Stop Communion in the Hand -4
#stop communion in the hand.
கரங்களில் நற்கருணை கொடுப்பதையும்/பெறுவதையும் நிறுத்துங்கள்.
*கரங்களில் நற்கருணை வழங்குபவர்களுக்கும் /பெறுபவர்களுக்கும் உத்தரிக்கும் ஸ்தல ஆன்மாக்களின் எச்சரிக்கை.*
உத்தரிக்கும் ஸ்தலத்தில் சில ஆன்மாக்கள் மரியா சிம்மாவிடம் "நாங்கள் இங்கு மிகவும் வேதனைப்பட வேண்டிய பாவம் கையில் நற்கருணையை பெற்றதற்காக தான்" என்றார்கள்.
மேலும் மரியா சிம்மா *தான் உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருந்து விடுவித்த குருக்கள் மற்றும் ஆயர்களில் பெரும்பாலானவர்கள் கரங்களில் திவ்விய நற்கருணை வழங்குவதை ஊக்குவித்ததற்காவும்,* பிற மரியாதையற்ற செயல்களுக்காக உத்தரிக்கும் ஸ்தலத்தில் வேதனை அனுபவித்ததாக பகிர்ந்துள்ளார்.
*கரங்களில் திவ்விய நற்கருணை "பசாசின் வேலை" என்றும் எச்சரிக்கிறார்.*
குறிப்பு - இந்த வெளிப்பாடு 1970களில் நடந்தது அன்றைய அவசங்கைகளை விட தற்போது மிக அலட்சியமான முறையில் திவ்விய நற்கருணை ஆண்டவரை இடது கரங்களில் வழங்க பயிற்சி அளிக்கப்பட்டு வழங்குப்படுகின்றது. இப்பேற்பட்ட அவசங்கைகளுக்கு உத்தரிக்கும் ஸ்தலம் கூட கிடைப்பது சந்தேகம் தான்.
மரியா சிம்மா(உத்தரிக்கும் ஆன்மாக்களோடு பேசி அவர்களில் பலரை தமது செப தவ பரிகாராத்தால் மோட்சம் செல்ல உதவியவர்)
Some souls of Purgatory tell Maria Simma (seer of the souls) that the sin for which they have to suffer the most is because they have received Communion in their hand.She freed 40 or 50 priests and bishops from Purgatory, most for promoting Communion in hand or other types of irreverence. She calls Communion in hand "the work of the devil." Many are for, due to lack of obedience to the Holy Father, lack of love for the Holy Mass, lack of love for prayer and fasting, not having read the breviary, and I repeat, for the Communion in the hand.
Source. http://www.jesusmariasite.org/the-lady-of-all-nations/
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment