தொழில் வெற்றிக்கான இரகசியம் - திருப்பலி

 


ஒரே தொழிலை செய்யும் இரண்டு நண்பர்கள் பிரான்சு தேசத்தில் ஒரே ஊரில் வாழ்ந்து வந்தனர்.இருவருள் ஒருவருடைய தொழில் மட்டுமே நல்ல வளர்ச்சியையும்,செழிப்பையும் கண்டது.மற்றொருவர் அதிகாலையில் எழுந்து கடின உழைப்பை மேற்கொண்டாலும் இலாபம் ஈட்ட முடியவில்லை.நட்டத்தையே அவர் சுவைக்க வேண்டியிருந்தது.

வாழ்வில் விரக்தி அடைந்த இந்த நபர் தொழிலில் வெற்றியை அடைந்த நண்பரிடம் அவருடைய வெற்றிக்கான இரகசியத்தைக் கேட்டார்.அதற்கு அந்த நபர் கூறியது.

அன்பு நண்பரே! வெற்றிக்கான எந்த இரகிசியமும் இல்லை, நீ உழைப்பது போலத்தான் நானும் உழைக்கிறேன்.நான் உன்னோடு வேறுபடுகிறேன் என்றால் ஒரே ஒரு காரியத்தில் மட்டும்தான்.

நான் தினமும் திருப்பலியில் பங்கேற்கிறேன்.நீ பங்கேற்ப்பதில்லை.ஆகவே என்னுடைய அன்பார்ந்த வேண்டுகொள் என்னவென்றால் நீயும் தினமும் திருப்பலியில் பங்குகொள்.கடவுள் உன்னையும் உன்னுடைய தொழிலையும் ஆசீர்வதிப்பார்." என்றார்.

அந்த நண்பரும் அவருடைய சொற்படி அனுதினமும் திருப்பலியில் பங்கேற்றார்.இறைவன் அந்த நபரையும்,அவருடைய தொழிலையும் நன்மைகளால் ஆசீர்வதித்தார்.

The wonders of the mass  என்ற புத்தகத்திலிருந்து.

திருப்பலி ஆன்ம உதவிகளை மட்டுமல்லாமல் சரீரத்திற்கு தேவையான உலக உதவிகளையும் பெற்றுத்தருகிறது.

சேசுவுக்கே புகழ்!.

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!