துன்பங்கள்- கடவுளின் அழைப்பு
📢📢கடவுளின் அழைப்பிற்கான சுவாரஸ்சியமான
*ஒரு குட்டிக்கதை*📢
ஒரு கட்டுமான எஞ்சினியர்…
13 வது… மாடியிலே வேலை செய்து
கொண்டு இருந்தார்…
.
ஒரு
முக்கியமான வேலை…
.
கீழே ஐந்தாவது
மாடியில் வேலை செய்து கொண்டு
இருந்த கொத்தனாருக்கு முக்கியமான
செய்தி சொல்ல வேண்டும்…
.
செல் போனில் கொத்தனாரை
கூப்பிட்டார் எஞ்சினியர்..
.
ம்ஹும்..கொத்தனார் வேலை
மும்முரத்தில்,
சித்தாளுடன் பேசிக் கொண்ட இருந்தார்…
.
போனை எடுக்க
வில்லை..
.
என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்..
.
அப்பொழுதும்.. கொத்தனார்.. மேலே
பார்க்கவில்லை…
.
இவ்வளவுக்கும்…
கொத்தனார் வேலை செய்யும் இடத்தில்
இருந்து , அவரால் என்ஜினியரை
நன்றாகப் பார்க்க முடியும்…
எஞ்சினியர் என்ன செய்வதென்று
யோசித்தார்…
.
ஒரு பத்து ரூபாய்
நோட்டை எடுத்து,
மேலே இருந்து,
கொத்தனார் அருகில் போட்டார்…
.
ரூபாயைப் பார்த்த கொத்தனார்,
அதை எடுத்து பையில் போட்டுக்
கொண்டார்…
.
ஆனால்சற்றும் மேல் நோக்கிப் பார்க்கவில்லை…
.
என்ஜினியருக்கு ஒரே கோபம்..
.
இருந்தாலும் பொறுத்துக் கொண்டு…
.
ஒரு ஐநூறு ரூபாயை கொத்தனார் மேல் போட்டார்…
எடுத்து சட்டைப் பையில் வைத்துக்
கொண்டு…
கொத்தனார் மும்முரமாக
இருந்தார்…
.
எஞ்சினியர்.. பொறுமை
இழந்து
ஒரு சின்ன கல்லை எடுத்து,
கொத்தனார் மீது போட்டார்…
.
அது அவரது தோள் மீது பட்டு நல்ல
வலியோடு, மேலே பார்த்தார்…
.
அப்பொழுதுதான் எஞ்சினியர் தன்னை
அழைத்தார் என்பதை உணர்ந்தார்…
.
மனிதனும்
அப்படித்தான்….
மேலே இருந்து இறைவன் அவனை அழைப்பது
அவனுக்கு புரிவதில்லை…
உலக மாயைகளில், சிக்கித் தவிக்கின்றான்...
இறைவன் அவனுக்கு அருட்கொடைகளை அளிக்கின்றான்...
அப்பொழுதும் அவன் இறைவனை
ஏறிட்டுப் பார்ப்பதில்லை...
ஆனால் ஒரே ஒரு
துன்பம் நேரும் பொழுது தான்
இறைவனை ஏறிட்டுப் பார்க்கின்றான்.
துன்பங்கள் வரும் நேரம்…
இறைவன்
நம்மை அழைக்கும் நேரம்
என்று பொருள்.
துன்பத்திலாவது
இறைவனை கண்டுக்கொள்வோம்.
துன்பங்களால் மட்டுமே *இறைவனுக்கும்,மனிதனுக்கும் உள்ள உறவு வலுப்பெறுகின்றது.*
அமைந்த மனதுடன் தாங்கிக்கொள்ளும் துன்பங்களால்
*கடவுளின் புண்ணியங்களை பெறலாம்,நாம் செய்த பாவத்திற்கு பரிகாரமாக, தண்டனையாக ஏற்றுக்கொள்ளலாம்,கடுமையான பாவிகளை,நல்ல மனிதனாக மனமாற்ற பயன்படுத்தலாம்,நம் குடும்ப உறுப்பினர்களின் தெய்வீக பாதுக்காப்பிற்கு ஒப்புக்கொடுக்கலாம்*.இதுப்போல பல நன்மைகளுக்கு நாம் அனுபவிக்கும் துன்பங்களை ஒப்புக்கொடுக்கலாம்.
நாம் விரும்பி செய்யும் பக்தி முயற்சிகளைவிட, நம் வாழ்வின் இன்பங்களுக்கு கடவுளுக்கு நன்றி சொல்வதைவிட, *நமது துன்பங்களுக்கு கடவுளுக்கு நன்றி சொல்வதே உண்மையான கடவுள் பக்தி.*
துன்பங்களில் இருந்து விடுதலைப்பெற *கடவுளை தவிர்த்து, தவறான வழிகளை தேர்ந்தெடுப்பவன் மீண்டும் படுகுழியில் விழுவான்.*
கடவுள் நம்பிக்கையுடன், நேரிய வழியில் துன்பங்களை தைரியமாக எதிர்கொள்பவன், *துன்பங்களை அருள் வரம் பெற்று தரும் வரங்களாக நிச்சயமாக மாற்றுவான்*.
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0387Z9QXgt3xb7t7q5Q3NAbg9wUdXzM8Bj4ChmfX9Z91HUJgK6sLuo84uTaXcYBKRhl&id=100083271078254&mibextid=Nif5oz
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment