புனிதர்களின் பொன்மொழிகள்

 



 பசாசு 100 க்கும் மேற்பட்ட சாதாரண நபர்களை விட அதிகமாக ஒரு குருவானவரை சோதிக்கிறது, ஏனெனில் மேய்ப்பனை சிதறடிக்க, ஆடுகள் சிதறிடிக்கபடுவார்கள் 

 - அர்ச் அல்போன்ஸ் லிகோரியார்.

Pray for Priests

The devil tempts one priest more than 100 laypersons because by taking away the shepherd, the flock is scattered.

- St. Alphonsus Liguori

குருக்களுக்காக வேண்டும் ஜெபம்

நித்திய குருவாகிய சேசுவே! உமது தாசராகிய குருக்களுக்கு எவரும் தீங்கு செய்யாதபடி அவர்களை உமது இருதயமாகிய தஞ்ச ஸ்தலத்தில் வைத்துக் காப்பாற்றியருளும். அனுதினமும் உமது திருச்சரீரத்தைத் தொட்டு வரும் அபிஷேகம் பெற்ற அவர்கள் கரங்களைக் கறைபடாமல் காப்பாற்றும். விலைமதிக்கப்படாத உமது திரு இரத்தத்தில் தோய்ந்து சிவந்திருக்கும் அவர்களுடைய இதழ்களை நிர்மல சுத்தமாய்க் காத் தருளும். உமது மாட்சிமை பொருந்திய குருத்துவத்தின் உன்னத அட்சரங்களால் முத்திரிக்கப் பெற்ற அவர்கள் இருதயங்கள் உலகப் பற்று இன்றி தூய்மையாயிருக்கச் செய்தருளும். உலகத் தீவினைகள் அவர்களை அணுகாதபடி உமது பரிசுத்த அன்பு அவர்களைச் சூழ்ந்து காக்கும் கேடயமாயிருக்கக்கடவது. அவர்களுடைய பிரயாசை ஏராளமான பலன் கொடுக்கும்படி ஆசீர்வதித்தருளும். யாராருடைய இரட்சணியத்திற்காக உழைக்கிறார்களோ, அவர்களே குருக்களுக்கு இவ்வுலகத்தில் ஆறுதல் சந்தோஷமும், பரலோகத்தில் அழகிய நித்திய கிரீடமுமாயிருப்பார்களாக. 

ஆமென்.


சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!