ஏன் நன்மை நாவில் வழங்கப்பட வேண்டும்

 


திருப்பலியில் ஒப்புக்கொடுக்கப்படாத சாதாரண கோதுமை அப்பமானது(Host) கருப்பு வண்ண கையுறைகளில்(gloves)  வைத்தபோது எண்ணற்ற சிறுதுகள்கள் கையுறைகளிலே இருப்பதை படத்தில் தெளிவாகக் காணலாம்.

இதேப் போலவே  திவ்விய நற்கருணை ஆண்டவரை நாம் கைகளில் பெறுவதினால் சிறு சிறு துகளாகிய ஆண்டவருடைய உயிருள்ள சதைகள்  நமக்கு தெரியாமலே நமது கரங்களில் கவனிப்பாரற்று விடப்படுகிறது.

நமது அலட்சியத்தினால் இன்று எத்தனை திவ்விய நற்கருணை ஆண்டவரின் சிறுச்சிறு உயிருள்ள சதைகள் விசுவாசிகளுக்கு தெரியாமலே கீழே விழுந்து நமது கால்களினாலும்,செருப்பாலும் மிதிக்கப்படுகின்றார்.

எத்தனை  திவ்விய நற்கருணை ஆண்டவரின் சிறுச்சிறு உயிருள்ள சதைகள் இன்று விசுவாசிகளின் கரங்களில் கிருமிநாசினியால்(sanitizer) கழுவப்படுத்துகிறது.


நீங்கள் பலிபீடத்தின் முன் மண்டியிடும்போது, ​​​​நீங்கள் யார் முன் மண்டியிடுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்பதை மற்றவர்கள் அடையாளம் காணும் வகையில் செய்யுங்கள் என அர்ச்.மாக்ஸ்மில்லியன் கோல்பே கூறுகிறார். 

இன்றோ திவ்விய நற்கருணை ஆண்டவரை தான், நாம் பெறுகிறோம் என்பதை  மற்றவர்களும் அடையாளம் காணும் வகையில் நாம் பெற்றுக்கொள்கின்றோமா? அல்லது எல்லாக் கோவில்களிலும் வாங்கும் ஒரு சாதாரண பிரசாதத்தை தான் இவர்களும் வாங்கிக் கொள்கிறார்கள் என்று மற்றவர்கள் அடையாளம் காணும் வகையில் பெற்றுக்கொள்கிறோமா ? என்று சற்று நம்மை நாமே சுயபரிசோதனை செய்வது இன்று மிக  அவசியமாக இருக்கிறது.

"என் தசையைத்தின்று,என் இரத்தத்தை குடிப்பவன் முடிவில்லா வாழ்வைப் கொண்டுள்ளான்.நானும் அவனை கடைசி நாளில் உயிரப்பிப்பேன்.

என் தசை மெய்யான உணவு,என் இரத்தம் மெய்யான பானம்.என் தசையை தின்று, என் இரத்தத்தை குடிப்பவன் என்னில் நிலைத்திருக்கிறான்.நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்.

உயிருள்ள தந்தை என்னை அனுப்பினார்.நானும் அவரால் வாழ்கிறேன்.அதுபோல என்னைத் திண்பவனும் என்னால் வாழ்வான்.

யோவான் 6 (54-57).

நாம் திண்பது அவருடை திருஇரத்தம்,திரு உடல் என்று விசுவப்பது உண்மையானால் அவரை பெறும்போதும் பெற்றுப்பின்னும் நமது வாழ்வில் யாருக்கும் கொடுக்க முடியாத உயரிய சங்கை மரியாதை அந்நேரத்தில் நமது ஆண்டவருக்கு கொடுக்கவேண்டியது நமது கடமை.பாவத்தை தவிர்ப்பது மட்டுமல்ல , திவ்விய நற்கருணை ஆண்டவரை அவசங்கைப்படுத்த வாயப்பிருக்கும் முறைகளில் இருந்தும் நம்மையும் நமது குடும்ப உறுப்பினர்களையும் தற்காத்துக்கொள்வதும் நமது தலையாயக் கடமை. எனவே அப்போஸ்தலர்கள் எவ்வாறு திவ்விய நற்கருணையைப் திண்ணார்களோ? புனிதர்கள் எந்த முறையில் திவ்விய நற்கருணை ஆண்டவரைப் திண்ணார்களோ ? அதேப்போல பாரம்பரிய முறைப்படி மிகத்தாழ்ச்சியோடு நீசப்பாவிகளாகிய நாமும் முழங்காலில் இருந்து நாவில் பெறுவோம் .


சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்க வேண்டிக்கொள்ளும்.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!