திவ்விய நற்கருணை ஆண்டவருக்கு உரிய பக்தி மரியாதையை செயலில் வெளிப்படுத்தும் விசுவாசிகள்
திவ்விய நற்கருணை ஆண்டவரை பாசத்துடன் இறைமக்களுக்கு ஊட்டிவிட்டு, எந்த அவமரியாதையும் ஆண்டவருக்கு நேர்ந்துவிடாமல் தடுப்பவர்கள், திவ்விய நற்கருணை பாதுக்காவலர்கள் நம் பரிசுத்த குருக்கள்.
நித்திய ஸ்துதிக்குரிய பாடும்போதும்,நடுப்பூசையில் எழுந்தேற்றத்தின் போதுமட்டும் முழங்காலில் நிற்காமல்,தன்னை படைத்தவர் தன்னிடமே திருஉடலாக, ஆன்ம உணவாக வரும்போதும் முழங்காலில் நின்று நாவில் தன் ஆண்டவரைப் பெற்றுக்கொள்ளும், திவ்விய நற்கருணை மீது விசுவாசமுள்ள இறைமக்கள்.(காண்க video 👆).
"மனிதனின் மகத்துவமும் பிரபுத்துவமும், அவனுடைய படைப்பாளரின் மீதான அவனது அன்பின் மிக உயர்ந்த வெளிப்பாடாக, கடவுளுக்கு முன்பாக மண்டியிடுவதில் அடங்கியுள்ளது. இயேசுவே தந்தையின் முன்னிலையில் முழங்காலில் பிரார்த்தனை செய்தார்."
ராபர்ட் கார்டினல் சாரா.
மண்ணுல மோட்சம் திவ்விய நற்கருணை. ஒரு நாள் நமக்கு மோட்சம் தரப்பபோகிறவரை உட்கொள்ளும்போது உட்சபட்ச தாழச்சியும்,பக்தியும் மரியாதையும் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு கத்தோலிக்கர்களின் கடமை.
திவ்விய நற்கருணை ஆண்டவரை அவமரியாதை செய்ய பசாசு😈 வைக்கும் கண்ணிகளையும் கண்டறிந்து விலகுவதும் ஒவ்வொரு கத்தோலிக்கர்களின் நம் கடமை.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment