புனிதர்களின் பொன்மொழிகள்
தீமையை நன்மையால் மட்டுமே வெல்ல முடியும்.ஒரு தீமையை இன்னொரு தீமையால் வெற்றிப்பெற முடியாது.நன்மை செய்வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்யபடும் ஒரு தீமையும் அதைவிட அதிகமான கேடு விளைவிக்கும்.
ஒருவன் எனக்கு தீமை செய்யும் போது நான் பதிலுக்கு எந்த மறுதீமையும் செய்யாத போது நான் கெட்டவனாக மாறிவிடுவதில்லை.எனக்கு தீமை செய்பவனே கெட்டவனாகிறான்.
அதேசமயம் எனக்கு தீமை செய்பவனை நான் தடுக்கப்போகிறேன்.தண்டிக்கப்போகிறேன் என்று கெட்ட வார்த்தைகள்,கெட்ட செயல்களில் ஈடுபடும்போது தான் சமாதானம் ஏற்படாமல், நானும் அவனைப்போலவே கெட்டவனாகிறேன்.இதனாலேயே இன்று குடும்பங்ளிலும் , சமுதாயத்திலும் பிரிவினைகள் அதிகமாகின்றன.
தீமை செய்பவனால் துன்பப்படும்போதும் அவனுக்கு மறுத்தீமை செய்யாமல் அவனை மன்னித்து அவன் நல்வழி வருவதறக்காக செபிக்கும் ஆன்மாக்கள், தனது மகன் இயேசுவின் சாயலை பிரிதிபளிப்பதைக் கண்டு பிதாவாகிய சர்வேசுரன் மகிழ்கிறார்.
அர்ச.இராபரட் பெல்லார்மின்.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment