புனிதர்களின் பொன்மொழிகள்
அர்ச். பிரான்சிஸ் அசிசியாரிடம் ஒரு நண்பர் ஒருநாள், “ தந்தையே அனைவரும் உம்மை புனிதர் என்று கூறுகின்றனர். ஆனால் நீர் உம்மை பெரும்பாவி என்று கூறுகின்றீர். இத்தனைக்கும் நீர் திருடர் அல்ல. கொலைகாரர் அல்ல. பெண்பித்தர் அல்ல. பின்பு ஏன் உம்மை நீர் பாவி என்று அழைக்கிறீர் ?” என்று கேட்டார். அதற்கு அசிசியார, “ நீர் கூறிய பாவிகளில் யாருக்காவது ஆண்டவர் எனக்குத் தந்த வரப்பிரசாதத்தை அளித்திருப்பாரானால் அவர் அந்த வரப்பிரசாதத்தை சிறப்பாக பயன்படுத்தி என்னைவிட அதிகமாக ஆண்டவருக்கு ஊழியம் புரிந்து ஆண்டவரது மாட்சியை என்னைவிட அதிகமாகப் போற்றி புகழ்ந்திருப்பார்” என்றார்.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment