சேசுகிறிஸ்துநாதர் மாமிசமாக வருகிறார் என்று ஏற்றுக்கொள்வது எப்போது ?
இப்போது உலகத்தில் மோசக்காரர் அநேகர் நடமாடுகிறார்கள்.இவர்கள், சேசுகிறிஸ்துநாதர் மாமிசத்தில் வந்தார் என்று ஏற்றுக்கொள்வதில்லை. இப்படிப்பட்டவனே மோசக்காரனும், அந்திக்கிறீஸ்துவுமாக இருக்கிறான்.
நீங்கள் செய்த வேலையை இழக்காமல் அதன் பூரணப்பலனை பெற்றுக் கொள்ளும்படி எச்சரிக்கையாக இருங்கள்.
2-அருளப்பர் 7-8.
இன்றும் சேசுகிறிஸ்துநாதர் மாமிசமாக நமக்கு உணவாக வரும் ஒரே பரிசுத்தமுறை, திவ்விய நற்கருணை மட்டுமே.என்பதை விசுவசித்து ஏற்றுக்கொள்ளாதவர்கள் அநேகர்.
*சேசுகிறிஸ்து நாதர் மாமிசமாக வருகிறார் என்று விசுவசித்து ஏற்றுக்கொள்ளாதவர்கள் தான் முககவசம் அணிந்து திவ்யநற்கருணையை கரங்களில் வழங்குகிறார்கள் / பெறுகிறார்கள்.
*சேசுகிறிஸ்து நாதர் மாமிசமாக வருகிறார் என்று விசுவசித்து ஏற்றுக்கொள்ளாதவர்கள் தான்,நாவில் வாங்கினால் நோய் பரவும் என்று எச்சரித்து கரங்களில் திவ்விய நற்கருணை வாங்க சொல்லி தப்பறையை போதிக்கிறார்கள்.
* சேசுகிறிஸ்து நாதர் மாமிசமாக வருகிறார் என்று விசுவசித்து ஏற்றுக்கொள்ளாதவர்கள் தான் இடது கரங்களில் திவ்விய நற்கருணை வழங்குகிறார்கள் / பெறுகிறார்கள்.
*சேசுகிறிஸ்து நாதர் மாமிசமாக வருகிறார் என்று விசுவசித்து ஏற்றுக்கொள்ளாதவர்கள் தான் திவ்விய நற்கருணையை இறைமக்களே எடுத்து உட்கொள்ள அனுமதிக்கிறார்கள்.
* சேசுகிறிஸ்து நாதர் மாமிசமாக வருகிறார் என்று விசுவசித்து ஏற்றுக்கொள்ளாதவர்கள் தான் திவ்விய நற்கருணை தொட்ட கரங்களை கிருமிநாசினி(sanitizer)போட்டு கழுவுகிறார்கள்.
* சேசுகிறிஸ்து நாதர் மாமிசமாக வருகிறார் என்று விசுவசித்து ஏற்றுக்கொள்ளாதவர்கள் தான் பாவங்கீர்தனம் செய்யாமல் திவ்வியநற்கருணை உட்கொள்கிறார்கள்.
கிறீஸ்தவர்களே, பொய்த் தேவர்களை நாங்கள் ஆராதிப்பதாக எங்களைக் குற்றஞ்சாட்டுகிறீர்கள், ஆனால் குறைந்த பட்சம் அவர்கள் தெய்வங்கள் என்றாவது நாங்கள் நம்புகிறோம், அவர்களுக்கு சங்கை செய்கிறோம்; ஆனால் நீங்களோ , மெய்யங்கடவுள் என்று நீங்களே அழைக்கிற அவரை நிந்தித்துத் தள்ளுகிறீர்களே..
பூரண இரக்கமும், நன்மைத்தனமும் உள்ளவராகிய சர்வேசுரன் கிறிஸ்தவர்களின் பலிபீடங்களின் மீது வருகிறார் என்பதை வெது வெதுப்பும் அசட்டைத்தனமும் உள்ளவர்களாகிய கிறிஸ்தவர்கள் விசுவாசிப்பதில்லையா என்று தம் காலத்தைச் சேர்ந்த அஞ்ஞானிகளும், புறஜாதியாரும் அவர்களிடம் கேட்டதாக - அர்ச். அகுஸ்தீனார் கூறியது.
விசுவாசத்தின் சாட்சிகளாக இருங்கள்.உன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள உண்மையான விசுவாசத்தில் பாதுகாப்பாக இரு.மிக பரந்து கிடக்கும் தவறில் விழ வைக்கும் ஆபத்திலிருந்து உன்னை காத்துக்கொள்.எந்த தவற்றையும் ஏற்றுக்கொள்ளாதே உண்மையின் உருவின் கீழ் மறைந்து அவை வெளிப்பட்டால் அதன் முகத்திரையை கிழித்துவிடு.ஏனெனில் பிறகு அது ,அதை விட ஆபத்தாக மாறும்.இதற்க்காக உன்னை பழமையானவன் காலத்திற்கேற்ப வாழாதாவன் என்று தீர்ப்பிட்டால் அதற்காக அஞ்சாதே.ஏனெனில் இயேசுவைப் போன்று அவர் நற்செய்தியும் ஒன்றே நேற்றும் இன்றும் என்றென்றும்.
- தேவ மாதாவின் செய்தி
எனவே திவ்விய நற்கருணை பெற்றுக்கொள்ளும் பாரம்பரிய முறைக்கு திரும்புவோம்.ஒவ்வொரு ஆலயங்களிலும், திருதலங்களிலும் மாமிசமாக வரும் திவ்விய நற்கருணை ஆண்டவரை விசுவசித்து , நல்ல பாவசங்கீர்தனம் செய்து,முழங்காலில் நின்று நாவில் பெறுவோம்.நம்மை தேடி வரும் திவ்விய நற்கருணை ஆண்டவருக்கு உரிய உயரிய சங்கை மரியாதை செலுத்துவோம்.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச். சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment