வாழும்வரை மட்டுமே அவகாசம்
மரணத்திற்கு பின் என்ன என்ற
இரகசியத்தை சொல்லித்தராத மதமும் வீண்.
கற்ப்பிக்காத கல்வியும் வீண்.
சிந்திக்காத பகுத்தறிவும் வீண்.
நம் உடலிலிருந்து ஆன்மா பிரிக்கப்படுவதே மரணம்.
பிரிக்கப்பட்ட உடல் புதைக்கப்படும்/எரிக்கப்படும்.
ஆனால் பிரிந்த ஆன்மா பாவப் புண்ணியங்களுடன் இறைவனையடையும்.
செய்த புண்ணியங்களுக்கு வெகுமதியையும்
செய்த பாவங்களுக்கு
தண்டனையும் இறைவனிடமே.
இல்லை ! பொய் ! என்ற சிந்தனைகள் இறைவனிடமிருந்து வருவதில்லை.
எந்த ஒரு பயணத்திற்கு
முன்தயாரிப்பு அவசியம்.
இறப்பை நோக்கிய நமது வாழ்க்கைப் பயணத்திற்குப் புண்ணியங்கள் என்ற
முன் தயாரிப்பு மிகஅவசியம்.
கருவறையில் துவங்கி
கல்லறையில் அடங்கும்வரை
மட்டுமே நமக்கு அவகாசம் !
வாங்கிய பட்டங்களாலும்
வகித்து வந்த உயர் பதவியாலும்
சம்பாதித்து வைத்த சொத்துக்களாலும், கடவுள் நன்மைகளுக்குத் தரப்போகும் மகிமையினை விலைக்கு வாங்கவும் முடியாது,
பாவங்களுக்குத் தரப்போகும் தண்டனையையும் நிறுத்தவும் முடியாது.
பலருடைய மரணத்தை பார்க்க இறைவன் நம்மை அனுமதிப்பது
நமக்கும் இதே மரணம் நிச்சயம் உண்டு என்று எச்சரிப்பதற்கே.
ஒவ்வொரு நாட்களையும் தருவது,
செய்த பாவங்களுக்கு உரிய பரிகாரங்களை செய்யவும்
இனிமேலும் பாவங்களை தொடராமல்,
இறைநீதியின் தண்டனையை தவிர்ப்பதற்கே.
புண்ணியங்களை மட்டும் செய்து இறைவனிடம் வெகுமதியை பெறுவதற்கே.
பாவியோ மரணத்தை ஏற்க தயங்குகிறான்.
புண்ணியவானோ, மரணமே கடவுளை அடையும் வழி என்று மகிழ்ந்து ஏற்கிறான்.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment