் இருதயத்தைப்பார்! தனக்கென ஒன்றும் வைக்காது தன்னையே வெறுமையாக்கிய இருதயம் தன் அன்பை வெளிப்படுத்த உயிரையே அர்ப்பணித்த இருதயம். அதற்கு கைமாறாக கிடைப்பது என்ன/ பெரும்பாலும் நன்றிகெட்டதனமும் நிந்தை அவமானமும் தேவதுரோகமுமே.. எனக்கென தங்களை நேர்ந்து கொண்டவர்களே இவ்வாறு துன்பம் தருகின்றனர் என்பதே என் இருதயத்திற்கு மிகுதியான வேதனை தருகிறது. இந்த நன்றிகெட்டதனத்திற்கு நீயாவது பரீகாரம் செய்யமாட்டாயா?” என்று இரக்கத்தோடு கேட்டார்..
பாவ முட்களால் கிழிக்கப்ட்ட நம் சேசுவின் திரு இருதயத்திற்கு நாம் என்ன செய்யலாம் ?
முதல் வெள்ளி அன்று ஒருசந்தி, சுத்தபோஜனம், சில ஒறுத்தல் முயற்சிகள் தவிர நம் இயேசுவின் திருப்பாடுகளை அதிகமாக தியானிக்க வேண்டும். துக்க தேவரகசியம் ஜெபமாலையில் தியானிக்க வேண்டும். முடிந்தவர்கள் சிலுவைப்பாதை செய்யலாம். திருஇருதய ஜெபமாலை அல்லது இரக்கத்தின் ஜெபமாலை ஜெபித்தல் போன்ற பக்தி முயற்சிகளையும் செய்யலாம்.. மேலும் இன்றைய தினம் நாம் சுமக்கும் அத்தனை சிலுவைகளையும், திருஇருதயத்தின் நிந்தை அவமானங்களுக்கு பரிகாரமாக ஒப்புக்கொடுப்போம்..நல்ல பாவசங்கீர்தனம் செய்து பரிகார நன்மை வாங்க வேண்டும்.இயேசுவின் திரு இருதயத்திற்கு ஆறுதலாக அவரையே(நற்கருணை ) பரிகாரமாக ஒப்புக்கொடுகக வேண்டும்.
திரு இருதய ஆண்டவரின் பன்னிரெண்டு வாக்குறுதிகள்!
திரு இருதய ஆண்டவர் புனித மார்கரீத்து மரியாவுக்கு நான்கு முறை காட்சிக் கொடுத்தார். நான்கு கட்சிகளிலுமே இயேசு சொன்னது பாவிகளால் என் இருதயம் மிகவும் துயரம் அடைகிறது என்று துயருற்றார். நான்காவது காட்சியின் வழியாக தம் பக்தர்களுக்கு 12சிறப்பான வாக்குறுதிகளை அருளியுள்ளார்.
1. அவர்கள் வாழ்க்கை நிலைக்குத் தேவையான அருளை வழங்குவோம்.
2. அவர்கள் குடும்பங்களில் அமைதி நிலவச் செய்வோம்.
3. எல்லாத் துன்பங்களிலும் அவர்களுக்கு ஆறதலாக இருப்போம்.
4. வாழ்விலும், சிறப்பாக இறுதி வேளையிலும் அவர்களுக்குத் தவறாத அடைக்கலமாயிருப்போம்.
5. அவர்கள் முயற்சிகள் வெற்றிபெறத் திரளான அருளைப் பொழிவோம்.
6. நமது இதயம் பாவிகளுக்கு இரக்கத்தின் ஊற்றும் கரைகாணா அன்புக் கடலுமாகஇருக்கும்.
7. புண்ணிய வழியில் ஊக்கமற்றவர் பக்தி வேகத்தைப் பெறுவர்.
8. பக்தியுள்ளோர் புனித நிறைவை நோக்கி விரைந்து செல்வர்.
9. எந்த வீட்டில் நம் திரு இதயப் படத்தை நிறுவித் தொழுவார்களோ, அந்த வீட்டை ஆசீர்வதிப்போம்.
10. கல் நெஞ்சரான பாவிகளை மனம் திருப்பும் வரத்தைக் குருக்களுக்குஅளிப்போம்.
11. திரு இதய பக்தியைப் பரப்புவோரின் பெயர் நம் இதயத்தில் அழியாதபடிபொறிக்கப்படும்.
12. தொடர்ந்து ஒன்பது தலை வெள்ளிக் கிழமைகளில் நற்கருணையை உட்கொள்பவர்கள், தங்கள் பாவங்களுக்காக மனத்துயர் கொண்டு நன்மரணம் அடைவர். அவர்கள் நம்பகைவராகவோ, திருவருட் சாதனங்களைப் பெறாமலோ இறக்க மாட்டார்கள்
சிந்தனை
நாமும் நம்மையும் நம் குடும்பங்களையும் மனம் திருந்தாத அனைத்து பாவிகளையும் நமது ஒவ்வொரு செபத்திலும் அன்னையின் மாசற்ற இருதயத்தின் வழியாக இயேசுவின் திரு இருதயத்திற்க்கு ஒப்புக்கொடுப்போம்
முதல் சனி : தேவ மாதா 5 அன்பு வேண்டுகோள்களை நம்மிடம் கேட்கிறார்கள்.தேவ மாதாவுக்கு எதிராக நம்மை போன்ற பாவிகளால் செய்யப்படும் கீழ்க்கண்ட 5 நிந்தைகளுக்கு ஆறுதல் தருதல்.
1.தேவ மாதா அமலொற்பவி என்ற சத்தியத்துக்கு எதிராக செய்யப்படும் நித்தைகளுக்கு பரிகாரம்.
2 தேவ மாதா கடவுளின் தாய் அல்ல என்பதற்கு எதிராக செய்யப்படும் நிந்தைகளுக்கு பரிகாரமாக.
3 தேவ மாதா முப்பொழுதும் கன்னிகை என்ற விசுவாச சத்தியத்துக்கு எதிராக செய்யப்படும் நிந்தைகளுக்கு பரிகாரமாக.
4 சிறுவர் சிறுமியரை தேவ மாதாவின் பக்தியில் இருந்து அகற்றும் நிந்தனை களுக் பரிகாரமாக.
5 ஜெபமாலை,உத்தரியம் போன்ற மாதாவின் புனித பொருட்களை அவமதிக்கும் நிந்தைகளுக்கு பரிகாரமாக.
நல்ல பாவசங்கித்தனம் செய்து பரிகார பரிகார நன்மை உட்கொள்கிறது.
குறைந்தது 53 மணி ஜெபமாலை செய்கிறது.
பதினைந்து தேவ இரகசியங்களில் ஏதேனும் ஒன்றை தியானித்து மாதாவோடு 15 நிமிடம் தங்கியிருப்பது.
இவற்றை முழுமனதோடு அனுசரித்து வந்தால் உலகுக்கு ஒரு சமாதான காலம் கொடுக்கப்படும்.
இதனை அனுசரிக்கும் விசுவாசிகளுக்கு மரண நேரத்தில் இரட்ணியத்திற்கு தேவையான அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என்று மாதா பாத்திமாவில் அர்சிஸ்ட லுசியா அம்மாவிடம் வாக்களித்துள்ளார்கள்.
கடவுளிடம் வரம் வேண்டும் கத்தோலிக்கர்களாகவே வாழ்க்கையை முடித்துக்கொள்ளாமல்.கடவுளுக்கும் கடவுளின் தாய்க்கும் ஆறுதல் அளிப்பவர்களாக மாறுவோம் வீட்டிலும் நாட்டிலும் உலகத்திலும் சமாதானத்தை கொண்டு வருவோம்.
*இந்த இரண்டு நாட்களில் நமது தனிப்பட்ட விண்ணப்பங்கள் எதுவும் இல்லாமல் இயேசுவின் திரு இருதயத்திற்கும் மாதாவின் மாசற்ற இருதயத்திற்கும் ஆறுதல் தர வேண்டும் என்ற எண்ணத்தோடு பக்தி முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.*
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment