ஏன் நன்மை நாவில் வழங்கப்பட வேண்டும்
தந்தையின் கரங்களிலிருந்து கடவுளின் குமாரனை நேரடியாகப் பெறுவதற்கு உலகம் தகுதியற்றதாக இருந்ததால், அவர் தனது மகனை மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவிடம் கொடுத்தார்." -புனித அகஸ்டின்.
அதேப்போல திவ்விய நற்கருணை ஆண்டவரை நேரடியாகப் பெறுவதற்கு நாம் தகுதியற்று இருப்பதால், ஆண்டவர் தமது திருஉடலையும்,திரு இரத்தத்தையும் அபிஷேகம் செய்யப்பட்ட குருக்களிடம் ஒப்படைத்தார்.
தகுதியற்ற பாவிகளாகிய நாம் இன்று நேரடியாக நமது கரங்களால் தொட்டு உட்க்கொள்ளும் தகுதியை, குருக்களுக்கு இணையான பரிசுத்தத்தை, அபிஷேகம் செய்யப்படாத நமதுக்கரங்கள் எப்போது எப்படிப் பெற்றது ?
திவ்விய நற்கருணை உயிருள்ள ஆண்டவர் எனபதை முழுமையாக விசவசிக்காமல் , அவர் பரிசுத்தர் நாம் அசுத்தமானவர்கள் என்பதை உணராமல், தனது உணவினைக்கூட ஒரு போதும் இடது கையில் பெற்று உண்ணாதவர்கள், இன்று பரிசுத்த திவ்விய நற்கருணை ஆண்டவரை இடது கரத்தில் பெற்று உண்ணுவதால் எப்பேறபட்ட அவசங்கையை திவ்விய நற்கருணை ஆண்டவருக்கு தந்துக்கொண்டிருக்கிறோம்.
புதிய, நவீன முறையில் திவ்விய நற்கருணை ஆண்டவரை நேரடியாக கரங்களில் பெறுவது மிகவும் அபாயமானது ஏனெனில் இது கிறிஸ்துவை, அற்பமானவராக மிகபெரிய அளவில் அம்பலப்படுத்தப்படுகிறது.
ஆயர் .அத்தனாசியஸ் ஸ்னைடர்
திரிதெந்தன் பொதுச்சங்கம் (1545-1565): "குருக்கள் மட்டுமே தனது புனிதமான கரங்களால் திவ்விய நற்கருணை வழங்குவது என்பது ஒரு அப்போஸ்தலிக்க பாரம்பரியம்."
கடவுளின் சட்டங்களின் சிறிய மீறல் கூட கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்."
அர்ச்.பியோ.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment